செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram
சென்னை: 10வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் கொடுக்க சென்ற பெற்றோமீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சென்னை உயர்நீதி மன்றம் தானாகவே (சூமோட்டோ) வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த சம்பவம் அண்ணாநகர் காவல்நிலையத்தில் நடைபெற் றுள்ளது. இந்த சம்பவம் காவல்துறையினர் நடவடிக்கை மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மேலும்,
கட்டுமான தொழிலாளியின் 10 வயது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நிலையில், புகார் கொடுக்க சென்ற சிறுமியின் பெற்றோரை இரவெல்லாம் வைத்து விசாரித்ததுடன், அவர்களை தாக்கியதாக அண்ணா நகர் மகளிர் போலீசார் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து பதிவு செய்துள்ளது. இது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வில், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர், ஆஜராகி , கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் கட்டுமான தொழிலாளியின் 10 வயது மகள் அதேபகுதியை சேர்ந்த ஒரு இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இதனால் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும்,
இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் , சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் அண்ணாநகர் மகளிர் போலீசுக்கு தகவல் கொடுக்கப் பட்டது.
இதையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அண்ணாநகர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விசாரணை என்ற பெயரில் சிறுமியின் பெற்றோரிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை வாங்கிச்சென்றனதுடன், அவர்களை காவல்நிலையத்தில் ஆஜராக கூறிவிட்ட சென்றனர்.அதன்படி, அன்று மாலை, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் பெற்றோர்,. அண்ணா நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை என்ற பெயரில் இருவு முழுவதும் போலீஸ் நிலையத்திலேயே இருக்க வைத்து கொடுமை படுத்தி உள்ளனர்.மேலும்,
இதற்கு ஆட்சேசபம் தெரிவித்த சிறுமியின் பெற்றோரை சில போலீசார் தாக்கி உள்ளனர். ஒரு ஆண் போலீஸ்காரர் சிறுமியின் தந்தையை எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. சிறுமியின் தாயையும் போலீசார் அடித்துள்ளார்கள். மேலும், உண்மையான குற்றவாளியின் பெயரை சொல்லக்கூடாது என்று மிரட்டியும் இருக்கிறார்கள்.இந்த விசாரணை, சிறுமியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும், குற்றம்சாட்டப்பட்ட இளைஞரின் முன்னிலையிலேயே நடந்துள்ளது. இதுதொடர்பான செய்திகள் சில ஊடகங்களில் மட்டுமே வெளியாகின.மேலும்,
படிப்பறிவு இல்லாத ஏழை பெற்றோரை போலீசார் இவ்வாறு அடித்து மிரட்டி விசாரணை நடத்தியது சட்டவிரோதம் . இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகி யுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். சிறுமிக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இழப்பீடும் வழங்க வேண்டும். இன்ஸ்பெக்டர் ராஜி உள்ளிட்ட போலீசார் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இதுதொடர்பான வெளியான செய்திகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து தகவல் வெளியான செய்திதாளை வாங்கி படித்து பார்த்த நீதிபதிகள், அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகஅறிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க ஒப்புதல் பெறுவதற்காக அந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த புகார் தொடர்பாக சென்னை அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் சினேக பிரியா, இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோரை எதிர்மனுதாரராக நீதிபதிகள் சேர்த்துள்ளனர்.மேலும்,
இந்த புகாரின்மீது, தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் வழக்கு முறைப்படி விசாரணை நடைபெறும். குற்றம்சாட்டப்படும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டியதிருக்கும். இதனால் இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.