
ஒருவர் பேசினார் ,செய்தார் என்பதற்காக, ஒரு நாட்டின் ஆட்சியை கவிழ்க்க முடியுமா?
சட்டத்தில் அவ்வளவு ஓட்டையா இருக்கிறது? அப்படி பார்த்தால், ஒருவர் கூட ஆட்சி செய்ய முடியாது. மேலும்,வைகோ சொன்னார் என்று முதல்வர் விஜய், இரண்டு எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொன்னார்.

இதற்கு யார் சாட்சி? எங்கே ஆதாரம்? ஆனால் ,பத்திரிகைகள் ஒருவர் சொல்லி விட்டார் என்று உண்மை தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தால், அது பத்திரிக்கை என்று சொல்வதற்கு தகுதி இல்லை.
மேலும், இவர்களுக்கு ஒரு ஆட்சி கவிழ வேண்டும் என்பதில் என்ன அக்கறை ? இல்லை ,எதிர்கட்சிகளுக்கு அக்கறையா? அரசியல் கட்சியினர் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள், எப்படியும் பேசுவார்கள், கூலிக்கு எழுதுபவர்கள் எப்படியும் எழுதிவிட்டு போகலாம்.

இருப்பினும் அப்படியெல்லாம் எழுதி மக்களையும் முட்டாளாக்கி விடலாம் என்று நினைத்தால், முட்டாளாக இவர்கள்தான் ஏமாந்து போவார்கள். எனவே சட்டம் அவ்வளவு எளிதில் இடம் கொடுக்காது. மேலும்,சட்டத்தை புரட்டாமல் , எழுதுவது ,பத்திரிகை அறிவு மிக, மிக குறைவு தான் என்று மக்கள் முடிவு செய்வார்கள்.
