
மாணவர்கள் நீட் தேர்வு மட்டுமே வைத்து, மோடி அரசுக்கு எதிராக திசை திருப்பும் ,எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் மாணவர்களின் எதிர்காலத்தையும், இந்த தேசத்தின் எதிர்காலத்தையும் ,சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள்.
மேலும்,நாட்டில் தற்போது சமூக வலைதளமும், இணையதளமும் மாணவர்களை போராடத் தூண்டும் கருவியாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துகிறார்கள் . வீடியோ போடுவது, அதில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது, ஏதோ இந்த மாணவர்களுக்காக இவர்கள் தியாகம் செய்ய வந்தவர்கள் போல் பேசுவது, இது எல்லாம் ஒரு நடிப்பு அரசியல்! என்பதை மாணவர்கள் புரிந்து கொள்வார்களா?

ஏனென்றால் மாணவப் பருவம் அறியாத பருவம், அதாவது எது நல்லது எது ?கெட்டது எது ?என்பதை சிந்திக்க ,தெரியாமல் ,youtube களில் வருவது பேசுவது, எல்லாம் உண்மை என்று நம்பி ஏமாறக்கூடிய எவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்கள் ?
மேலும் ,அவர்களை மூலச் செலவு செய்வது மிக, மிக எளிது. அப்படிப்பட்ட மாணவர்களை தான் அவர்கள் தேர்வு செய்கிறார்கள். அறிவுள்ள மாணவன் ,இவர்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா? நியாயம் இருக்கிறதா? உண்மை இருக்கிறதா? என்று சிந்திப்பான்.

மேலும்,காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எவ்வளவு பெரிய ஊழல்கள் நடந்தது? மக்களுக்கு எதிரான போராட்டங்கள் ?வன்முறைகள் எவ்வளவு ?நடைபெற்றது. மாணவர்களுக்காக அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? அவர்கள் காலத்தில் இதே வினாத்தாள் கசிவு ஏற்படவில்லையா?

இப்போது இந்த மாணவர்களை வைத்து ஆட்சிக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவது, அதுவும் வெளிநாட்டு சக்திகளோடு இணைந்து ,இந்தியாவுக்கு எதிராக சதி செய்வது, இதையெல்லாம் முறியடிக்கும் வகையில் மாணவர்கள் உஷாராக, உங்கள் எதிர்கால நலனையும் ,இந்த தேச நலத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறீர்கள்.

அதனால் ,அரசியல் கட்சிகளின் பொய்களை நம்பி உண்மை என்று ஏமாறாதீர்கள். நாட்டில் நூற்றுக்கு 99% அரசியல் கட்சிகள், பொய்களை சொல்லி தான், மக்களிடம் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சதவீதம் தான், மக்களிடம் உண்மையை பேசுகிறார்கள்.
மேலும்,இவர்களுடைய பேச்சுக்கும் . செயல்பாட்டுக்கும் ,சம்பந்தமே இருக்காது. இது கடந்த திமுக ஆட்சியில்! நிரூபிக்கப்பட்ட உண்மை
அதிமுக ஆட்சியில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த அரசியல் நிகழ்வுகள், அவர்களுடைய பேச்சுக்கள் இதையெல்லாம் எடுத்து அரசியலைப் படிக்கக்கூடிய மாணவர்கள் புரட்டிப் பாருங்கள்

மேலும் நான் சொல்வது உண்மையா? பொய்யா? என்பது உங்களுக்கே புரியும். அதனால், மாணவர்கள் எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகாமல், யார் போராட்டம் நடத்துகிறார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? எதற்காக இவர்கள் போராட்டம் நடத்த வேண்டும் ?
மேலும்,கோரிக்கைகள் மத்திய அரசு ,நிறைவேற்றி விட்டது. பிறகு எதற்காக ?இவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்? இது என்ன அரசியல் கட்சியா ?இல்லை அப்படி இருக்கும்போது, எதற்காக அரசியல் அதிலே உள்ளே வருகிறது ?மாணவர்களுடைய கோரிக்கை .
தவிர ,வேறு எதற்காக அரசியல் அதிலே உள்ளே வருகிறது? இதுதான் எங்களை போன்ற பத்திரிகைகளின் முக்கிய கேள்வி ?அதனால் இது, தேச விரோத சக்தி என்பதை மாணவர்கள் புரிந்து கொள்வார்களா?
எனவே மாணவர்கள் உங்களுடைய எதிர்காலத்தையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் வாழ்க்கை கனவுகளின் லட்சியத்தில் வெற்றி ,பெற எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு பலிகடா ஆகாதீர்கள் .
