விடிய விடிய அமைச்சர் பொன்முடி அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டுள்ளார் விடியற்காலை தான் அவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள் மீண்டும் இன்று நாலு மணிக்கு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற கண்டிப்புடன் தான் இவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நல்ல வேலை செந்தில் பாலாஜிக்கு வந்த நெஞ்சுவலி பொன்முடிக்கு வரவில்லை. மேலும்,
திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மக்களிடம் பேசும் போது, எங்கள விட உயர்ந்தவரும், சிறந்தவரும், நேர்மையானவர்களும் யாரும் இல்லை என்பதுதான் அவர்களுடைய பேச்சு இருக்கும். அதில் கைதேர்ந்த பேச்சாளர்கள் திமுக பேச்சாளர்கள். ஏனென்றால், பேசிய நாட்டை பிடித்த கட்சி. அப்படிதான் ஆட்சிக்கு வந்தார்கள். வந்து மக்களுக்கு செய்ததை விட, நூறு மடங்கு இவர்களுக்கு செய்து கொண்டார்கள்.
அந்த பணத்தை இந்த நாட்டில் முதலீடு செய்ய முடியாமல், ஒவ்வொருவரும் வெளிநாடுகளில் முதலீடு செய்து இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி ஒரு நாட்டில் முதலீடு செய்கிறார் என்றால், பொன்முடிமகன் கௌதம் சிவகாமணி இந்தோனேஷியாவில் 50000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கிறார். இது தவிர, ஒரு லட்சம் அமெரிக்க டாலரில் இந்தோனேஷியாவில் ஒரு கம்பெனியில் ஷேர் வாங்கியதாகவும், தகவல் வெளிவருகிறது.
(நேற்று நடத்தப்பட்ட அமலாக்கத்துறை ரெய்டியில், அமைச்சர் பொன்முடி வீட்டில் லட்சக்கணக்கில் வெளிநாட்டுக் கரன்சிகள்.கைப்பற்றப்பட்டது.)
இன்னும் அமலாக்கத்துறை விசாரணையில் ,எந்தெந்த நாடுகளில் இவர்கள் சொத்துக்களை வாங்கி குவித்து இருக்கிறார்களோ, அவை அனைத்தும் தமிழக மக்களுக்கு தெரிந்தால் தான் ,இவர்களுடைய உண்மையான வெளி வேஷம் வெளிச்சத்திற்கு வரும். ஒரு காலத்தில் சாதாரண மக்களோடு மக்களாக இருந்தவர்கள், இன்று ஜமீன் பரம்பரை அளவுக்கு அதிமுக, திமுகவின் சொத்து பட்டியல், வெளிநாட்டு முதலீடுகள், இது போன்ற அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் மக்களின் பார்வைக்கு வெளிவந்துள்ளது. இது போதாது. அரசியல் என்பது கொள்ளை அடிக்கும் கூடாரம் அல்ல.
அதனால், மக்களை ஏமாற்று பேர்வழிகளாக இன்றைய அரசியல் வாதிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .அதிகாரம் இருக்கிறது. ஆட்சி இருக்கிறது என்று ,தன்னுடைய அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தி பணம் பார்க்கும் வேலை தான் இன்றைய அரசியல். அவ்வளவு கீழ் தரமான நிலைமைக்கு அரசியலை கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.
இதிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், அமலக்கத்துறை மட்டுமல்ல, சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ,NIA போன்ற அமைப்புகள், தமிழ்நாட்டில் இவர்கள் எல்லாம் என்ன வேலை பார்க்கிறார்கள்? எப்படி சம்பாதித்து இருக்கிறார்கள்? இவர்களுடைய வரவு செலவு கணக்கு என்ன? இவர்களுடைய பினாமி சொத்துக்கள் எவ்வளவு ?இவை அனைத்தையும் ஒன்று விடாமல் தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். என்பதுதான் தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த அரசியல் கூத்து.
மேலும், மத்திய அரசு இதை வைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பிஜேபியை கவிழ்த்து விடலாம் என்று தவறான கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நாட்டுக்குஇவர்கள் எதிர்க்கட்சிகள் இல்லை. இவர்கள் எதிரி கட்சிகளாக தான் இந்த மக்களுக்கு இருந்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் தான் எதிர்க்கட்சிகள். ஆனால் இவர்கள் மக்களுக்கே எதிரியான கட்சிகளாக தான் இருக்கிறார்கள்.
அதாவது, இவர்களுடைய தவறுகள், இவர்களுடைய ஊழல்கள், எல்லாவற்றையும் வெளியில் கொண்டு வரும் போது, பாஜக அரசு எங்களை பழிவாங்குகிறது என்கிறார்கள். நீங்கள் மக்களை பழி வாங்கினால், பாஜக அரசு அதை வேடிக்கை பார்க்காது. அமைச்சர் பொன்முடி வீட்டில் வெளிநாட்டு கரன்சிகள் லட்சக்கணக்கில், இது எல்லாம் எப்படி வரும்? உங்களுடைய ஆரம்ப கால சொத்து என்ன ?தற்போதைய சொத்து என்ன ?அளவுக்கு அதிகமான பேராசை ,பெரு நஷ்டம் என்பார்கள் .
அதிகாரம் இருக்கிறது, ஆட்சி இருக்கிறது, எதுவுமே உங்களுக்கு கொள்ளையடிக்க மக்கள் வாய்ப்பு கொடுத்தது அல்ல .மக்களுக்காக சேவை செய்ய தான் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை ஒருவர் கூட நினைக்கவில்லை. உங்களுக்கு வாக்களித்த மக்களை முட்டாள்களாகவும், ஏமாளிகளாகவும், நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் தான் ஊழல்கள் தொடர்கிறது .
இனிமேலாவது ஆயிரம் ,இரண்டாயிரம், ஐநூறுக்கு வாக்களிக்கும் மக்கள் இந்த ஊழல்வாதிகளின் உண்மை நிலவரம் புரிந்ததா?