ஜூலை 20, 2024 • Makkal Adhikaram
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மத்திய அரசால் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வழக்கறிஞர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதற்காக வழக்கறிஞர்கள் சங்கம், சில போராட்டங்களையும் நடத்திய உள்ளது. இதில் என்ன குளறுபடிகள் இந்த சட்டத்தில் உள்ளது? மேலும், இது பற்றி இந்த சட்டம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அது பற்றி மத்திய அரசு ஒரு காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி ஒரு தரப்பு இந்த சட்டத்தின் விளக்கத்தை மத்திய அரசு! மக்களிடத்தில் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். அல்லது நீதிமன்றத்திலாவது இது பற்றி விளக்கி இருக்க வேண்டும். அதுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு.
மேலும், இது சம்பந்தமாக ஜூலை 29ஆம் தேதி டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக ரகசிய தகவல். அதனால், பிஜேபியின் ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தலாம் என்பது எதிர்க்கட்சிகளின் ஒரு அரசியல். ஆகக் கூடி இந்த சட்டத்தில் நீதிமன்றத்தில் மக்கள் வய்தா வாங்கும் வேலை அதிகம் இருக்காது. சம்பந்தப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்திற்கு கூட அதிகம் செல்ல வேண்டி இருக்காது. எல்லாமே டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வேலையில், நீதிபதிகளும் கான்பரன்ஸ் மூலம் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு விசாரிக்கலாம்.
மேலும், வழக்கு விசாரணையும் ,காணொளி மூலமே நடத்திக் கொள்ளலாம். நிலையத்தில் கைகட்டி கொண்டு, நாள் பூராவும் போய் மக்கள் நிற்க வேண்டிய அவசியமில்லை .இருதரப்பு விசாரணையும், காவல்துறை அதிகாரிகள் காணொளி மூலம் நடத்தலாம். அது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட இடத்தில் நடந்த குற்றங்களுக்கு, பொதுமக்கள் ஆன்லைனில் குற்றங்களை பதிவு செய்யலாம். இதனால், தங்களுடைய வழக்கறிஞர் தொழில் பாதிக்கிறது என்பதுதான் இப்போதைய இந்த சட்டத்தின் மூலம் வழக்கறிஞர்களின் மிகப்பெரிய ஒரு போர் கொடி. அவர்களுடைய வருமானம் இதை நம்பி தான் இருக்கிறது.
மக்களே நேரடியாக அவர்களுடைய வழக்கை நடத்திக் கொள்ளலாம். இப்படிப்பட்ட சட்டங்கள் கொண்டு வந்தால், எந்த வழக்கறிஞர்கள் தான் இதை ஏற்றுக் கொள்வார்கள்? இதை மனசாட்சி உள்ள வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 75 சதவீதத்திற்கு மேல் கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் போய் காவல் நிலையத்தில் நின்று, காவல்துறையோடு இந்த பஞ்சாயத்துக்களை நடத்தினால் தான், இருவருக்கும் வருமானம்.
இதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்தால், அதை எப்படி அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? இந்த பிரச்சனைக்கு மாநிலங்கள் முழுதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆதரவு என்பது மனசாட்சி உள்ள வழக்கறிஞர்கள் தான், இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அது மிகவும் குறைவாகத்தான் உள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்தை மத்திய அரசு எப்படி கையாள போகிறது? என்பதுதான் மிகப்பெரிய சவால்.