தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பதை விட, கார்ப்பரேட் பத்திரிக்கை சுதந்திரம், பத்திரிகைகளின் சுயநலம், மற்றும் எந்த வரைமுறை இல்லாமல் பத்திரிகை Dipir செயல்பட்டு வருகிறது.மேலும்,
பத்திரிக்கை துறை என்றால் ,பத்திரிகைகள் எப்படி இருக்க வேண்டும் ? எது பத்திரிக்கை ? எந்தெந்த பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் ? மக்களின் வரிப்பணம் ,ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்பதால், அவர்களே விதிமுறைகளை எப்படி வேண்டுமானாலும், வகுத்துக் கொள்கிறார்கள். மேலும், மத்திய அரசு சென்னைக்கு தனிப்பட்ட முறையில் பத்திரிகைகளுக்கு RNI கொடுப்பது போல், சென்னையில் ஆர். என். ஐ வாங்கி ,அங்கே வெளியிடும் பத்திரிகைகளுக்கு மட்டும் தான், அரசு அடையாள அட்டை ,சலுகைகள் வழங்கப்படும் என்ற தவறான அரசாணையை தமிழக அரசு செய்தித் துறையில் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கொடுக்கின்ற RNI யிலே, இவ்வளவு குளறுபடி என்றால், மீதி எல்லாம் எவ்வளவு விதிமீறல்கள் இருக்கும் ? என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் கார்ப்பரேட் பத்திரிகை நிறுவன உரிமையாளர்கள், அதில் பணியாற்றக்கூடிய செய்தியாளர்கள் ,ஆசிரியர்கள் மட்டுமே தகுதியானவர்களா? எங்களைப் போன்றவர்களுக்கு தகுதி இல்லையா? இதுதான் பத்திரிக்கை துறையின் சமூக நீதியா?
சமூக நீதியே இல்லாத ஒரு துறையாக, தமிழ்நாட்டில் செய்தி துறை இருக்கும்போது, மக்களுக்கு எப்படி சமூக நீதி கிடைக்க இந்த பத்திரிகைகள் போராடும் ? மேலும், அவர்களே பத்திரிக்கையாளர் நல வாரியங்களில் தனக்கு வேண்டியவர்களை நியமித்துக் கொள்கிறார்கள். இதில் என்ன பத்திரிகை சுதந்திரம் இருக்கிறது? அதிலும் ,அரசு அடையாள அட்டை கூட சிறிய பத்திரிகைகளுக்கு ,கார்ப்பரேட் பத்திரிகை விதிமுறைகள் அத்தனையும் அதிலே கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும்,
கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் ,விளம்பரங்கள், சலுகைகள் அனுபவிப்பது கார்ப்பரேட் பத்திரிகைகள், ஆனால், ஒரு ரூபாய் கூட இந்த பத்திரிகைகளுக்கு கொடுக்காத தமிழக அரசு, இவ்வளவு விதிமுறைகளை கொண்டு வந்து, இந்த பத்திரிகைகள் வளர விடாமல் 50 ஆண்டுகாலம், அரசியல் செய்து அழித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல , இவர்களின் சுயநலத்திற்காக பத்திரிகை துறை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.தவிர,
கடந்த கால எங்கேயோ ஏ பி ஆர் இருந்தவர்கள் எல்லாம், இப்போது தலைமைச் செயலகத்தில் இணை இயக்குனர் ,உதவி இயக்குனர், பிஆர்ஓ என்று வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு பத்திரிக்கை பற்றி ஒன்றும் தெரியாது. கடந்த ஆட்சியில் இணை இயக்குனராக இருந்த ஒருவர், தலைமைச் செயலகத்தில் என்னிடம் பேசும்போது, ஒரு பி ஆர் ஓ க்கு கூட பத்திரிகை பற்றி தெரிந்தவர்கள் மாநிலம் முழுதும் நான்கைந்து பேர் தான் தேர்வார்கள் என்று என்னிடம் தெரிவித்தார் . அதனால்தான் ,இப்படிப்பட்டவர்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை முதலாளிகளும், செய்தியாளர்களும் சொன்னதன் அடிப்படையில், இப்படிப்பட்ட தவறான அரசாணையை கொண்டு வந்திருக்கிறார்கள்.
மேலும் ,இதைப்பற்றி கேட்டது மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மட்டுமே, மீதி எல்லாம் அவர்கள் சொன்னது தான் வேத வாக்கு என்று இந்த பத்திரிகை துறையை அவர்களுடைய சொந்த சுயநலத்திற்கான துறையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இதுதான் உண்மை . இப்படிப்பட்ட அதிகாரிகள் கார்ப்பரேட் பத்திரிகை செய்தியாளர்கள் போல தான் அவர்களும் இருக்கிறார்கள் பத்திரிக்கை என்றால் என்ன பலமுறை மக்கள் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறேன்.
இதற்கு காரணம், இவர்கள் எல்லோரும் அரசியல் கட்சியின் பின்புலத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள் .இவர்களுக்கு பத்திரிகை பற்றிய எந்த (Basic knowledge) ம் இருக்காது. அரசியல் கட்சிகாரர்களைப் போல் தான் இருக்கிறார்கள். எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கிறதோ ,அந்த கட்சிக்கு ஏற்றவாறு பி ஆர் ஓ வேலை பார்ப்பார்கள் . இவர்கள் சில நேரங்களில் அரசு அதிகாரிகளா? அல்லது கட்சி பி.ஆர்.ஓ க்களா? என்று கூட நான் நினைத்திருக்கிறேன். இதை சில பத்திரிகையாளர்களிடம் பேசியும் இருக்கிறேன். இவர்களுக்கே பத்திரிக்கை பற்றி புரியவைப்பது கடினமாக உள்ளது. இதில் மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் ?மேலும்,
இந்த பத்திரிக்கை சுயநல கூட்டங்களின் பிரதிநிதிகள் ஆகத்தான் செயல்படுவார்கள் .உண்மையை சொன்னாலும் அதை அலட்சியமாகத்தான் பார்த்தார்கள். அதுமட்டுமல்ல, தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்த பத்திரிகை செய்திகளை வெளியிட்டு வருகிறேன். இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.சிறிய பத்திரிகை என்றால் அலட்சியமா? செய்தி என்பது சிறிய பத்திரிக்கை பெரிய பத்திரிக்கை இல்லை .
அதுவே உங்களுக்கு சாதகமாக இருந்தால் ,அதை எடுத்துக் கொள்வீர்கள் நடுநிலையாக இருந்தால் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். மேலும், சர்குலேஷன் என்று ஒரு விதிமுறையை வைத்து, இன்று இந்த பத்திரிகை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகள் இவர்கள் சொல்வது போல் பத்தாயிரம் பிரிதிகளை அடிக்காமலே, பொய்யான ஆடிட் ரிப்போர்ட் கொடுத்து சலுகை ,விளம்பரங்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் .அதாவது பஸ் பாஸ், விளம்பரங்கள். நடுத்தர வர்க்கம் ஒரு பத்திரிக்கை நடத்துவதே கடினமான வேலை. ஒரு சிலர் 5 பத்திரிகைகள் நடத்துவது போல் கணக்கு காட்டுகிறார்கள். நான்கு பத்திரிகைகள் நடத்துவது போல் கணக்கு காட்டுகிறார்கள். இப்படி அரசாங்கத்தை ஏமாற்றி, சட்டத்தை ஏமாற்றி, நடத்தும் பத்திரிகைகள் எப்படி சமூக நலன் சார்ந்து செயல்படும்?
இது பத்திரிகைகளின் பொது நலமா? அல்லது சுயநலமா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் .தவிர, வாட்ஸ் அப்பில், இவர்களுடைய பத்திரிக்கை pdfகள் வெளியிடும்போது, இவர்களுடைய சர்குலேஷன் எப்படி இருக்கும்? எப்படி பத்தாயிரம் பெறுதல் தினமும் அச்சடிப்பார்கள்? எல்லாமே ஒரு ஏமாற்று வேலையாக தான், பல பத்திரிகைகள் இந்த சர்குலேஷனை வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது .அது மட்டுமல்ல ,சில கட்சி சார்ந்த பத்திரிகைகள், வியாபாரம் சார்ந்த பத்திரிகைகள், அதைப்போல் தொலைக்காட்சிகள், இவையெல்லாம் மக்களின் வரிப்பணித்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது .இதை தாங்கள் தற்போது தான், இதைப் பற்றி பேசி இருக்கிறீர்கள் .
மேலும் ,இது சம்பந்தமாக தலைமைச் செயலாளர், இயக்குனர் மற்றும் செய்தி துறை செயலாளர் ,ஆகியோருக்கு தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த விதிமுறைகள் தவறானது. மேலும், இணையதளத்தில் வெளியிடும் எங்களது பத்திரிகைகளின் பார்வையாளர்களையும், சர்குலேஷன் விதிமுறையில் சேர்க்க வேண்டும். தற்போது பத்திரிகைகள் வாங்கி படிக்கும் மக்களின் ஆர்வம் குறைந்துவிட்டது. அதனால் ,காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிகைகளின் விதிமுறைகளை மாற்றுங்கள்.மேலும், தங்களுக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு ஒரு விதமாகவும், மற்ற பத்திரிகைகளுக்கு ஒரு விதமாகவும், எந்த விதிமுறையில் எப்படி இதை கொடுக்கிறார்கள்? என்ற ஒரு வரைமுறையே இல்லை. கேவலமாக இருக்கிறது
பத்திரிக்கை துறை .இதை சீர் செய்ய வேண்டும் என்றால், நேர்மையான நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றவர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். தவிர, இந்த பத்திரிகைகளின் தரம், தகுதி, மக்களுக்காக இதனுடைய பயன்கள் என்ன? எதுவுமே இல்லை. எல்லாம் இந்த லேபிள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தினத்தந்தி, தினமலர், தினகரன் இதை தான் மக்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
இவர்கள் சொல்வது போல் ,அப்படியே இந்த பத்திரிகைகளுக்கு உண்மையான பெரிய பத்திரிகைகள் என்று சொல்லிக் கொண்டாலும் ,தமிழ்நாட்டில் இந்த பத்திரிகைகளால் ஊழலுக்கு எதிராக எத்தனை பத்திரிகைகள், செய்திகளை வெளியிட்டு வருகிறது ? நடுநிலையான பத்திரிகைகள் எத்தனை? சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் எத்தனை? உண்மையான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் எத்தனை? எல்லாவற்றையும் தரம் பிரியுங்கள். அப்போதுதான் இந்த பத்திரிகை என்றால் என்ன? என்பது மக்களுக்கு புரியும் .மேலும்,
இந்த பத்திரிகைத்துறை ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கா? அல்லது மக்களின் பொதுநலத்திற்கா? எதற்கு? என்பதை பத்திரிக்கை துறை தெரியாமல் செய்தித்துறை செயல்பட்டு வருகிறது . அதனால், நடுநிலையான, நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், பத்திரிகை ஆய்வாளர்கள் குழு உருவாக்க வேண்டும். இதில் தினசரி பத்திரிகைகள் என்று சொல்லிக்கொண்டு ,என்ன செய்திகளை மக்களுக்கு வெளியிட்டு வருகிறது? மக்களுக்கு அதன் பயன் என்ன ?இது எல்லாவற்றையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. இதை தகவல் ஆணையத்திற்கு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை .
மேலும், மத்திய அரசின் சர்குலேஷன் என்ற விதிமுறையை அவசியம் மாற்ற வழிவகை செய்ய வேண்டும். தற்போது, அரசியல் என்பது சுயநலமாகிவிட்டதால், பொதுநலத்துடன் வெளிவரும் பத்திரிகைகள், பெரும் போராட்டங்களை சந்தித்து, சில பேர் வாழ்க்கையும் போராட்டம் ஆக்கி, வெளியேறியவர்களும் உண்டு. அதனால், இந்த துறையை சீர் செய்வது காலத்தின் கட்டாயம். இல்லையென்றால், பொது நலத்திற்கும், சுயநலத்திற்கும் அர்த்தம் தெரியாமல் இன்றைய பத்திரிகை ,தொலைக்காட்சிகள் இருந்து வருகிறது.
பத்திரிக்கை என்றால் தெரியாத பாமர மக்களிடம் எதைக் கொடுத்தாலும் எழுத்துக்கூட்டி படித்துக் கொண்டு இருப்பவர்களும் உண்டு. ஆனால், தெரிந்தவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஒரு பக்கம், நாட்டின் நான்காவது தூண் .அது மக்களுக்கான பொது நலத்தில், அதனுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.
அதற்கு உறுதுணையாக மக்களின் வரிப்பணம் வீணடிக்காமல், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு கருத்து கூட இல்லாமல் ,இந்த செய்தி துறை இத்தனை நாள் இருக்கிறது என்றால், இந்த திமுக ,அதிமுக ஆட்சியின் சுயநலம் தான்.அதனால் தான் ஆட்சி ,அதிகாரம் சுயநலமாகவும் ,அராஜகம் ,அடாவடித்தனம், ஊழல் இவையெல்லாம் நாட்டில் வளர்ந்துள்ளதற்கு இதுவே சாட்சி.
மேலும், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டி காட்டாமல், நாட்டில் நடக்கின்ற அநியாயங்கள், அராஜகங்களை பத்திரிகைகள் வெளியிடாமல், தனக்கு மட்டும் செய்தி துறையில் சலுகை ,விளம்பரங்கள் வந்தால் போதும், என்ற சுயநல பத்திரிகைகளால் ,ஆட்சியாளர்களை நல்லவர்களாக, மக்களிடம் உண்மையை மறைத்து வெளியிட்டு வரும் செய்தி நிறுவனங்களால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மேலும், பயனற்ற செய்திகளால் எத்தனை கோடி சர்குலேஷன் பிரதிகளை அச்சடித்தாலும், என்ன பயன்? எனவே, இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு இந்த உண்மையை கொண்டு சென்று, ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .