உச்சநீதிமன்றம் பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சில் பொறுப்பாளர்கள் குற்றப் பின்னணி தேர்வு குறித்து தாமாக முன்வந்து (Suo motu) வழக்கு .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 22, 2024 • Makkal Adhikaram

நீதித்துறையில் பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சில் தேர்தல்கள் தகுதியான வழக்கறிஞர்கள் கொண்டு தேர்வு நடைபெறுகிறதா ?

மேலும், வாக்களிக்கும் தகுதி உடைய வழக்கறிஞர்கள் யார்? யார்? என்பதை ஒரு வரைமுறைப்படுத்த வேண்டும் .அதன் பிறகு, அவர்கள் தான் நீதித்துறையில் பார் அசோசியேஷன்  மற்றும் பார் கவுன்சில் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்பதை முறைப்படுத்தினால் தான்  குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாரும் வர முடியாது .மேலும், பணம் கொடுத்து, பரிசு பொருட்கள் கொடுத்து நீதி துறையில் பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சில் தேர்தல்கள் நடக்க வேண்டிய அவசியம் என்ன ?மேலும்,

நீதித்துறையின் பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சில் பொறுப்பாளர்கள் தேர்வுகள் நடக்கும்போது நான் பார்த்தவரை அது ஒரு அரசியல் கட்சிகள் தேர்வுகளைப் போன்று தான் இருந்துள்ளது. 

முதலில் இதற்கெல்லாம் தகுதியான வழக்கறிஞர்கள் இருக்கிறார்களா? அவர்கள் எத்தனை வழக்குகள் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள்? மேலும், 50 ஆயிரம், ஒரு லட்சம் கொடுத்து செர்டிபிகேட் வாங்கி வந்து பதிவு செய்யக்கூடிய வழக்கறிஞர்கள் எல்லாம் ஓட்டு போட அனுமதித்தால்! உண்மையாகவே படித்து ,திறமையும் ,தகுதி உள்ள வழக்கறிஞர்களின் நிலைமை அங்கே கேள்விக்குறியாக நிற்கிறது.மேலும், 

இதற்கு விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பத்திரிக்கை துறையில் இது போன்ற நிலைமை தான் .அதாவது, அவன் பத்திரிக்கை பற்றி தெரியுமா? தெரியாதா? என்பது இங்கே பெரிய விஷயம் அல்ல என்று, தானும் கழுத்தில் ஒரு பத்திரிகையின் அடையாள அட்டையை மாட்டிக் கொண்டிருப்பான். அது 5000 கொடுத்து கூட வாங்கி இருக்கலாம்.தவிர, 10 லைன் எழுத தெரியாதவர்கள் கூட செய்தியாளர் என்கிறார்கள்.அப்படி அந்த அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கும் பத்திரிகைகள், பத்திரிகை நடத்த தகுதியற்றவர்களாக தான் இருப்பார்கள்.

 ஏனென்றால் தகுதியானவர்கள் நிச்சயம் இவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு ,இந்த அடையாள அட்டையை விற்க மாட்டார்கள் .மேலும் இவர்களும் ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்கிறார்கள் . இவர்களால் எந்த ஒரு செய்தியும் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அப்படி செய்தி போட்டாலும் ,ஆளும் கட்சிக்கு ஆதரவாக வரக்கூடிய செய்திகளை எடுத்து காப்பீட்டு பேஸ்ட் பத்திரிகைகளாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

இவர்களுடைய வேலையே கட்டப்பஞ்சாயத்து, காவல்துறையினருடன் நெருக்கம், கமிஷன் பார்ப்பதுதான் இவர்களுடைய வேலை. இதே நிலைமைதான் படிக்காமலே வழக்கறிஞர்களாக பணம் கொடுத்து வாங்கிய வழக்கறிஞர் பட்டம் ,இதே நிலைமைதான் .இவர்களில் பெரும்பாலும் அரசியல் கட்சி சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது தவிர, ஜாதி கட்சி வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் ஜாதியையும் முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்கள் .அறிவைக் காட்ட வேண்டிய இடத்தில், அறிவை விட உயர்ந்ததாக உடம்பை பெரிதுபடுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும், சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ இல்லையோ ,எங்கு போனாலும் ஜாதிக்கு முக்கியத்துவமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இதை உச்சநீதிமன்றம் சரி செய்ய வேண்டியது அவசியம். நாட்டில் பத்திரிக்கை துறையும், நீதி துறையும் சரி செய்தால்தான், சட்டத்தின் மதிப்பு, நாட்டு மக்களின் உழைப்பின் முன்னேற்றம், அதற்கான தகுதி, சமூகத்தில் உயர்த்தப்படும் .இங்கே ஒவ்வொரு துறையிலும் போலிகள் அதிகரித்துள்ளதால், அதைப் பற்றி அரசாங்கம் கவலைப்படாமல் இருந்து வருகிறது. நீதித்துறையால் மட்டும் தான் ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்கள், ஊழல்கள், அரசியல் கட்சிகளின் அடாவடித்தனங்கள், காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை தடுக்க முடியும் . அதனால், நீதித்துறை வழக்கறிஞர்கள் அமைப்புகளை சீரமைப்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திற்கு இது பயனுள்ளதாக அமையும்.மேலும்,

உச்சநீதிமன்றம் பார் அசோசியேஷன் பொறுப்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பதால், அவர்களை தேர்வு செய்வது நீதிமன்றத்தின் செயல்பாடுகள் பாதிக்கும். அதுபோன்ற பல்வேறு அம்சங்களை உச்ச நீதிமன்றம் விரிவாக ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது .மேலும், உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 21 நாடு முழுவதும் உள்ள பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சல்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைகளை கோரியுள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் தீபங்கர் தத்தா  ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு பார் கமிஷன் தேர்தல்களின் போது வேட்பாளர்கள் நடத்தும் பெரும் செலவுகள் மற்றும் சேர்கைக்கான தன்னச்சையான அளவுகோல் மற்றும் வழங்கப்படும் மோசமான வசதிகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி உள்ளது.மேலும், 

 உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து, இது போன்ற பொறுப்பு மிக்க கடமைகளை செய்து வருவதை மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் வரவேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *