அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து,தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வர சட்டம்(FCRA) (foreign currency regulation act ) Bill – 2026 கடுமையாக்கப்படுகிறதா? – மத்திய அரசு.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

இந்தியாவின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புள்ளிகள் ஊழல் பணம் மற்றும் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு, பிறகு தொண்டு நிறுவனங்கள் மூலம், அந்த பணத்தை உதவி வழங்குவது போல கணக்கு காட்டி ,கொண்டு வருவது, இந்திய சட்டத்தை ஏமாற்றும் ரகசிய வேலை.

அடுத்தது ,இதே பணத்தை அங்கே கம்பெனிகளில் முதலீடு செய்வது ,சொத்துக்கள் வாங்கி போடுவது, பிறகு அங்குள்ள நபர்களைப் பிடித்து, அதில் வரக்கூடிய வருமானத்தையோ அல்லது இதே போன்ற கருப்பு பணத்தையும் தொண்டு நிறுவனங்கள் சமூக சேவை அமைப்புகள் அனுப்பி வைப்பது இதன் மூலம் இந்தியாவுக்கு இந்த நிதியால் சட்ட விரோத பண பரிமாற்றம் பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. இதில் கடுமையான சட்ட விதிகளை கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இது தவிர, இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது, அரசியல் சூழ்ச்சி செய்து காக்ரோச் போன்ற அமைப்புகள் மூலம் மக்களிடையே குழப்பத்தை விளைவிப்பது, இதற்கெல்லாம் அந்நிய சக்திகளின் பணம் இந்த தொண்டு நிறுவனங்கள் மூலம் கைமாறுகிறது.

இதை தடுப்பதற்கு இந்த சட்டம் கொண்டு வந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும், நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் இந்தியாவுக்குள் மதமாற்றங்கள், அன்னிய சக்திகளின் தலையீடுகள், தேசவிரோத சக்திகளின் தலையீடுகள் ,எல்லாம் குறைக்கப்பட்டு விடும். ஆக கூடி இதற்கெல்லாம் ஒரு செக் வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

மேலும் ,தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருவது தான், இவர்கள் பின்னால் தேசவிரோத சக்திகள் இருக்கிறார்களா? என்ற கேள்வி நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.

தவிர,இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால், அதிக வெளிப்படைத்தன்மை, வெளிநாட்டு நிதி பெறுவதில் இருக்கும். மேலும் இது தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பில் வலுவான கட்டமைப்பை இது உருவாக்கம்.

இருப்பினும், இதற்கு நாட்டில் தொடர்ந்து என். ஜி. ஓ அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகள், தீவிரவாத சம்பந்தமான அமைப்புகள், நாட்டுக்கு எதிரான வன்முறை கூட்டங்கள், இயக்கங்கள், தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும்,இதில் சிறுபான்மை என்று சொல்லிக்கொண்டு, வெளிநாட்டு நிதியை இந்தியாவில் பெரும்பாலும் இந்துக்களுக்கு எதிராக போராடக்கூடிய ஒரு வலிமையை இவர்கள் இதன் மூலம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, முஸ்லிம்கள் , வக்ஃப் வாரிய சொத்துக்கள், மோசடி சட்ட திருத்தம், அதேபோல்,அரசு நிலங்களில் சர்ச் மற்றும் மசூதிகள் கட்டுவது இதை அத்தனைக்கும், இந்த சட்டம் கடுமையான சட்ட விதிகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்திய மக்களின் எதிர்பார்ப்பு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *