நாட்டுக்காக அரசியல் செய்யும் கட்சிகள் இல்லாமல், ஓட்டுக்காக அரசியல் செய்யும் கட்சிகள் உருவாகி இருப்பது தேச நலனுக்கு ஆபத்து.

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் ,அரசியல் கட்சியில் இருப்பது குப்பைகளை கூட்டி வைப்பதற்கு சமம். அப்படி தான், இந்த அரசியல் கட்சிகள் அரசியல் தெரியாத முட்டாள்களை குப்பைகளைப் போல் கூட்டி வைத்திருக்கிறது. அவர்கள் ஒரு பக்கம் ரவுடிகள் மற்றொரு பக்கம் வியாபாரிகள் மற்றொரு பக்கம் சுயநலவாதிகள் இன்னும் சொல்லப்போனால் ஒரு சமூக விரோத கும்பல் போலவே இந்த அரசியல் கட்சியினர் செயல்படுகிறார்கள்.எத்தனையோ பிரச்சனைகள் இன்று நாட்டில் உருவாவதற்கு இவர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.

நாட்டில் ஊழலை தழைக்க செய்வது இந்த அரசியல் கட்சிகள் தான், இவர்கள் தான் முதலில் பர்சன்டேஜ் வாங்குகின்ற கட்சிக் கூட்டங்கள் ,இவர்கள் வாங்கினால் அது டொனேஷன், மற்றவர்கள் வாங்கினால் அது லஞ்சம். இப்படி அரசியல் கட்சிகள் ஊழலை உருவாக்கிக் கொண்டு, ஒழிப்பேன் என்று மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள். நாட்டிற்கு தேவை, இந்த சமூகத்திற்கு தேவை, ரவுடிகள் அல்ல மனித பிமானம் உள்ளவர்கள் .

 அவர்கள் தான் அரசியல் கட்சிக்கு தேவையானவர்கள், தகுதியானவர்கள். ஆனால், இங்கே வரும்போது எத்தனை கோடி? எத்தனை லட்சம்? என்பதை கணக்கு போட்டு தான், ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் ,கற்பனை கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய ஒரே மூலதனம் மக்களை வசியப்படுத்தும் பேச்சுக்கள் .அதாவது மந்திரவாதி மந்திரம் சொல்லி பேய்களை வசியப்படுத்தி, தனக்கு வேண்டிய காரியங்களை அந்த பேயிடம் சாதித்துக் கொள்வான். அது போல் தான் இன்றைய அரசியல் கட்சிகள் இருக்கிறது.

எல்லாமே இந்த கார்ப்பரேட் மீடியாக்களில் காசு கொடுத்து வில்லா வலைப்பது போல, இந்த நாட்டுக்கு வந்த தியாகிகள் போல பேசிவிட்டு, பணத்தில் மட்டும் தான் குறிக்கோளாக இருப்பார்கள். அதுக்கும் சிலர் பேசுவார்கள் பணம் இல்லை யென்றால் நாங்கள் எப்படி கட்சி நடத்துவது? கட்சி நடத்துவது நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காக அல்லது மக்களுக்கா? சேவை செய்வதற்கா?  எதற்கு என்ற அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கட்சிக்குள் இருந்து கொண்டு ,இந்த மக்களுக்கு எதுவும் செய்வதற்கு தகுதியற்றவர்களாக அதாவது குப்பைகள் போல் இந்த கட்சிகள் இருந்து மக்களின் ஓட்டு மட்டுமே அரசியலாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் தகுதியற்றவர்கள் அரசியல் கட்சிகளில் இருப்பது போல, தகுதியற்ற அரசியல் கட்சிகளும் பதவிக்கு வர துடிக்கிறார்கள். மேலும், திருமாவளவன், சீமான், ராமதாஸ், வைகோ, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், தேமுதிக போன்ற பல கட்சிகள் இன்று சீட்டு பேரமும் பணமும் திமுக ,அதிமுக பாஜக போன்ற கட்சிகளிடம் பேரம் பேசிக் கொள்கிறது. இப்படி பேரம் பேசி நிற்பதால், இந்த மக்கள் என்ன பயன் அடைந்தார்கள்? இவர்கள்தான் பயனடைகிறார்கள்.

இந்த லட்சணத்தில் மாநாடு நடத்திக் கூட்டத்தை காண்பித்து ,அதற்கேற்றவாறு எங்களுக்கு சீட்டு கொடுங்கள், அந்த மாநாட்டுக்கு வந்தவனுக்கு எதுவும் தெரியாது. அவன் எப்போது தனக்கு மது பாட்டில் கொடுப்பார்கள்?  எப்போது பிரியாணி கொடுப்பார்கள் ?  எப்போது பணம் கொடுப்பார்கள்?  என்ற கவலையில் அவன் இருந்து கொண்டிருப்பான் .இப்படி எல்லாம் அரசியல் கட்சிகள், இந்த நாட்டை குட்டிச்சுவராக மாற்றிக் கொண்டிருக்கிறது .ஒரு பக்கம் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்கள் தியாகம் அர்த்தமற்றதாகிவிட்டது. அதை பேசிப் பயனில்லை. அதனால், இதற்கு தேர்தல் ஆணையம் தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தேர்தல் ஆணையம் தகுதியற்ற கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்க கூடாது. தேர்தல் ஆணையம் பணத்தை மக்களுக்கு கொடுக்கின்ற கட்சிகளை உளவுத்துறை மூலம் கண்காணிக்க வேண்டும் .ட்ரோன் மூலம் கண்காணிக்க வேண்டும். யாரெல்லாம் அந்தந்த பகுதியில் வருகிறார்கள்?  எதற்காக வந்தார்கள்?  என்பதை கண்காணித்து வாக்களிப்பவர்கள், பணம் கொடுத்தவர்கள், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தேர்தல் நடத்துபவர்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அதிகாரிகளை மாற்றி, வேறு மாநிலத்தில் உள்ள அதிகாரிகளை கொண்டு வர வேண்டும் .துணை ராணுவம் இருக்க வேண்டும். மகளிர் அமைப்புகளின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட வேண்டும் .அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றுகின்ற பெரும் வேலை பார்க்கிறார்கள். ஒரு பக்கம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ,அடுத்தது தன்னுடைய சொத்துக்கணக்கு முறையாக காட்டாமல் போலியாக காட்டுவது ,சிலர் காட்டாமலே கடைசி வரைக்கும் இருப்பது, இது எல்லாம் தேர்தல் விடுமுறைகளில் கடுமையாக்கப்பட வேண்டும். பதவிக்கு வருவது பணமும், சொத்துக்களையும் சேர்ப்பதற்கு தான் 99 சதவீதம் வருகிறார்கள்.

 அதனால் ,பதவிக்கு வரும்போது இருக்கும் சொத்து, ஆயிரம் மடங்கு அதிகரிக்கிறது. அது எப்படி அதிகரிக்கும் ?அதனால் பதவிக்கு வந்த பின்பு சம்பாதிக்கும், சொத்துக்கள் நாட்டுடைமையாக்கம் வரை, இந்த தேர்தல் என்பது நாட்டின் ஒரு சம்பிரதாய தேர்தலாக தான் இருக்கும் .அரசியல் தெரிந்தவர்கள் இவர்கள் ஊழல் செய்து கோடிகளை கொள்ளை அடிக்க, நான் ஏன்? நாலு மணி நேரம் ,5 மணி நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விகள் எல்லாம் கேட்கிறார்கள்? இதற்கு தேர்தல் ஆணையம் என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறது?

மேலும் ,வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருபவர்கள் மேலும் ஊழலைத்தான் செய்து கொண்டு இருப்பார்களே ஒழிய, இந்த பணத்தால் தகுதியானவர்கள் அரசியலுக்கு வர முடியவில்லை.இந்த பணம் தகுதியானவர்களை அரசியலில் பதவிக்கு வர விடாது. மீண்டும், மீண்டும் ஊழல்வாதிகள் தான் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு அரசியல் இன்னும் புரியாத ஒரே காரணத்தால் ,ரவுடிகளும், ஊழல்வாதிகளும் அரசியல் கட்சி என்று தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 ஒரு மனிதன் அந்த இடத்திற்கு எதற்காக வருகிறான்?  ஏன் வருகிறான்?  மக்கள் தேர்வு செய்ததனால் பதவிக்கு வருகிறான். அந்தப் பதவி , அதிகாரம் மக்களுக்கு சேவை செய்யும்போது முள்ளின் மேல் அமர்ந்து சேவை செய்யக்கூடிய நிலைமைதான் பதவி, அதிகாரம் .ஆனால், தமிழ்நாட்டில் இத்தனை கட்சிகள் தகுதி இல்லாதவர்கள் ஏன் ?அதற்குப் போட்டி போடுகிறார்கள் ?தங்களுடைய சுயலாபங்களுக்காக போட்டி போடுகிறார்கள்.

 அதாவது ஒரு கடினமான பொறுப்புக்கு தகுதி இல்லாதவர்கள், தொடர்ந்து மக்கள் தேர்வு செய்து, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு, இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு, பாதுகாப்புக்கு, வருங்கால இளைய தலைமுறைகள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படாமல் ,இவர்களுடைய பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ,செயல்படும் ஓட்டு அரசியல் தான் தற்போதைய அரசியல் கட்சிகள் செய்கிறது.

இதில் தேர்தல் வந்தால், நாம் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், அந்தந்த ஜாதி ஓட்டுக்களை நாம் பெற முடியும்? எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை ஓட்டுக்களை பெற முடியும்? எந்தெந்த கட்சிகளுடன் ஓட்டுக்களை வைத்தால் பெரும்பான்மை ஓட்டுக்களை பெற முடியும்? இப்படி இந்த ஓட்டுகளுக்காக அரசியல் கட்சிகள் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் சிந்திக்கவில்லை. சிந்திப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள் .அதாவது தனக்கு என்ன லாபம் ?என்ற அளவில் இன்றைய ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் இருக்கிறபோது ,அரசியல் கட்சிகளில் தன்னுடைய வேலை வெட்டி எல்லாவற்றையும் விட்டுவிட்டு ,அதற்காக சுற்றித் திரிபவர்கள் எப்படி இருப்பார்கள்?

 அவர்களுக்கு எதுவும் தெரியாது. இந்த கட்சியில் போனால், நமக்கு ஏதாவது உள்ளாட்சிகளில் சீட் வாங்கலாம். எம்எல்ஏ ,எம்பி சீட்டு வாங்கலாம் .இப்படி ஒரு கனவுகளில் தான் இந்த அரசியலில் பல கோடிபேர் வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த சமூக நலனும், தேச நலனும் கருதி வந்தவர்கள், ஒவ்வொரு சில கட்சிகளில் ஒன்று இரண்டு கூட தேருமா?

 என்பது தெரியவில்லை .சில கட்சிகளில் விரல் விட்டு எண்ணலாம். இப்படிதான் இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைமை .அதனால், தேர்தல் ஆணையம் இந்த அரசியல் கட்சிகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதற்கு துணை போய்க் கொண்டிருக்கிறது. கடுமையான சட்டங்கள் தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்பதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். அதாவது செய்ய முடியாத காரியங்களை செய்வோம் என்பது தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கிறார்கள். அதே மாதிரி கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியில் நிறைவேற்றாமல் விட்டு விடுகிறார்கள். தமிழ்நாட்டில் மக்கள் பணம் கொடுத்தால் ஓட்டு போட காத்திருக்கிறார்கள் .அவர்கள் ஒரு பக்கம் வறுமையில் பின் தங்கிய மக்கள், மற்றொரு பக்கம் குடிகாரர்கள்.

 இதில் நடுத்தர மக்கள் எந்த கட்சியால் தனக்கு லாபம்? எந்த ஜாதி கட்சியால் தனக்கு லாபம் ?எந்த அரசியல் கட்சியால் தனக்கு லாபம் ? இப்படிதான் சுயநல அரசியல் ஆகி, நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமூகம் முன்னேற்றம், பொருளாதாரப் பிரச்சினை, அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் 8 லட்சம் கோடி கடன் ,இவையெல்லாம் எங்கே சரி செய்யப் போகிறார்கள் ?திமுக அரசு நிர்வாகம் தகுதியான மக்கள்  வேதனை தெரிவிக்கிறார்கள். 

இருப்பினும், தமிழ்நாட்டில் தகுதியற்றவர்கள் தான் இன்று பதவிக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் . இதையெல்லாம் தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அதற்கு உள்ளது. ஆனால், அதைப்பற்றி இதுவரை தேர்தல் ஆணையம் சிந்திக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய வருத்தமான செய்தி. மக்களை ஏமாற்றுவதற்கு அரசியல் தேவையில்லை. மக்களை வாழ வைப்பதற்கு தான் அரசியல் தேவை .அரசியல் கட்சிகள் தேவை. இனியாவது இந்த மக்கள் இதை புரிந்து கொள்வார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *