நாட்டில் அரசியல் என்றால் மக்களை ஏமாற்றுவதும், அரசியல் கட்சிகளில் உள்ள ரவுடிகள் அடியாள் வேலை செய்வதும், மேடைக்கு, மேடை சீர்திருத்தவாதிகள் போல் பேசிக் கொண்டிருப்பதும், எங்களை விட உத்தமர்கள் இல்லை என்று சவடால் விடுவதும், வாய் ஜல வித்தைகளில் பெரிய அறிவாளி போல் பேசிக் கொண்டிருப்பதும் ,இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை தமிழ்நாட்டில் சகிக்க முடியாத ஒரு அரசியல். இந்த அரசியலை படிக்காமல் தெரிந்து கொள்ள முடியாது.
இதைப்பற்றி நேற்று கூட ஒரு அதிகாரி என்னிடம் கேட்டார். என்ன சார் எந்த கட்சிக்குதான் ஓட்டுப் போடுவது? என்று புரியலையே, அப்படின்னு கேட்டார். நான் சொன்னேன் ,எந்த கட்சி நாட்டு மக்களுக்கு என்னென்ன செய்திருக்கிறது? எந்த கட்சிக்காரர் அப்பகுதியில் என்ன நன்மை செய்திருக்கிறார்? அவருடைய தகுதி என்ன? அவர் நல்லவரா? கெட்டவரா? அவர் அடாவடியா? ரௌடியா? இல்லை வாயிலே பேசி கவிழ்க்க கூடியவரா ? இப்படிப் பல வித்தைகளை கையாண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அரசியல்.
தேர்தல் நேரத்தில் பெரியார் கொள்கை திருமாவளவனுக்கு மறந்துவிடும்.
ஒரு பக்கம் நம்மால் நம்ம சாதிக்காரன், இன்னொரு பக்கம் ,சிறுபான்மை மக்களை பிஜேபி வந்தால் நமக்கு வாழ வழி இருக்காது. நம்மளை எல்லாம் நாடு கடத்தி விடுவார்கள். அது மதவாத கட்சி. மதத்தை வியாபாரம் செய்வது இந்த சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் தான். இங்கு தான் மத வியாபாரம் நடக்கிறது. ஒரு மதத்தினர் நீ எதற்காக? இந்த மதத்தில் சேருங்கள், நாங்கள் இதை செய்கிறோம், அதை செய்கிறோம் என்று அவர்களை ஏமாற்றுகிறீர்கள். அவர்கள் வந்து இந்த மதத்தில் சேருகிறேன் என்று சொன்னார்களா? இப்படியெல்லாம் தவறை நீங்கள் செய்துவிட்டு, அது தவறு என்று சொல்பவனை தவறானவர்களாக பார்க்க கூடாது.
தமிழ்நாட்டில் ஜாதியை வைத்து அரசியல் கட்சி பெயரில் ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள். .மதத்தை வைத்து அரசியல் செய்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள். இதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் .மதமாற்றம் சிறுபான்மை மக்களை, நீங்கள் இந்துக்களாக மாறுங்கள். உங்களுக்கு இதை தருகிறோம் ,அதை தருகிறோம் என்றால், அது எப்படி இருக்கும்? அதே நிலைமைதான் மற்றவர்களுக்கும் இருக்கும். அது தவறு.
ஒருவர் என்ன மதத்தில் இருக்கிறீர்களோ, அந்த மதத்தில் உங்களுடைய கடவுளை நீங்கள் பாருங்கள். மற்றவர்கள் எந்த மதத்தில் இருக்கிறார்களோ, அவரவர் மதத்தில் அவரவர் கடவுளை பார்க்க வேண்டும் .அதற்கு தான் மதமே தவிர, நீங்கள் மதமாற்றி அரசியல் செய்வதற்கு மதம் இல்லை.மேலும்,எல்லா மதத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். எல்லா மதத்திலும் கெட்டவர்கள் இருக்கிறார்கள். எல்லா ஜாதிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்களைப் போல் நடிப்பவர்களும் இருக்கிறார்கள்.அதனால், விவரமானவர்களிடமும், படித்தவர்களிடமும் அதிக நாளைக்கு நல்லவர்களாக நடிக்க முடியாது.மேலும்,
இந்த தேர்தல்! அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ,மக்கள் நினைத்தால் அவர்களுக்கு முக்கிய பாடமாக காட்ட முடியும். ஏனென்றால் மைக் ,வாய், ஒரு கட்சி கொடி, அடியாள் கூட்டம் போல் கட்சிகாரர்கள், இதை வைத்துக்கொண்டு மக்களை எல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்களாக ,இந்த நாட்டில் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் எல்லாம் அறிவாளிகள். படித்தவன், சிந்திப்பவன் இவன் எல்லாம் முட்டாள்கள். ஊரில் மாடு மேய்த்துக் கொண்டு இருப்பவனை எல்லாம் கட்சியில் சேர்த்து விட்டு ,அவன் சொல்வதை படித்தவன், விஷயம் தெரிந்தவன் எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் எவ்வளவு பெரிய கேவலம்?
இன்றைய படிப்பு என்பது காசு கொடுத்து வாங்கும் படிப்பு ஆகிவிட்டது. அதாவது வெளி மாநிலங்களில் போய் சட்டங்களை படித்துவிட்டு வந்தவர்கள் போல் ,50 ஆயிரம், ஒரு லட்சம் கொடுத்து அந்தப் பட்டங்களை வாங்கி போட்டுக் கொள்கிறார்கள். அவர்களெல்லாம் பார்த்தால், ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து பொறுப்புக்களை வாங்கிக் கொள்கிறார்கள். இல்லையென்றால், கட்டப்பஞ்சாயத்து, ஊழல் மந்திரிகளை ,அரசியல் கட்சிக்காரர்களை சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கி கொடுக்க தகுதி இல்லாதவர்கள் அவர்களை வெளியில் கொண்டுவர புரோக்கர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .இவர்களால் நீதித்துறையும், நீதிமன்றமும் கேவலப்பட்டு கொண்டிருக்கிறது. இதையெல்லாம் களை எடுத்தால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாட்சி கிடைக்கும் . இது ஒரு பக்கம்,
மற்றொரு பக்கம், அரசியல்வாதிகளின் பொய்களை எல்லாம் பெரிய தொலைக்காட்சி ,பெரிய பத்திரிக்கை என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பேக்கேஜ், இந்த தேர்தல் முடியும் வரை எத்தனை லட்சம் என்று ஒவ்வொரு தொகுதிக்கும் பேசிக் கொள்வார்கள்.இதையும் செய்தி துறை சர்குலேஷன் என்று எங்களை எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.நாட்டில் இந்த சமூகத்தில் உள்ள அவலங்களை கஷ்டத்துடன் போராடி மக்களிடம் கொண்டு சேர்ப்பது சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள்.
ஆனால் ,அவர்களுக்கு எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுக்க மாட்டார்களாம். அரசியல்வாதிகள் பொய்களை விளம்பரப்படுத்திக் கொண்டு, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருப்பது போல் ,சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளை ,சர்குலேஷன் விதிமுறையை வைத்து ,பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருப்பார்களாம். இதை எங்களைப் போன்ற பத்திரிகை துறையை படித்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.மேலும், மக்களை ஏமாற்றுவது போல் எங்களையும், தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்க செய்தி துறையை விட மாட்டோம்.
நேற்று கூட மத்திய அரசின் செய்தித்துறை உயர் அதிகாரியை சந்தித்தேன். அவரும் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டார். இப்படி ஒரு பத்திரிகை நடத்தும் எங்களுக்கே நீதி கேட்டு போராட வேண்டி இருக்கிறது என்றால், மக்கள் ஒவ்வொரு விஷயத்திலும், அவர்கள் இந்த அரசியல்வாதிகளுடனும், அரசியல் கட்சிகளுடனும் எவ்வளவு போராட வேண்டி இருக்கும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள் .நீங்கள் முட்டாள்களாக இருக்கும் வரை,இப்படிப்பட்ட அரசியல் உங்களை மேலே வரவிடாமல் அழித்துக் கொண்டே இருக்கும். நீங்கள் விழித்துக் கொண்டால், அவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.
அதனால், மக்கள் இனி விழித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் எஜமானவர்களாக இருக்க வேண்டும். யாரை தேர்வு செய்வது? யாருக்கு வாக்களிப்பது? யாருக்கு வாக்களிக்கக்கூடாது? என்பதை கட்சியை தூக்கி எறிந்து, சமூக உணர்வோடும் ,மக்களின் நலன்களில் அக்கறை உள்ளவர்களுக்கு மட்டுமே, வாக்களிக்க வேண்டும் .
இங்கே அதற்கு எத்தனை பேர் தகுதியானவர்கள்? என்பதை எந்தெந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். சீமானைப் போன்ற வாய்ப் பேச்சாளர்கள் எல்லாம் அரசியல்வாதி அல்ல. அரசியல் கட்சி தலைவனும் அல்ல. இப்படிப்பட்டவர்களை ஒரு கூட்டம் ஏற்றுக் கொள்கிறது என்றால், அது கொள்கை அற்ற கூட்டம். வெத்து வெட்டு கூட்டமாக தான் இருக்கும்.தற்போது இந்த கட்சியில் பட்டத்தை காட்டுகின்ற வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார்கள். பட்டம் இதற்கு பெரிதல்ல, தகுதி,மனசாட்சி, நேர்மை, சமூக ஈடுபாடு, இதுதான் தேவை. இது இல்லாமல் பட்டதாரிகள் பேசுவது, படிக்காதவர்கள் பேசுவது, அவர்களுடைய திறமையும், தகுதியும் அதுதான் என்று முடிவு செய்துவிடக் கூடாது. இவர்கள் ஜெயித்து யாரை பிரதமர் ஆக்க போகிறார்கள் ?
அர்த்தம் தெரியாத அரசியலுக்கு மக்கள் சிந்திக்கவில்லை என்றால், எப்படியும் பேசுபவர்களிடம், எப்படியும் பேசி நடிப்பவர்களிடம், தமிழகத் தேர்தல் களம் ஒரு ஏமாற்று வேலை என்பதை எப்போது வாக்காளர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள் ? எப்படியும் பேசுவது அரசியல் அல்ல ,அது திறமையும் அல்ல ,அது ஏமாற்றும் வேலை .அதனால் தேர்தல் என்பது அரசியல் கட்சியினருக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ,மக்கள் வைக்கின்ற ஒரு கடும் பரிட்சையாக இருக்க வேண்டும் . அது தான் இந்த நாட்டில் வாக்காளர்களின் வலிமை. மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டு இருந்தால், வருங்கால இளைய சமுதாயத்தின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.
மேலும்,எவன் ஒருவன் ஜாதி, ஜாதி என்கிறானோ அவன் அந்த ஜாதியை விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறான். எவன் ஒருவன் மதம், மதம் என்று சொல்கிறானோ, அந்த மதத்தை விற்று அவன் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறான் .இதுதான் தமிழ்நாட்டின் ஜாதி கட்சிகளும், மதவாத கட்சிகளும் ,மக்களிடம் செய்து கொண்டிருக்கிறது.
அதனால், ஜாதி, மதம் எல்லாம் நம்முடைய உறவுகளில் பெண் கொடுக்க, பெண் வாங்க நல்லது ,கெட்டதுகளில் கலந்து கொள்ள மட்டுமே இருந்ததை தமிழ்நாட்டில் ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இரண்டு சமுதாயமும் விழித்துக் கொள்வது நல்லது . அதனால், ஜாதியை வைத்து அரசியலோ அல்லது மதத்தை வைத்து அரசியலோ இல்லை. நல்ல மனிதர்களை, மனசாட்சியுடன் பேசுபவர்களை, நல்ல உள்ளங்களை வைத்து தான் அரசியல் இருக்க வேண்டுமே ஒழிய, இதையெல்லாம் பார்த்து அரசியலை தேர்வு செய்தால்! நாடு சுடுகாடாக மாறிவிடும் .முடிவு உங்கள் கையில் !