நாட்டில் முதன்முறையாக நடுநிலையான பத்திரிகையாளர்கள் மீது கஞ்சா வழக்கு ,பொய் வழக்கு போட்டால் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் – நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜ் .

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மே 07, 2024 • Makkal Adhikaram

நாட்டில் பத்திரிகையாளர்கள் மீது, செய்தியாளர்கள் மீது, பொய் வழக்கு போட்டால் கேட்பதற்கு ஆள் இல்லை என்று தான் காவல்துறையை வைத்து ஆளும் கட்சியினர் செய்கின்ற ஒரு கேவலமான வேலை.இதில் வசதி வாய்ப்பில் மிதக்கின்ற கட்சி சார்ந்த செய்தியாளர்கள் மற்றும் கட்சி சார்ந்த பத்திரிகைகள் கட்சி புரோக்கர் வேலை செய்து கொண்டு, கரை வேஷ்டி ஒன்று தான் கட்டாமல் இருப்பார்கள் ,அவர்களும் தன்னை பத்திரிகையாளர், செய்தியாளர் என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள். இது பத்திரிகை உலகத்தை ஏமாற்றக்கூடிய வேலை . 

ஆனால், நடுநிலையான பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், பத்திரிகைகள் இந்த கட்சியினர் செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுவதும், ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டுவதும், அது பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் கடமை. அவர்கள் மீதுதான் பொய் வழக்குகள், போராட்டங்கள், சூழ்ச்சிகள் பின்னப் படுகிறது. அது பத்திரிக்கை துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு. 

மேலும், காவல்துறை அதிகாரிகளை திருடனை பிடிக்காதே ,தவறு செய்பவர்களை பிடிக்காதே, சமூக குற்றவாளிகளை பிடிக்காதே, கஞ்சா விற்பவனை பிடிக்காதே, அப்படி என்றால் அந்த துறை எதற்கு ? அதேபோல்தான் பத்திரிக்கை துறையும், எங்களுக்கு அரசியல் கட்சிகள் முக்கியமல்ல, மக்கள்தான் முக்கியம் . மக்களுக்காக தான் பத்திரிக்கை. அதனால் ,அது காவல்துறையாக இருக்கட்டும், ஆட்சியாளர்களாக இருக்கட்டும் ,அரசியல் கட்சியாக இருக்கட்டும், மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து செய்திகளை வெளியிடுவது சமூக நலன் அக்கறையுள்ள பத்திரிகைகள். 

அப்படிப்பட்ட பத்திரிகைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இருக்கிறது. அதையும் பொய் வழக்கு போட்டு மிரட்டுவது அல்லது கஞ்சா வழக்கு போட்டு மிரட்டுவது என்பது நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று . மேலும், அவர்கள் சுட்டிக்காட்டும் போது அதை ஆளும் கட்சியினர், ஆட்சியாளர்கள் சரி செய்து கொள்ள வேண்டியது அவர்களுடைய பொறுப்பு மிக்க கடமை. எதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்திருக்கிறார்கள்? அது கூட தெரியாமல் நீங்கள் அந்த பொறுப்பில் இருப்பது வீண். ஆட்சி ,அதிகாரம் நிலையானது அல்ல. 

கடவுள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் .அதை சரியாக செய்யவில்லை என்றால், அவர் கொடுத்த பொறுப்பை அவரே எடுத்து விடுவார். அதே போல் தான், எங்களுக்கு கடவுள் இட்ட பணி இதுதான். இதை நாங்கள் சரியாக செய்யவில்லை என்றால், அதனுடைய தண்டனை எங்களுக்கு உண்டு .அதே போல் தான் ஒவ்வொருவருக்கும் என்னென்ன பணிகளை கடவுள் இங்கே எந்த வேலைக்கு அனுப்பி இருக்கிறாரோ ,அந்த வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டும் .அதில் சில தவறுகள் ஏற்படலாம் . அது தெரியாமல் நடந்ததை அதையும் சரி செய்து கொள்ள வேண்டியதுதான் . 

(தமிழ்நாடு செய்தித் துறை அதிகாரிகள் பத்திரிக்கை துறை எந்த நோக்கத்திற்கு ஆனது என்பதை இப்போது புரிந்து கொள்வார்களா ? )

அதனால் ,இந்த கட்சி ,ஆட்சி இது எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை . ஏனென்றால், இங்கே கட்சியில் இருப்பவர்கள் சமூக ஆர்வலராகவோ அல்லது சமூக சேவகாரரகவோ இருந்தால் பரவாயில்லை. ஆனால், ரவுடிகளும், சமூகவிரோதிகளும், ஊழல்வாதிகளும், வியாபாரிகளும், இவர்களை எல்லாம் கட்சி என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அது முட்டாள் பத்திரிகையாளர்கள், முட்டாள் பத்திரிகைகள் ஏற்றுக் கொள்ளும். நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் .எங்களுக்கு தேவை, நீங்கள்  எதற்காக வந்திருக்கிறீர்களோ, அந்த வேலையை சரியாக செய்து விட்டுப் போங்கள் . இது நடுநிலையான பத்திரிகையாளர்களின் மனநிலை என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .மேலும்,

பத்திரிகையாளர்களை நசுக்க வேண்டும் என்றால், அது ஜனநாயகத்தை நசுக்கியதாக அர்த்தம் . உச்சநீதிமன்றம் ஊழலுக்கு எதிரான போராடுகின்ற பத்திரிகைகள் மீது பொய் வழக்கு போட்டால், போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், அவர்களே மாட்டிக் கொள்வார்கள். இதற்காக கஞ்சாவை தேடுவது, அல்லது குற்றப் பின்னணியை ஏதாவது தேடுவது, இது எல்லாம் சரியான வேலை அல்ல . உங்களுடைய தவறை சரி செய்து கொண்டு, மக்கள் பணியை செய்யுங்கள் . 

மேலும், இன்று நடுநிலையான, நேர்மையான பத்திரிகைகளுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜ் சொன்ன பல விஷயங்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன் . அவர் எந்த ஒரு கருத்தையும், ஆணித்தரமாக தெரிவிக்கிறார் .அதில் உண்மை உள்ளது. வெளிப்படுத்த தன்மை உள்ளது. இதுதான் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களின் பலம் . தற்போது இவர் நடுநிலையான பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு போட்டால், சட்டப்படி எதிர்த்து குரல் கொடுத்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று சொல்லி இருப்பது மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *