
பருவ மழை தொடங்குவதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மேலும்,மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது மழை நீர் கால்வாய்கள், சாலைகள், மரங்கள், பாலங்கள், போன்ற பல்வேறு இடங்களில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படா வண்ணம், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுக்கும் ,உத்தரவிட்டுள்ளார்.
மேலும் , தாழ்வான பகுதிகள் ,கரையோர பகுதிகள், மக்கள் வசிக்கும் இடங்களில் ,தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்து, நடவடிக்கை எடுக்க ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் கடல் நீர் உள்வாங்குவது மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது? போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர ,தண்ணீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
