மதுரை பெண்கள் விடுதியில் தீ விபத்து.. ஆசிரியை உள்பட 2 பெண்கள் உயிரிழப்பு..

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் மாவட்டம் ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 13, 2024 • Makkal Adhikaram

மதுரையில் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக விசாகா பெண்கள் தங்கு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் மதுரை , தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்தும், படித்தும் வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் விடுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விடுதிக்குள் சென்று, சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

விடுதியில் இருந்த பிரீட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் 5 பெண்கள் மயங்கி விழுந்த நிலையில், பரிமளா என்ற ஆசிரியையும், சரண்யா என்ற பெண்ணும் உயிரிழந்தனர். இந்நிலையில் விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 3 பேர் எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்த இருவரின் உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்ட விசாரணையில் ஃப்ரிட்ஜ் வெடித்து அதிலிருந்த சிலிண்டரில் இருந்து வெளியேறிய நச்சுப்பொருளால் ஏற்பட்ட விபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திடீர் நகர் காவல் துறையினர், விடுதி அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தக் கட்டிடம் ஏற்கனவே பல ஆண்டுகளாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பழமையான கட்டிடம் என மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டதாகவும், அந்த நோட்டீசை விடுதி உரிமையாளரிடம்வழங்கிய பின்னரும், தொடர்ந்து விடுதி செயல்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். 

மேலும் எந்தவித அனுமதியும் பெறாமல் பெண்கள் விடுதி நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீ விபத்து நடைபெற்ற இடத்தில் கோட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை 4 மணிக்கு விடுதியில் இருந்த பெண்கள் அனைவரும் அழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது விபத்து நடந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகநடந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் விடுதியில் இருந்த பெண்களின் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் தீயில் கருகி நாசமானதால், செய்வதறியாது கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகள் காண்போரை கலங்கச் செய்கின்றன. 

விடுதியில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல், அவசர கால பாதை எதுவும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் உரிய எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டும் அலட்சியமாக செயல்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த விடுதியில் வார்டன் புஷ்பா என்பவரே இதனுடைய உரிமையாளராகவும் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *