நாடாளுமன்ற தேர்தலுக்கு! தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடையே உற்சாகமும், விறுவிறுப்பும் இல்லாமல் இருப்பது ஏன்?அரசியல் கூட்டணி கட்சிகளின் நிலைமை என்ன? மக்களின் அரசியல் பார்வை .

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேர்தல் வந்தாலே அரசியல் கட்சிகளிடையே திருவிழா போல் கலைக்கட்டும். ஆனால், இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும், அப்படிப்பட்ட விறுவிறுப்பும், உற்சாகமும் இல்லாமல் அரசியல் கட்சியினர் இருந்து வருகிறார்கள்.

 இதற்கு என்ன காரணம் எம்ஜிஆர்,ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தவரை, இந்த அதிமுக, திமுக அரசியல் கட்சியினர் இடையே தேர்தல் களம் போட்டி மிகுந்து உற்சாகமும், விறுவிறுப்பும் காணப்படும் .தற்போது அது எந்த அரசியல் கட்சியில் இடையேயும் அது காணப்படவில்லை. எதிர்க்கட்சியான அண்ணா திமுகவிற்கு வலுவான கூட்டணி அமையவில்லை .அதேபோல் பிஜேபிக்கும் வலுவான கூட்டணி அமையவில்லை.

ஆனால், திமுக மட்டும் அந்த கூட்டணி கட்சிகளை அப்படியே தக்க வைத்துள்ளது .இருப்பினும், திமுக மக்களின் வெறுப்பு அரசியலை சம்பாதித்து உள்ளது .அது விலைவாசி உயர்வு ,மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, போதைப்பொருள் கடத்தல், டாஸ்மாக் பிரச்சனை, கஞ்சா பிரச்சனை, இது தவிர, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்சனைகள் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக திமுக குத்தகை எடுத்துள்ளது.

இதையெல்லாம் கார்ப்பரேட் ஊடகங்களிலோ அல்லது மேடைகளிலோ,youtube களிலோ, எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிகள் என்று போட்டி போட்டு, இதை பேசி மக்களிடம் தாங்கள் நிரபராதி, நல்லவர்கள், வல்லவர்கள் என்று பேசிக்கொண்டு இருந்தால், மக்கள் நம்பத் தயாராக இல்லை .

மக்களுக்கு எது உண்மை? எது பொய்? என்பது நகரவாசிகளில் 90% தெரியும். அதேபோல் கிராம வாசிகளாக இருக்கக்கூடிய மக்களுக்கு 50 சதவீதத்திற்கும் மேல் உண்மை தெரிய வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுக என்ன தான் தன்னுடைய பேச்சாற்றல் மூலம், மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாலும், அதே திறமையை காட்டி இவர்களுக்கு சார்பான ஊடகங்கள், you tube களிலோ, சொல்லிக் கொண்டிருந்தாலும் மக்கள் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் அளவில் இல்லை. தெளிவான நிலையில் தான் தற்போது வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 இது தவிர, கருத்துக் கணிப்புகள், வாக்காளர்களை விலை பேசும் அதிமுக மற்றும் திமுக இந்த தடவை மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பது ரகசியமாக வைத்திருக்கிறார்கள் . அதனால் ஒவ்வொரு நிலையிலும் அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக நமக்கு வாக்களிப்பார்கள் என்று எந்த அரசியல் கட்சிக்கும் சொல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் ஒரு கடும் போட்டி என்பதை மறுக்க முடியாத உண்மை.மேலும்,

இவையெல்லாம் விட எந்த அரசியல் கட்சியினரும், மக்களிடம் நெருங்கி அவர்களுக்கான குறை நிறைகளை, பிரச்சனைகளை அலட்சியம் செய்தது தான் ,தற்போது மக்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்க கையெடுத்து கும்பிட்டு வந்தால் என்ன? சொல்வார்களோ போன்ற அச்சம் ஒருபுறம், 

மற்றொருபுறம் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கலாம், எப்படியும் பேசி சமாளிக்கலாம். இது எல்லாம் எடுபடுமா? என்பது அவர்களுக்கே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் முழுமையான அரசியல் தெரியவில்லை என்றாலும், மக்கள் மாற்றத்தை நோக்கி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், அதிமுகவும், தேமுதிகவும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியுடன் பிஜேபி சேர்ந்திருந்தால், அது தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியாக அமைந்திருக்கும். தவிர, இவர்கள் பேசிக்கொண்டு தான் நான் இந்த பக்கம் போறேன். நீ அந்த பக்கம் போ. நான் இதிலே சேர்ந்து கொள்கிறேன். நீ அதிலே சேர்ந்து கொள். இப்படி இவர்களுக்குள் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வைத்துக் கொண்டுதான், இந்த கூட்டணிகளை முடித்து இருக்கிறார்கள் .

மேலும், அதிமுகவின் வாக்கு வங்கி ,தேமுதிகவின் வாக்கு வங்கி, இவை எல்லாம் தற்போது நிரந்தரமாக இல்லை .எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் வாக்கு வாங்கி அப்படியே இருந்தது. அது எடப்பாடிக்கு  இல்லை. கொள்கை பிடிப்புடன் இருப்பவர்கள் மாற்றத்தை நோக்கி வந்து விட்டார்கள். அதேபோல், தேமுதிகவிலும், விஜயகாந்த் இருந்தவரை இருந்த வாக்கு வாங்கி பிரேமலதாவுக்கு இல்லை. இப்படி சரிவை சந்தித்துள்ள அரசியல் கட்சிகள், மக்களிடம் என்ன பேசி ?எப்படி சமாளித்தாலும் பெரும்பான்மை மக்களிடம் எடுபடுமா? 

இது தவிர, ஜாதி கட்சிகள் கொங்கு வேளாளர், பாமக, விடுதலை சிறுத்தைகள் புரட்சி பாரதம் போன்ற அனைத்தும் ஜாதி ஓட்டை நம்பி களமிறங்குகின்ற கட்சிகள், அந்த சமுதாயத்திற்கு இதுவரை செய்தது என்ன? என்ற கேள்வி சமுதாயத்தினர் கேட்க ஆரம்பித்து விட்டனர்.மேலும், பாமக வன்னியர்களுக்கு இதுவரை எந்த நலனும் செய்யவில்லை என்று வன்னியர் அமைப்பை சேர்ந்த பல கட்சிகள் ,சங்கங்கள் ஒரு பக்கம் எதிரணியில் நின்று ராமதாஸுக்கு எதிராக களத்தில் இறங்கும் .இவர்களெல்லாம் தேர்தல் களத்தில் ஒரு பக்கம் வாக்கு சிதறடிக்க நினைத்தாலும், அந்த சமுதாயம் இவர்களை நம்ப தயாராக இல்லை.

ஏனென்றால் ஒட்டுமொத்தமாக வன்னியர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று இந்த சமுதாயத்தை விட்டு சாப்பிடுபவர்கள் தான் இருக்கிறார்களே ஒழிய சமுதாய நலனுக்காக ஒருவரும் இல்லை அதனால் வன்னியர்கள் அந்த காலத்தில் இவர்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் வன்னியர்கள் ஓட்டு அன்னையர் இல்லை என்று இப்போது வன்னியர் ஓட்டு வன்னியருக்கு இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. அந்த அளவிற்கு சமுதாயத்தில் இருப்பவர்கள் ஜாதியை விற்று சாப்பிடும் கூட்டமாக தான் இருக்கிறார்கள் என்று விவரம் அறிந்த வன்னியர்கள் பேசி வருகின்றனர். 

அதனால், வன்னியர் சமுதாயம் விழிப்புடன் இருப்பது மிக மிக நல்லது. இந்த சமுதாயத்திற்கு இவர்கள்தான் முதல் எதிரியாக இருக்கிறார்கள். இவர்கள் நல்லதே செய்யவில்லை என்றாலும், தீமைகளை, கெடுதல்களை செய்யாமல் இருந்தாலே இந்த சமுதாயத்திற்கு இவர்கள் செய்யும் சேவை. மற்ற சமுதாயங்கள் இதே போல் ஏமாந்து கொண்டிருக்கும். ஏமாந்தவர்கள் இன்னும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எம் ஜி ஆர் உடைய பாடலை போல் விழித்துக் கொண்டவர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்.ஜாதி அரசியல் கட்சிகளிடம், அந்தந்த ஜாதியினர் விழித்துக் கொள்வது அவசியம்.

 மேலும், மக்கள் விழித்துக் கொண்டதால், அரசியல் கட்சியினர் இப்போது எதைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்? பாமகவிற்கு இட ஒதுக்கீடு பிரச்சனை தான், இந்த சமுதாயத்தை இவ்வளவு நாள் ஏமாற்றி ஓட்டி வந்த பிரச்சனை, திருமாவளவனுக்கு பிஜேபி, ஆர்எஸ்எஸ், பிராமணர்கள் இதை வைத்து ஓட்டி வந்தார்கள். இப்போது எதை வைத்து ஓட்டுவார்கள் என்று தெரியவில்லை? சீமான் ஒரு நாளைக்கு ஒரு விதமாக மாற்றி, மாற்றி பேசிக் கொண்டிருப்பார் .இவர்கள் எல்லாம் பேசுவதற்கு தான் தலைவர்களாக இருக்கிறார்கள் ஒழிய, செய்வதற்கு! தமிழ்நாட்டில் மக்கள் நலனில் அக்கறை உள்ள தலைவர்களை தேட வேண்டி இருக்கிறது.

மேலும், இவர்களெல்லாம் பொய் சொல்லி அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள். எத்தனை நாளைக்கு ஏமாற்றுவார்? இந்த நாட்டிலே! என்பது போல, இந்த பொய்கள் எல்லாம் எவ்வளவு நாளைக்கு, மக்கள் கேட்டு, கேட்டு, ஏமாந்து கொண்டு இருப்பார்கள்? அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு தொகுதியும் கடும் போட்டி என்பதை மறுக்க முடியாத உண்மை .மேலும்,இவர்களுடைய சுயநலத்திற்கு ஜாதி கட்சிகளும், அரசியல் கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .

இங்கே முக்கிய பிரச்சனை என்ன என்றால்! மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். சொன்னது என்ன? செய்தது என்ன? மேலும், மக்களை பேசி, பேசி முட்டாளாக்க முடியுமா? இந்த நிலையில் தான் தமிழ்நாட்டின் .இரண்டாம் தர அரசியல் கட்சிகள் மோடியின் பின்னால் நிற்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் டாக்டர் கிருஷ்ணசாமி ,டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ,ஏ சி சண்முகம் ,ஓ பன்னீர்செல்வம் இப்படி பல பிஜேபியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *