
நாட்டில் இயற்கை வளங்கள் இல்லாமல் மனித உயிர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியாது. காடுகள் மற்றும் இயற்கை வளங்களில் இருந்து தான், உயிரினங்களுக்கும், மனித வாழ்க்கைக்கும் ,தேவையான ஆக்சிஜன் உருவாக்கி தருகிறது.
இந்த அறிவு கூட இல்லாத அதிமுக, திமுக ஆட்சியில் இவர்களுடைய சாதனைகளை சொல்வது அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றும் வேலை. மேலும், எத்தனையோ காடுகளை அழித்திருக்கிறார்கள். மலைகளை அழைத்து இருக்கிறார்கள்.

மேலும் ,ஓ .பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு மலைகளை அழித்து, விற்பனை செய்து பிறகு, அந்த இடத்தை நிலமாக்கி பட்டா போட்டு விட்டதை நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் ,வழக்கு நடந்தது .

இதனால் ,அரசின் கனிம வளத்துறை அதிகாரிகள் தான் வேலையை இழந்தார்கள். இவருக்கு எந்த தண்டனையும் கொடுக்கவில்லை நீதிமன்றம். இப்படிப்பட்ட நீதிமன்றம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், அதிகாரிகளுக்கு ஒரு சட்டம், இந்தியாவில் இதை மாற்றாமல் ஊழலை ஒழிக்க முடியாது.

மேலும், திமுக ஆட்சியில்! சென்னை சுற்றியுள்ள ஏரி ,குளங்கள், ஆக்கிரமித்து மக்கள் செய்து வீடு கட்டிக் கொண்டார்கள். இதற்கு உதாரணம் கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி . மேலும்,திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், இருந்த பொதுப்பணித்துறை வரை படத்தின் அளவுகள் எவ்வளவு?ஆட்சிக்கு வந்த பின் பொதுப்பணி துறை வரை படத்தின் அளவீடுகள் குறைந்துள்ளது?
மேலும், இந்த உண்மைகள் யாருக்கு தெரியும்? என்றால் அந்தத் துறையில் பணியாற்றக்கூடிய அனுபவம் தற்போது நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு தெரியும் . தவிர, விஷயம் தெரிந்த அரசியல்வாதிகளுக்கு தெரியும். பொது மக்களுக்கு இந்த உண்மை தெரியாது.

பத்திரிகைகள் சொன்னால் தானே தெரியப்போகிறது. இப்படியெல்லாம் ஊழல் செய்து சொத்துக்களை குவித்த இவர்களுடைய ஆட்சியின் அவலங்கள், மக்கள் வெறுத்து ஒதுக்கி தான் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள். மேலும்,

இப்போதும் கூட, இவர்கள் தங்களை உத்தமர்களாக இவர்களே பேசிக்கொள்கிறார்கள். மக்கள் பேசவில்லை என்றாலும், மக்களிடம் நாங்கள் உத்தமர்கள், உத்தமர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதை செய்தி என்று செய்திக்கு அர்த்தம் தெரியாத பத்திரிகை, தொலைக்காட்சிகள் ,சொல்லிக் கண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. செய்தி துறை அதிகாரிகள்! இதுவும் செய்தி என்று ஏற்றுக் கொள்கிறார்களா? மேலும்,

இதற்கு காரணம் மக்களுக்கு அரசியல் தெரியாது. பத்திரிக்கைகளுக்கு அர்த்தம் தெரியாது. பத்திரிகைகள் நாம் சொல்வது தான், பத்திரிக்கை .அதனால், இந்த மக்களை இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும், ஏமாற்றிக் கொண்டிருக்கலாம். இவர்களுடைய கனவு இனி நிறைவேறாது.

மேலும், அமைச்சர் பிரபு !கனிமவளத் துறையில் ,எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை ஏக்கர்? பரப்பளவில் மலைகளும், குன்றுகளும், காணாமல் போனது பற்றி அவரே சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் பெரம்பலூர் மாவட்டம், கோவை மாவட்டம், தேனி மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம் ,மதுரை மாவட்டம், இப்படி பல்வேறு மாவட்டங்களில் மலைகளும், குன்றுகளும்,காணாமல் போனது, ஒரு அவுட்லைன் தான் என்று சொல்லி இருக்கிறார். மேலும்,
முழுமையான விவரம் மக்களுக்கு இன்னும் தெரியாது. இப்படியெல்லாம் இயற்கை வளங்களை அழித்த அதிமுக திமுக ஆட்சியில்! இயற்கை இவர்களை அழிக்கும் என்பது உறுதி. அதுமட்டுமல்ல,
மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தில்! எத்தனையோ முறை மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்துவிடும் .
என்ற கட்டுரைகள் மூலம் சொன்ன உண்மைகள் இவர்களுக்கு என்ன ஏறப் போகிறது? பதவி போதை! அதிகார போதை! கண்ணை மறைக்கும் போது, உண்மைகள் அவையெல்லாம் போன பிறகு ஆவது இவர்களுக்கு புரியுமா?
