கரூரில் விஜய் மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்த போதே தவறான முடிவு – மக்கள் அதிகாரம் மீடியா .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பாக ஒருவருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க உத்தரவு வழங்கி அதற்கான அரசாணையும் பிறப்பித்தார். அப்போதே எமது பத்திரிகை செய்தியில் இது தவறான முடிவு என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

மேலும்,இப்பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை கூட செல்ல வாய்ப்புள்ளது என்று கூட தெரிவித்து இருந்தோம்.தவிர, தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசாணையை ரத்து செய்துள்ளது. இதில் நீதிமன்றம் மயிரிழையில் தீர்ப்பில் தப்பித்து இருக்கிறது. முதலில் தற்காலிக பணி நியமனம் என்று அரசாணை வழங்கினார்கள். என்னவோ பிறகு இந்த அரசாணையை ரத்து செய்து விட்டார்கள்.

மேலும்,இந்த அரசாணை செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால், இதுபோல் எத்தனை உயிரிழப்பு அசம்பாவிதங்கள் நடந்தாலும், அந்தக் குடும்பத்திற்கு எல்லாம் இந்த தீர்ப்பைக் காட்டி ,வேலைவாய்ப்பை ஏற்படுத்த நீதிமன்றம் சென்று விடுவார்கள்.

இது ஒரு புறம் இருக்க, வண்டி பின்னால் சென்று இன்னும் 9 பேர் உயிரிழப்பு குறித்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதற்கும் வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்றால் ,இது மாணவர்கள் மத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், முதல்வர் விஜய் அந்த குடும்பங்களுக்கு அவர் தனியார் நிறுவனங்களில் ,அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம் .தவறில்லை. ஆனால் ,அரசு வேலை என்று சொல்லும் போது, படித்து அதற்கான தகுதி தேர்வு எழுதி, வெற்றி பெற்று வருவதற்குள், அவர்கள் போராடக் கூடிய போராட்டம் என்பது உண்மையிலே வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு போராடி தான் அரசு துறையில் பணிக்கு வருகிறார்கள்.

அவர்கள் எல்லாம் நிச்சயம் வேதனைப்படுவார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயம் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *