செவிலியர்கள் நியாயமான கோரிக்கைகளை தமிழக வெற்றி கழகத்தின் அரசு நிறைவேற்றுமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செவிலியர்கள் கடந்த திமுக ஆட்சியில் இருந்து தங்களுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது ஸ்டாலின் செவிலியர் முதுகில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குத்திவிட்டார் என்று அரசியல் செய்ய திமுகவுக்கு தகுதி இல்லை. கடந்த ஆட்சியிலே அவர்கள் பணி நிரந்தரம் செய்ய போராடியவர்கள்.

அப்போது நீங்கள் அவர்களுக்கு எதிராக தான் செயல்பட்டீர்கள். அதனால், இப்போது அதைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அந்த அருகதையே இல்லை. மேலும்,

அவர்களின் போராட்டம், நியாயமானது. அது அவர்களுடைய,பணி நிரந்தரம், பணிச்சுமை, அதற்கான சலுகைகள், ஆகியவற்றை வலியுறுத்தி கடந்து திமுக ஆட்சியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் ,அவர்களுக்கு அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்பது வருத்தமான ஒன்று.மேலும், செவிலியர் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு மனிதன் நோயாளியாக இருக்கும்போது, அவர்களுடைய சேவை, அருமை பெருமை அப்போதுதான் புரியும்.

அவர்கள் நோயாளியுடன் வாழ்ந்து வருபவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். எத்தனையோ நோயாளி குணமான உடன், நன்றி சொல்வது முதலில் செவிலியர்களுக்கு தான். அப்படிப்பட்ட செவிலியர்கள் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தமிழக முதல்வர் விஜய் புரிந்து அவர்களுக்கான பணி நிரந்தரம் செய்வது அவசியமானது. மக்களுடன்…! மக்களுக்காக…. என்றும் ,மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *