வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவி சுனிதா பாலயோகி பதவி நீக்கம் .

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவி  சுனிதா பால யோகியை  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பதவி நீக்கம் செய்து  உத்தரவிட்டுள்ளார்.

இவர் கணவர் பால யோகி பா ம க கட்சியின் முக்கிய பொறுப்பாளர். இவருடைய மனைவி சுனிதா வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து வந்துள்ளார். இவர் ஊராட்சிக்கு வரி வருவாயில் முறையாக கணக்கு காட்டாமல் ,அதாவது அரசாங்கத்திற்கு 19 லட்சத்து 32 ஆயிரத்து 171 ரூபாய் வரி இழப்பு செய்ததாக அவரை பதவி நீக்கம் செய்துள்ளார் .

 மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அரசியல் தலையீடு இல்லாமல் இதை செய்தால்தான் கிராமங்களில் கிராம ஊராட்சிகள் நிர்வாகம் கிராம மக்களுக்கு சென்று பயனடையும் .மேலும்,கிராமங்கள் என்பது ஊராட்சி மன்ற தலைவர்கள் பட்டா போட்டுக் கொள்ள கொடுக்கப்பட்ட அதிகாரம் அல்ல ,இந்த மாவட்டத்தில் நூற்றுக்கு 99 சதவீதம் இப்படி தான் இருக்கிறார்கள் .

அப்பாவி பொதுமக்கள் இவர்களுக்கு ஆயிரம், 500 க்கு வாக்களித்து விட்டால், இவர்கள் அந்த கிராமத்தில் உள்ள பொது சொத்துக்களை கோடிக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும், ,ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பங்கு போட்டுக் கொள்ளும் வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .அதனால், பல கிராமங்கள் ஊழலில் சிக்கித் தவிக்கின்றன. பொதுமக்கள் கொடுக்கின்ற புகார்கள் கூட இதற்கு முன்னர் இருந்த மாவட்ட ஆட்சியர்அலட்சியம் செய்து வந்தார். அதன் விளைவு

இது போன்ற ஊழல்களால் சமூக மக்களிடையேயும், கிராம மக்களிடையேயும் பிரிவினைகள் ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகளை தட்டி கேட்பவர்கள் மீது காவல்துறையின் பொய் வழக்கு அல்லது அல்லது வேறு பிரச்சனைகளில் பொய் வழக்கு அல்லது சண்டை பிரச்சனை போன்ற வழக்குகள் எல்லாம் இப்படிப்பட்ட ஊழல்கள் கிராமங்களில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது.

 இதை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து ஊழல் செய்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது, நடவடிக்கை எடுத்தால் கிராம மக்கள் மிகவும் ஆவலுடன் வரவேற்க காத்திருக்கின்றனர். அதனால், மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை திருவள்ளூர் மாவட்ட கிராம பஞ்சாயத்துக்கள் மீது அரசியல் தலையீடு இன்றி தொடருமா? – சமூக ஆர்வலர்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *