மக்களுக்கான அரசியல் எது? கார்ப்பரேட் ஊடக அரசியல் வியாபாரத்தில் மக்கள் ஏமாறும் அரசியல் வித்தை என்ன ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 02, 2024 • Makkal Adhikaram

அரசியலில் நடக்கின்ற உண்மைகள் ,வரலாறுகள் மக்களுக்கு 90 சதவீதத்திற்கு மேல் மறைக்கப்பட்டு வியாபார நோக்கமாக இந்த கார்ப்பரேட் ஊடக அரசியல் வியாபாரம் தொடர்ந்து 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலில் இருந்து வருகிறது.இந்த உண்மைகள் பத்திரிக்கையில் மூத்த பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களுக்கு கூட தெரியாது.இவர்களுக்கே தெரியாதது, மக்களுக்கு எப்படி தெரியும் ? இதுதான் அரசியல் ஊடக வியாபார வித்தை . இந்த வித்தையை பயன்படுத்தி ஊடகமும் வியாபாரம் செய்கிறது. அரசியல் வியாபாரமும் நடக்கிறது. அதனால் தான் மக்கள் அரசியலைப் பொருத்தளவில் ஏமாந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.மேலும்,

மக்களுக்கு தேர்தல் என்றால் அதிமுக, திமுக இந்த இரண்டு கட்சிகள் தான்  தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பார்கள். உதயசூரியன் மற்றொன்று இரட்டை இலை இப்படி மாறி ,மாறி ஓட்டுக்களை போட்டு இன்று தமிழ்நாட்டின் அரசியல் மிகப்பெரிய ஊழல் களமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டின் இந்த கார்ப்பரேட் ஊடகம்ப அரசியல் வியாபாரம் இரண்டு அரசியல் கட்சிகள் என்ன சொல்கிறார்களோ அதை தான் செய்தியாக .போட்டுக் கொண்டிருப்பார்கள் .

இன்னும் கேட்டால் செய்தித் துறையில் இருந்து ஒரு சில பேப்பர்களுக்கு இந்த தலைப்பு தான் வைக்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். இதுதான் கார்ப்பரேட் பத்திரிகை சுதந்திரம் என்று இரண்டு பேரும் சேர்ந்து மக்களிடம் ஊடக வியாபார அரசியல் நடத்திக் கொண்டிருப்பார்கள். இது எதனால்? நாட்டில் ஊழலை ஊக்குவிக்கும் இந்த அரசியல் வியாபாரம் .இதுவும் ஒரு கட்சிக்கு ஆதரவாகவும், ஒரு கட்சிக்கு எதிராகவும் இரண்டு பிரிவுகளில் இந்த ஊடக அரசியல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும்.

இது ஏனென்றால் ஊடகங்களுக்கு தேவை சலுகை, விளம்பரங்கள் அது வாங்கிக் கொண்டால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதை கேட்டு நடந்து கொள்வது தான் இந்த ஊடக அரசியல் வியாபாரம். இது மக்களின் வரிப்பணத்தில், மக்களுக்கு எதிராகவே இந்த செய்திகள், உண்மைகள் மறைக்கப்பட்டு வந்துள்ளது .அரசியலில் எப்படி மக்களுக்காக பேசுகிறார்களோ, அதே நிலைமைதான். அதாவது நாங்கள் தான் பெரிய பத்திரிக்கை, நாங்கள் தான் அரசின் அங்கீகாரம் பெற்றவர்கள் .இப்படி எல்லாம் ஒரு ஊடக பிம்பத்தை தமிழ்நாட்டில் இந்த பத்திரிக்கை, ,தொலைக்காட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். இதிலிருந்து மக்கள் வெளிவர வேண்டும் .

மேலும்,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள்கொடுக்காமல் பிரஸ்மீட்டில் எங்களை புறக்கணித்து வருவதன் நோக்கம் மக்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும் செய்தி துறையின் நோக்கம் புரிந்ததா ? பத்திரிகையின் சமூகநீதி இதுதானா? அரசின் ஊழல்கள், அடாவடித்தனங்கள், ரவுடிசங்கள், கட்டப்பஞ்சாயத்துகள், காவல்துறையின் அடக்குமுறைகள், இவையெல்லாம் மொத்தமாக மக்களுக்கு வெளிவராது. ஏனென்றால் எங்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால், இந்த உண்மைகள் மக்களிடம் கொண்டு சேர்த்து விடுவார்கள்.இதை மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து தான் செய்கிறார்கள்.

இது அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உள்ள பயம் அடுத்தது இந்த கார்ப்பரேட் ஊடக வியாபார அரசியல் மக்களிடம் அவர்களுடைய வியாபாரம் படுத்துக் கொள்ளும். இப்போதே 90% காலி. இதில் எங்களுக்கெல்லாம் அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால், இவர்கள் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். அதனால்தான் திமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் கார்ப்பரேட் ஊடக செய்தியாளர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள். அதில் உள்ள பத்திரிக்கை ஆசிரியர்கள், வெளியிட்டார்கள் இவர்கள் மட்டும்தான் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். 

அப்படி என்றால் எங்களுக்கான உரிமை எங்கே? ஒருவர் இருந்தால்தான் அதைக் கேட்க முடியும். இதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் வலியுறுத்தி வருகிறேன்.இதுதான் தொடர்ந்து அதிமுக, திமுக ஆட்சியில் தொடர்ந்து இருந்து வருகிறது. அதனால்தான் இந்த சமூக நீதி பத்திரிக்கை துறையில் வேண்டும் என்று தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடி உள்ளது.மேலும்,

 மத்தியில் ஆட்சியில் இருந்த  காங்கிரஸ் கட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் மறைக்கப்பட்டது. அதிலிருந்து சில வெளி வந்திருக்கலாம். முழுமையாக இந்த ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. அவை எஃப் ஐ ஆர் அளவுக்கு போனால் தான் அதில் வெளிவரும். அதுவரை வராது. இது தவிர, சுதந்திரத்திற்கு முன்,சுதந்திரத்திற்கு பின், இந்தியாவின் வரலாறுகள் மறைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வந்துள்ளது . 

காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள பெரும்பான்மை  இந்துக்களுக்கு துரோக அரசியல் வரலாற்றை தான் கொடுத்து வந்துள்ளது . அது மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் முஸ்லிம்களின் அது பி டீம் ஆகவே செயல்பட்டு வருகிறது. அதற்கு காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன? என்பது எடுத்து வைத்தாலே இந்த உண்மை இந்திய மக்களுக்கு புரிய வரும்.

காங்கிரஸ் ஆட்சியில் வங்கதேசம் உருவாகி இருக்கிறது. காஷ்மீருக்கு 370 சட்டம் கொண்டுவரப்பட்டது .சிறுபான்மையினர் மசோதா, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், சிறுபான்மையினர் அமைச்சகம், சிறுபான்மையினர் பல்கலைக்கழகம் ,இவை எல்லாம் முஸ்லிம்களுக்காக காங்கிரஸ் ஆட்சியில் செய்த வரலாற்று உண்மை .மேலும் இவர்கள் மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம் மதத்திற்கு இவர்கள் ஒரு நாட்டையே அடிமைப்படுத்திக் கொண்டிருப்பார்கள். 

இதைவிட ஒரு கொடுமை பெரும்பான்மை மக்களான இந்துக்களை நேரு இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற கோட் மசோதா என்ற சட்டத்தை கொண்டுவர நேரு அதிக முயற்சி எடுக்க ,அதை சர்தார் வல்லபாய் பட்டேல் எதிர்த்து கடுமையாக எச்சரித்தார் .அதைக் கொண்டு வந்தால் நாடு முழுவதும் தெருவில் இறங்கி இந்துக்களோடு சேர்ந்து போராட்டம் நடத்துவேன் என்று பட்டேல் அச்சுறுத்தியதன் காரணமாக நேரு அந்த மசோதாவை கைவிட்டார். அப்போதே நேருவை முஸ்லிம் ஆதரவாளர் என்று தெரிவித்தார்கள். 

அப்படி என்றால் இந்த இந்தியா கூட்டணியில்  உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ் இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், கிறிஸ்துவ மிஷனரிகள் இவை அனைத்தும் இந்துக்களுக்கு எதிராக இந்த நாட்டை கூறு போட்டு குறிப்பாக இந்துக்களை அழிக்க திட்டமிட்டுள்ளதா? அதனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் உண்மை தெரியாமல், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா ? நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி போல் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

பொய்களை உண்மையாக, உயர்வாக சித்தரிக்கும் போது, ஊடக அரசியல் வியாபாரம் நடக்கிறது. உதாரணத்திற்கு ஒரு விவசாயி தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை மக்களுக்கு நேரடியாக வைக்கிறான். ஆனால், அதே கார்ப்பரேட் கம்பெனி அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, வியாபாரம் செய்கிறது. இந்த வியாபாரத்தில் அந்த பொருளின் தரம் என்ன? அவர்கள் சொல்லும் தரத்தின் உண்மை என்ன? யாருக்கு தெரியும் ?இதுதான் கார்ப்பரேட் வியாபாரம். இந்த வியாபாரம் தான் தற்போது மக்களை அரசியலில் ஏமாற்றும் ஊடக வியாபாரம். அதனால்,

இந்துக்கள் அனைவரும் அரசியல் கட்சி பேதமின்றி, ஒன்றிணைந்து மோடியின் கரத்தை வலுப்படுத்தினால் தான், நம்முடைய பாரம்பரியமும் ,கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் பாதுகாக்க முடியும்.

இந்த கார்ப்பரேட் ஊடகப் பொய்கள் சொல்லுகின்ற செய்திக்கும், இவர்களுடைய செயல்பாட்டுக்கும் சம்பந்தமே இருக்காது என்பதை ஒவ்வொன்றாக சொன்ன உண்மைகளை சிந்தித்துப் பாருங்கள். இல்லையென்றால் வருங்காலம் இவர்களால் இந்துக்களுக்கு ஆபத்தும், வாழ்க்கையும் கேள்விக்குறியாக்குவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.எனவே, ஊடக வியாபாரத்தின் பின்னால் சென்றால்,  அதில் அரசியல் என்பது பொய்களின் மாயத் தோற்றம் என்பதை ஏமாந்த பிறகாவது சிந்திப்பீர்களா ? மேலும்,

தமிழ்நாட்டில் மக்களுக்கான அரசியல் 1965க்கு முன்னாள், தகுதியானவர்கள் அரசியலுக்கு வந்தார்கள் .அதன் பிறகு எப்போது அரசியல் கட்சிகளில் ரவுடிகளுக்கு பொறுப்புகளை கொடுத்து, அடியாட்களுக்கு தகுதியானவர்களை எல்லாம் கட்சிக்காரர்களாக மாற்றினார்களோ அப்போதே அரசியல்! மக்களுக்காக இல்லை.தவிர ,அடாவடி பேர்வழிகளையும், வாய்ப்பேச்சாளர்களையும் நம்பி அரசியலில் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் மக்களுக்கு தேவையற்ற அரசியல் . 

இது தவிர, முஸ்லிம் தீவிரவாதிகள், குண்டர்கள், ஏமாற்று பேர்வழிகள்,போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு அரசியல் கட்சிகளில் பொறுப்புகளை கொடுப்பது, இவர்களுக்கு எல்லாம் அரசியல் கட்சியின் மறைமுக ஆதரவு கொடுப்பது, பேசுவதற்கும், செயல்படுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது, இவை எல்லாம் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பில் இருந்து கொண்டு, மக்களுக்கான அரசியல் நடத்த முடியுமா ? அப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் துணை போகும் கார்ப்பரேட் ஊடகங்கள்

ஒரு வெத்து விளம்பர அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் மக்களை அரசியலில் ஏமாற்றும் வித்தை. தற்போது கார்ப்பரேட் ஊடகங்களின் மைக்குகளை வைப்பதற்கு கூட இடமில்லாமல் செய்தியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு நிற்கிறார்கள். .மேலும்,எது மக்களுக்கான அரசியல்?

இந்தியாவில் ஒரு சாதாரண குடிமகனாக காமராஜருக்கு பிறகு ,இன்று பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி .அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். பிரச்சனைகளை அவரிடம் சொல்லலாம். .அதுபோல் தமிழ்நாட்டில் முதலமைச்சர்கள் இல்லை.எங்களைப் போன்றோர் கூட சந்திக்க முடியாதது மிகப்பெரிய வருத்தம் தான். இதுதான் மக்களுக்கான அரசியலா? .இந்த அரசியல் வேண்டுமென்றால் மக்கள் கார்ப்பரேட் ஊடக அரசியல் பிம்பத்தில் இருந்து சமூக நலன் ஊடக அரசியலுக்கு மாறுங்கள்.மக்களுக்கு இப்போதாவது சமூக நலன் ஊடகங்களின் உண்மையும். அதன் அருமையும் புரிந்ததா? 

மேலும், ஸ்டாலின் ஆட்சி! இது மக்களுக்கான ஆட்சி அல்ல, மக்களுக்காக ஆட்சி என்று சொல்வது,கார்ப்பரேட் ஊடகங்கள். ஆனால், நடத்துவது இவர்கள் குடும்பத்திற்கும், இவர்கள் கட்சியினருக்குமான அரசியல். இதுதான் ஊடக வியாபார அரசியல். இதில் இவர்களுக்கான ஊடகங்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும், அதற்கு முட்டுக்கொடுத்து, செய்திகளை போட்டு, மக்களிடம் காட்டுவார்கள். இந்த உண்மை, அரசியல் தெரிந்தவர்களுக்கான உண்மை .

அரசியல் என்பது மக்களின் சேவைக்கானது அது மக்களை வைத்து வியாபாரம் செய்வதற்கு மக்களின் அதிகாரம் வாக்களிக்க பல ஆயிரம் கோடி செலவு செய்து இந்திய அரசாங்கம் தேர்தல் நடத்த தேவையில்லை என்பதை மக்களும் அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்து மீண்டும் அடுத்த காணொளியில் மக்கள் அதிகாரம்  மக்களுக்கான செய்திகளில் சந்திப்போம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *