தேர்தல் ஆணையத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்து .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டின் 160 கோடி மக்களின் நம்பிக்கை தேர்தல் ஆணையம் .இதை வைத்து, அரசியல் கட்சிகள் அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்து.

மேலும் ,இதை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து ,அந்த அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, உச்சநீதிமன்றத்தின் மீது அவதூறு சொன்னால் ,அதற்கு சட்டத்தின் மீது எந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ ,அதே போல் தான் தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

மேலும்,இவர்கள் வாக்குரிமையை ரத்து செய்வது என்பது, யாருடைய வாக்குரிமையை ரத்து செய்து விட்டார்கள்? இந்தியாவில் வாழக்கூடிய மக்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டதா? அல்லது போலியான வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களா? அல்லது இறந்தவர்கள் நீக்கப்பட்டார்களா? அல்லது இடம்பெயர்ந்தவர்கள் நீக்கப்பட்டார்களா? இதற்கு தான் SIR தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

இதை தேர்தல் ஆணையத்தின் தவறு என்று சொல்வதற்கு எந்த அரசியல் கட்சிக்கும் அருகதை இல்லை.மேலும், அப்படி சொன்னால், இவர்கள் நேர்மையான தேர்தலை சந்திக்க கூடிய அரசியல் கட்சிகளாக இல்லை என்பது தான் இதன் அர்த்தம்.

அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடிய அதிகாரத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுக்க வேண்டும். உண்மையை நிரூபிக்காமல் அவதூறுகளை பேசிக்கொண்டு அரசியல் செய்வது ,அந்த அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். மேலும்,

மக்களுக்கு தேவை நேர்மையான தேர்தல்! ஆனால், அரசியல் கட்சிகளுக்கு தேவை நேர்மையற்ற தேர்தலா? ஒரு பொய்யை 100 முறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால், மக்களிடம் அது உண்மையாகி விடுமா? மக்களுக்கு அரசியல் தெரியாது என்பதால் நீ எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருப்பாயா? மேலும்,

குற்றச்சாட்டை நிருபியுங்கள் என்று தான் தேர்தல் ஆணையம் அப்போதிலிருந்து இன்று வரை சொல்கிறது. ஆனால், இவர்கள் தேர்தல் ஆணையத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இப்போது கூட கம்யூனிஸ்ட் சண்முகம் சொல்கிறார் வாக்காளர்கள் பெயர் நீக்கத்திற்கு ஞானேஷ் குமார் ஒரு நிமிடம் கூட பதவியில் இருக்கக் கூடாது.

வாக்காளர்கள் பெயர் நீக்கக் கூடாது உண்மை. இறந்தவர்கள் பெயர் இருக்கலாமா? இடம்பெயர்ந்தவர்கள் பெயர் இருக்கலாமா? வேறு நாட்டில் வந்தவர்கள் பெயர் இருக்கலாமா? இதற்கு பதில் சொல்லிவிட்டு ,எந்த அரசியல் கட்சியாவது இதைப்பற்றி பேசட்டும். மக்களை முட்டாளாக்கும் அரசியலையும், பைத்தியக்கார அரசியலையும், தமிழ்நாட்டில் பேசக்கூடாது.

மக்களுக்கு அரசியல் தெரியாது என்று தொடர்ந்து முட்டாளாக்கும் அரசியலை அரசியல் கட்சிகள் கையில் எடுத்திருக்கிறார்கள். நீங்கள் எந்த மாநிலத்தில் எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் எத்தனை பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆதாரத்தை கொடுத்துவிட்டு அரசியல் கட்சிகள் பேச வேண்டும் – மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *