மனித வாழ்க்கை! பணத்தால்! தீர்மானிக்கும் போது, அரசியல் தோல்வி! பத்திரிக்கை தோல்வி! ஆன்மீகம் தோல்வி! வாழ்க்கை தோல்வி!- பணம் இல்லாமல் இதையெல்லாம் ஜெயிக்க முடியுமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

பணத்தால் ! வாழ்க்கையை தீர்மானிப்பவர்கள் இறுதியில் தோல்விதான். பணம் தேவை !என்று வாழ்பவர்கள் தான் !வெற்றி பெற முடியும் . மேலும்,

ஒருவனிடம் பணம், பொருள் , அதிகாரம்,அதிகமாக கொடுத்தவர்களிடம், சந்தோஷத்தை இழந்து விட்டார்களா? ஏன்?

சந்தோஷமும் ,துக்கமும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளே தான் இருக்கிறது. அறிவாளிகள் அதை தனக்குள்ளே அனுபவிக்கிறார்கள். இந்த உடல் தான் பிரதானமாக இருப்பவர்கள் ,வெளி வேஷத்தில், பிறரிடம் காட்டிக் கொள்வதில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இதை புரிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு அறிவு வேண்டும். பிறப்பின் நோக்கமே கர்மாவை அனுபவிப்பது .அது நல்லதோ, கெட்டதோ அதை அனுபவித்து விட்டு செல்வதுதான், இங்கே வாழ்க்கை. அது வாழும் காலம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

இதில் சில பேருக்கு நினைத்தபடி வேலை கிடைத்து விடுகிறது .அதிகாரம் வந்து வடுகிறது .அரசியல் செல்வாக்கு வந்துவிடுகிறது. பணம் ,பொருள் ,சொத்துக்கள் எல்லாம் வந்து விடுகிறது. இருப்பினும், சந்தோஷம், நிம்மதி எங்கே? என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்?

எந்த பணத்திற்கும் ,பொருளுக்கும் அலைந்து ,அலைந்து தி மு க மந்திரிகளும் ,எம்எல்ஏக்களும், சொத்து சேர்த்தார்களோ அதை அனுபவிக்க முடியாமல், இன்று வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை ஏமாற்றலாம். கடவுளை ஏமாற்ற முடியுமா?

கடவுளின் தண்டனை! இவர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த பிறவியில் உங்கள் கணக்கு இவை எல்லாம் வட்டியுடன் அனுபவிக்க பிறவி தயாராகி விட்டது. அப்போது தெரியும் அந்த வலிகள்.

மேலும், நீங்கள் பாடையில் செல்லும்போது கூட ,இவன் கொள்ளையடித்து ஊரெல்லாம் சொத்து வாங்கி போட்டுள்ளான் என்று அப்போதும் 10 பேர் பேசுவான். போகும்போதாவது உங்களுக்கு கவுரவம் இருக்கிறதா? அது மட்டுமல்ல,

உண்மையான சந்தோஷம் மனதிற்குள் இருக்கிறது. எந்த மக்களிடம் இவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்களோ, அந்த மக்களே இவர்கள் கொள்ளை அடிப்பவர்களா? என்று பட்டம் வாங்கிக் கொண்டார்கள்.

மேலும், எந்த நேரத்தில் இந்த ஊழல்!சொத்து மீது எந்த ரெய்டு வருமோ? என்று பயந்து, பயந்து ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும். தவிர, சேர்த்த சொத்தை,அனுபவிக்க முடியாமல், போய் சேர வேண்டியதுதான்.மேலும், எந்த அளவுக்கு தங்களை மக்களிடம் உயர்ந்தவர்களாக, பெரிய ஆளாக காட்ட வேண்டும் என்று நினைத்தார்களோ ,

அதைவிட மோசமான சிறிய ஆளாக இன்று காலம்! அவர்களை அதே மக்களிடம் கொண்டு வந்து, சேர்த்து விட்டது . இதற்கு காரணம் என்ன? செய்த வினை! தவறான அரசியல் செய்து விட்டு, நிம்மதியும், சந்தோஷமும் ஊழல் பணத்தில் வாழ முடியாது என்பதற்கு இவர்களே ஒரு உதாரணம். மேலும்,

அதேபோல் , அதிமுகவில் உச்ச அதிகாரத்தில் ஊழல் செய்து ,சொத்து சேர்த்த சசிகலா ஒரு உதாரணம். இது தவிர,அதிமுகவில் எத்தனையோ எம்எல்ஏ ,மந்திரிகள், அவர்கள் ஒரு உதாரணம். ஏனென்றால் மக்களுக்கு இவர்கள் தான் வெளிப்படையாக ஊழல் செய்து கொள்ளையடித்தவர்கள் என்று, இன்று அரசியல் தெரிந்தவர்கள் இவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

இதையெல்லாம் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள், மக்களிடம் இவர்களை ஊழல்வாதிகள் என்றே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது தவிர,

நாட்டில் போலி சாமியார்கள்! பல லட்சம் கோடி சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொண்டு, என்ன செய்யப் போகிறார்கள்? எவ்வளவு சாப்பிட போகிறார்கள்? இந்த அரசியல்வாதிகள், சாமியார்கள்,

அதேபோல் கருப்பு பணத்தில் இயங்கும் கார்ப்பரேட் பத்திரிகைகள், அல்லது பிளாக் மணியை ஒயிட்டாக்க இயங்கக்கூடிய பத்திரிகைகள் இது எல்லாம் மக்களிடம் உண்மையை சொல்லுமா?

நீ உண்மையாக இருந்தால் தானே உன்னிடம் இருந்து உண்மை வெளிவரும். இதற்கெல்லாம் அரசாங்கமே இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்றால்! பொய்யை மக்களிடம் சொல்வதற்கு சலுகை, விளம்பரங்கள் ! எதற்கு?

மேலும்,வியாபாரம் செய்யும் பத்திரிகைகளுக்கு எதற்கு? இந்த மக்களின் வரிவணம் வீணடிக்கப்படுகிறது? மேலும், ஒருவனுடைய தகுதியை அல்லது ஒரு பத்திரிகையின் தகுதியை பணம் எப்படி தீர்மானிக்க முடியும்? இங்கே அரசியலை தீர்மானிப்பது பணம் அதனால் தான் ஊழல்வாதிகள் அரசியலில் கொழுத்து போகிறார்கள்.

எனவே,மனித வாழ்க்கை! பணமே என்று தீர்மானிக்கும் போது, அரசியல் தோல்வி, பத்திரிக்கை தோல்வி ,ஆன்மீகம் தோல்வி ,வாழ்க்கை தோல்வி! நான் கொள்ளையடித்து அரசியலில் சொத்துக்களை பல லட்சம் கோடி சேர்த்துக் கொண்டேன் என்றால் அது அரசியல் தோல்வியா ?அல்லது வெற்றியா? மேலும்,

அது வாக்களித்த மக்களின் தோல்வியா? அல்லது வெற்றியா? அவர்களுக்கு ஒத்து ஊதிய பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகளின் அது வெற்றியா ?தோல்வியா? எல்லாமே தோல்வி தான். இது சமூகத்தின் தோல்வி. இன்னொரு பக்கம் !கடவுள் கொடுத்த இந்த தோல்வி !அது என்ன தெரியுமா?

மனித வாழ்க்கை இறைவன் கொடுத்தது. அதில் இன்பமும், துன்பமும் அனுபவிக்க பிறந்தவர்கள். இந்த பிறப்பில் ஏழை ,பணக்காரன், இரண்டு பேருக்குமே ஒரே மாதிரியான துக்கமும், சந்தோஷத்தையும் தான் கடவுள் கொடுக்கிறார்.

ஏழைக்கு ஒரு சந்தோஷம், பணக்காரனுக்கு ஒரு சந்தோஷம், இந்த சந்தோஷத்தில் அல்லது துக்கத்தில் அதில் வேறுபாடுகள் இருக்கலாம் .ஆனால் ,இரண்டு ஆத்மாக்களும், அந்த சந்தோஷத்தையும் ,துக்கத்தையும் உணர்ச்சியால் அனுபவிக்கும் போது, இரண்டும் அதை உணர்கிறார்கள்.

பணக்காரன் பணத்தின் மூலம் ஆடம்பரத்தால் சந்தோஷப்படுகிறான் ஏழை! நிம்மதியும், சந்தோஷமும் அவன் இயற்கையோடு இன்பத்தை பகிர்ந்து கொள்கிறான். பணக்காரன் ஏசி போட்டு தூங்குகிறான். ஏழை மரத்தடியில் இருக்கின்ற இயற்கையான காற்றை சுவாசிக்கிறான்.

இதில் ஏழைக்கும், பணக்காரனுக்கும் நோயில்லாமல், வறுமை இல்லாமல், வாழக்கூடியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். சந்தோஷம் என்பது இன்றைய மக்கள் பணத்தாலும், பொருளாலும், வருகிறது என்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

அது தேவைக்கு மேல் ,இருக்குமானால் அதுவே துன்பம். மனித வாழ்க்கையில் வாழ்வதற்கு, பணம் பொருள் தேவை! அதுவே அதிகமாகி விட்டால்! அதை பாதுகாப்பதே வேலையாக வந்துவிடுகிறது. மேலும்,

உண்மையான உழைப்பால் , நேர்மையான பொருள் ஈட்டலால், சந்தோஷமாக வாழ்வதே கௌரவமான வாழ்க்கை. ஆனால், இப்போது எப்படியும் பேசுவது ,எப்படியும் வாழ்வது, அதில் போலியான கௌரவத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் ,அரசியல் கட்சியினர்,

அதேபோல், போலி சாமியார்கள் ,போலி கௌரவத்தை மக்களிடம் வேலை கொடுத்து வாங்குகிறார்கள். சாமியாருக்கு எதற்கு பேரும் ,புகழும் சாமியாருக்கு எதற்கு கோடிகள்? இவர்கள்!கோடிகளை வைத்து கடவுளை விலை கொடுத்து வாங்க போகிறாரா?

கடவுள் விலைமதிப்பற்றவன், அவனை எத்தனை கோடி கொடுத்தாலும், எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் ,எத்தனை லட்சம் கொடுத்தாலும், கடவுளை விலைக்கு வாங்க முடியாது.

கடவுள் ! ஒருவனுடைய அன்பும், பக்தியும் ,தூய்மையான மனசும் ,இறைவன் ஆட் கொள்வான் .ஆடம்பரத்தில் ஒருபோதும் இறைவனை விலைக்கு வாங்க முடியாது. அதை இறைவன் ஏற்கவும் மாட்டான். இப்போதெல்லாம் ஆடம்பரத்தில் தான் ,கடவுளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் .

ஆனால் ,இறைவன் அந்த ஆடம்பரத்தை ஒருபோதும் ஏற்க மாட்டான். கருணையே வடிவான இறைவனுக்கு ,வெரும் தண்ணீர் கொடுத்தாலும் ,அது பிரசாதம் தான். இறைவன் எங்கும் இருப்பவன் . அவன் இந்த உலகத்தை ஆள்பவன்! எல்லையற்ற அன்பு வைத்திருப்பவர்களிடம், கனவில் ! மனதில்,வந்து பேசுவான். தேவைகளை குறைத்தாலே மனிதனின் சந்தோஷம் அதிகரிக்கும்.

தேவைகள் அதிகரிக்கும் போது ,அதுவே மனிதனின், துன்பத்தையும் அதிகரிக்கும். மேலும்,இது எல்லாவற்றையும் தீர்மானிப்பது பணமே! என்று முடிவு செய்வது மனித வாழ்க்கையின் தோல்வி !

இதற்கு நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை தான் சான்று. அவர்கள் பணமே வாழ்க்கை என்று வாழவில்லை. தான் மட்டுமே வாழ வேண்டும் என்று வாழவில்லை. அதனால்தான், உறவுகளும், நட்புகளும், சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

இப்போது உறவுகளை அழித்துவிட்டு, நட்பை அழித்துவிட்டு , தான் மட்டுமே! வாழ வேண்டும் என்று நினைக்கின்ற மக்கள்! எப்படி சந்தோஷமாக வாழ முடியும்?

மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் பணக்காரனுக்கும் ஏழைக்கும் பொதுவானதே; உண்மையான செல்வம் நோயின்றி, மனநிம்மதியுடன் வாழ்வதுதான்.
தேவைக்கு பணமும் பொருளும் அவசியம்; ஆனால் அளவுக்கு மீறினால் அதை பாதுகாப்பதே வாழ்க்கையாகி விடும் — உண்மையான சந்தோஷம் பொருளில் அல்ல, மனநிம்மதியில்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *