
நாட்டில் இன்று ஏழை ,எளிய நடுத்தர மக்கள் வீடு கட்ட வேண்டும் என்றால், அதை கட்டி முடிப்பது மிகப்பெரிய சவால்கள் நிறைந்தது.மேலும், சிமெண்ட் விலை, செங்கல் விலை, மணல் விலை, ஜல்லி விலை, இந்த விலை உயர்வால், மக்கள் வீடு கட்டுவது மிகப்பெரிய போராட்டமாக உள்ளது.
இது ஒரு புறம் என்றால், கூலி இதற்கு சமமாக உயர்ந்துள்ளது. இன்றைய வீடு கட்டும் ஒரு மேஸ்திரியின் ஒரு நாள் கூலி , ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகமாகி விட்டது. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, அந்தந்த பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் ,அரசியல் கட்சியினர், வீடு கட்டுபவன் தெரு ஓரமாக மணலோ, சிமெண்ட் கல்லோர் ஜெல்லியோ கொட்டினால் ,உடனே அவனை மிரட்டி பணம் கேட்பார்கள்.

இப்படி எல்லாம் உழைத்து வீடு கட்டுபவன் ,வீடு கட்டி முடிப்பதற்குள் அவன் படும் பாடு ,மிகப்பெரிய கொடுமை. இதனால் வட்டிக்கு வாங்கி வீடு கட்டுபவர்கள் ,பலர் கடனாளி ஆகிறார்கள்.
கட்டுமானப் பொருள்கள்
தற்போதைய சுமார் விலை
செங்கல்₹11–₹13 / ஒன்று
M-Sand ₹5,600–₹6,500 / 100 CFT
P-Sand₹5,700–₹7,300 / 100 CFT
ஆற்று மணல் ₹7,800–₹9,050 / 100 CFT
ஜல்லி / Blue Metal₹5,200 சுற்றி / 100 CFT
மேலும் ,TMT கம்பி ₹58–₹66 / கிலோ
மேலும் ,வட்டிக்கு வாங்கி கட்டிய ,வீட்டை கடனை அடைக்க முடியாமல், எத்தனையோ பேர் பாதியிலே விற்று விடுகிறார்கள். இந்தளவுக்கு இவை எல்லாம் ஏழை, எளிய நடுத்தர, மக்களுக்கு இந்த விலை உயர்வு, கூலி, அரசியல் கட்சியினர், இதற்கெல்லாம் கடந்த ஆட்சியில் இருந்தது .
இப்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! முற்றுப்புள்ளி வைத்து ,ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு ,இந்த விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவாரா?- முதல்வர் விஜய்.