
மனிதர்கள் இயற்கையின் சமநிலையை தொடர்ந்து சீர்குலைத்த தன் விளைவாக, இயற்கை அமைப்புகள் மனித வாழ்வுக்கு , எதிராக கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன .
காடுகள் அழிப்பு – மரங்கள் குறைவதால் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், வெப்பநிலை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது.
மலைகள் மற்றும் கனிமவளச் சுரண்டல் – மலைகளை வெட்டுதல், குவாரிகள் போன்றவை நிலச்சரிவு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் பாதிப்பை அதிகரிக்கலாம்.
ஏரி, குளம், ஆறு ஆக்கிரமிப்பு – இயற்கையான நீர்வழிகள் மறைக்கப்படும்போது, கனமழை நேரத்தில் வெள்ளப்பாதிப்பு அதிகரிக்கும்.

காலநிலை மாற்றம் – பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால், உலக வெப்பநிலை உயர்ந்து, கடுமையான வெப்பம், கனமழை, வறட்சி போன்ற தீவிர நிகழ்வுகளின் அபாயம் அதிகரிக்கிறது.மேலும்,
காற்று, நீர், மண் மாசுபாடு – தொழிற்சாலை கழிவுகள், வாகனப் புகை, பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதிக்கின்றன.
நகரமயமாக்கல் – இயற்கை நிலப்பரப்புகளை முழுமையாக கான்கிரீட்டாக மாற்றுவது வெப்பத்தையும் மழைநீர் தேக்கத்தையும் அதிகரிக்கிறது.
“இயற்கை மனிதனுக்கு எதிராக போராடத் தொடங்கவில்லை; மனிதன் இயற்கைக்கு எதிராக நடத்திய போரின் விளைவுகள், இப்போது மனித வாழ்க்கைக்கே, அது திரும்பி உள்ளது. மக்கள் அதிகாரத்தில் இது பற்றி பலமுறை அரசுக்கும் பொதுமக்களுக்கும் இந்த கட்டுரைகள் மூலம் செய்திகள் வெளியிட்டுள்ளன. இயற்கையை மனிதன் அழித்தால் மனிதனை இயற்கை அழித்து விடும்.

இது எல்லாம் கடந்த திமுக, அதிமுக ஆட்சியில் !இயற்கையை அழித்து தங்களை பலப்படுத்திக் கொண்ட ஒரு கூட்டம் தான் இவர்கள் ! இவர்களுக்கு வாக்களித்ததால், இயற்கையின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. அவ்வப்போது தமிழக மக்களும், வெள்ளம், புயல் போன்றவற்றால் ,அனுபவிக்கிறார்கள். சில பேர் பட்டாலும் ,திருந்த மாட்டார்கள் என்று சொல்வார்கள் .அது போல் தான் இருக்கிறார்கள்.
இந்த மக்கள் இன்னும் திருந்தவில்லை என்றால், இயற்கையின் தண்டனையிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. நேபாளத்தில் நடந்தது, இந்தோனேசியாவில் நடந்தது, ஐரோப்பாவில் நடந்தது ,உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த வரலாற்று உண்மைகளை பார்த்தால் ஆவது ,திருந்துவார்கள்?

மேலும்,இனியாவது மத்திய மாநில அரசின் செயல்பாடுகள் ,இயற்கைக்கு எதிராக இல்லாமல், இயற்கையோடு இணைந்து, இயற்கையை வாழ வைத்து வாழ்ந்தால் மட்டுமே, மனித வாழ்க்கை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், எதிர்கால சந்ததிகள் நல்ல முறையில் வாழ முடியும்.இல்லையென்றால்! அவர்கள் !
உணவுக்காக போராட்டம், உயிர் வாழ்வதற்காக போராட்டம், நோயுடன் போராட்டம், உறவுகளுடன் போராட்டம், சுற்றுச்சூழலுடன் போராட்டம், ,இயற்கையுடன் போராட்டம், இப்படி மனித வாழ்க்கையின் வரலாறு! நாளை எப்படி இருக்க போகிறது ….? இதை இளைஞர்கள் சிந்திப்பார்களா……? தவிர,மத்திய மாநில அரசின் ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?
