தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றாக்குறையாக இருக்கின்ற காரணத்தினால் தற்போது புதிய தலைமைச் செயலகம் தேவைதானா? – பொதுமக்கள் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்றத்திலே புதிய தலைமைச் செயலக கட்டிடம் அமைக்க ரூபாய் 1200 கோடியில், 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான தலைமைச் செயலக புதிய கட்டிடம் அமைக்க அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு !மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது, மேலும்,தமிழக அரசு! ஏற்கனவே, குறிப்பிடத்தக்க கடன் சுமையை எதிர்கொண்டு வருகிறது. அந்தக் கடன்களுக்கு ஆண்டுதோறும் வட்டி செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது. மறுபுறம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர், சாலை, விவசாயம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குக் கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

அதிலும் தமிழக முதல்வர் விஜய் அறிவித்த இலவச திட்டங்கள் ,சரியான முறையில் கொடுத்தால் தமிழ்நாட்டின் வருவாயின் பத்தாது அதற்கு மேல் ,பல லட்சம் கோடி கடன் வாங்கினாலும், அதை நிறைவேற்ற முடியாது.

மேலும்,இலவசம் என்பது யாருக்கு தேவையோ ,அவர்களுக்கு மட்டும்தான் இலவசம். இலவசத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டு ,அவர்களை உழைக்காமல், சோம்பேறியாக்கும் வேலையை அரசாங்கம் செய்யக்கூடாது.

இலவசம் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு, வயது முதிர்ந்தவர்களுக்கு, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இவர்களுக்கு தான் இலவசம் இருக்க வேண்டும். மேலும்,

உழைப்பவர்களை ஊக்கு வித்து வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் .அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை நாட்டில் உருவாக்க வேண்டும்.

இது தவிர ,விவசாயத்திற்கு ,விவசாய பெருமக்களுக்கு, கூலி தொழிலாளர்களுக்கு ,இவர்களுக்கு எல்லாம் எந்தெந்த வகையில் சலுகைகளை கொடுக்க முடியும் ?அதை கொடுத்து ஊக்கு விக்க வேண்டும்.

அதை விடுத்து எந்த ஒரு கட்சி புதியதாக ஆட்சிக்கு வந்தாலும் ,அந்தந்த முதல் அமைச்சர்களிடம் ஜோதிடர்கள், இந்த கட்டிடம் வேண்டாம், அந்த கட்டிடம் போங்கள், அது வாஸ்து சரி இல்லை .இது வாஸ்து சரி இல்லை. இப்படி எல்லாம் அவர்களுக்கு ஏதாவது ஒன்று சொல்லி இவர்கள் மக்களின் வரிப்பணத்தை தேவையில்லாமல் வீணடிப்பது ஏன்?

இதேபோல்தான், கருணாநிதி ஆள் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அண்ணா சாலையில் இன்று மருத்துவமனையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை வேலைவாய்ப்பு உருவாக்கும் ஒரு நிறுவனமாக அமைத்தால் அதனால் லட்சக்கணக்கான பேர் பயன் அடைவார்கள்

மேலும்,இந்த 1200 கோடியில் ஒரு வேலை வாய்ப்பு தரக்கூடிய நிறுவனத்தை உருவாக்கினால் அதனால் வருமானமும் வரும், ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பும், உருவாகும்.

அதை விட்டு,விட்டு எல்லாம் நன்றாக இருக்கின்ற கட்டிடங்களுக்கு ,என்ன குறை? இதுவும் கடலை பார்த்துக் கொண்டு தானே இந்த தலைமைச் செயலக கட்டிடமும் இருக்கிறது.

ஜோதிடர்கள் கூறுகின்ற அறிவுரை, முதல்வர் விஜய் கடலை பார்த்தவாறு இருக்க வேண்டும் என்று அவருடைய அலுவலகத்தை அதாவது மாடியில் கொண்டு சென்று விட்டார்கள். தவறில்லை, வைத்துக் கொள்ளட்டும் .அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.

ஆனால், மக்கள் என்ன பேசுகிறார்கள்? என்றால் ,கடலுக்கு அருகிலே இருக்க வேண்டும் என்றால், கடலுக்குள்ளே தலைமைச் செயலகம் வைக்க வேண்டியதுதான் என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

புதிய கட்டிடங்கள் வேண்டாம் என்று மக்கள் கூறவில்லை. முதலில் மக்கள் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். வரிப்பணத்தின் ஒவ்வொரு ரூபாயும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செலவிடப்பட வேண்டும்.

அதனால், ஒவ்வொரு ஜோசியரும் ஒன்றை சொல்லிக் கொண்டுதான் ,இருப்பார்கள். அவர்கள் சொல்வது போல் வாழ முடியாது. அவர்களே வாழ முடியாது. மகான்கள் சொல்வது மட்டும் தான் 100% சரியாக இருக்கும்.இவர்களால் 100% சொல்ல முடியாது. என்பதை தமிழக முதல்வர் விஜய் புரிந்து கொண்டால் சரி.

மக்கள் அதிகாரத்தின் — மக்கள் பணத்திற்கு …! மக்கள் கணக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *