செப்டம்பர் 17, 2024 • Makkal Adhikaram
திருமாவளவன் வைக்கின்ற கூட்டணியால்தான் தமிழ்நாட்டு மக்கள் பிழைக்க போகிறார்களா? இல்லை, அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை உயர்த்து விடப் போகிறாரா? எதுவுமே இல்லாத ஒரு விஷயத்திற்கு இவ்வளவு சீன் ஏன்? ஒரு பக்கம் எடப்பாடி, இன்னொரு பக்கம் ஸ்டாலின், மது ஒழிப்பு மாநாடு இரண்டு நாளாக இந்த செய்தி தான் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட பரபரப்பான செய்தி. இதில் மக்கள் எவ்வளவு பயனடைந்தார்கள்? இதனால் என்ன அவர்கள் தெரிந்து கொண்டார்கள்? எவ்வளவு அரசியல் விஷயங்களை ரகசியமாக ஸ்டாலினும், திருமாவளவனும் பேசி தீர்த்து விட்டார்கள் .இதற்கு பதில் சொல்ல இவர்களால் முடியுமா?மேலும்,
நான்காண்டு காலமாக திமுக அரசு மது விற்பனையில், போதை பொருளில் சாதனை படைத்துள்ளது. இந்த கூட்டணியில் தான் திருமாவளவன் இதுவரை இருந்து வருகிறார். இதுவரையில் திமுக அரசுக்கு எதிராக எந்த அறிக்கையும் இல்லை .இந்த மாதிரி மது ஒழிப்பு பற்றி பேசியதும் இல்லை. இதனால், அரசுக்கு வருமானம் என்று பேசுவது இதைவிட, வெட்கங்கெட்ட அரசியல் எதுவும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அவர்களை பலப்படுத்திக் கொள்ளவா ?அல்லது மக்களுக்கு சேவை செய்யவா?எதற்கு அரசியல் கட்சி? என்று அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் இன்று அரசியலில் பதவி ,பொறுப்பு அதனால்தான் நாடு இந்த நிலைமைக்கு வந்துள்ளது. முதலில் தவறு எங்கே? என்றால் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் இவர்களுடைய பேச்சை விளம்பரப்படுத்துவது முதலில் நிறுத்த வேண்டும். எது சொன்னாலும் போடுவதற்கு நீங்கள் பத்திரிகை என்று சொல்லி சமூகத்தையும், மக்களையும்ஏமாற்றிக்கொண்டு அதிலும் தங்களை பெரிய பத்திரிகை அன்று மக்களிடம் காட்டிக் கொண்டு இந்த சீனும் அந்த சீனும் ஒன்றாக தான் இருக்கிறது.
மேலும், இது தெரியாத செய்தி துறை அதிகாரிகள் இதைப்பற்றி படிக்காமல் அரசியல் கட்சியினர் போல் பிஆர்ஓக்கள் இருப்பதால்தான், இந்த பத்திரிகைகள் எல்லாம் இன்று பெரிய பத்திரிகைகள் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டில் முதலில் பத்திரிகை எதற்கு? ஏன்? என்பதை எல்லா செய்தி துறை பிஆர்ஓ களும் படிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்திரிக்கையினுடைய தரத்தை, தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும். உங்களுக்கு முதலில் அந்த தகுதி இருக்கிறதா? என்பதுதான் இங்கே மிகப்பெரிய கேள்வி?
உங்களுக்கு தேவை அரசு செய்தி. அதை கட்டிங் போட்டு கலெக்டருக்கு காண்பித்து கையெழுத்து வாங்க வேண்டிய வேலை, ஆனால், அரசு செய்தி மட்டுமே மக்களுக்கு தேவையான செய்தி என்று சொல்லிவிட முடியாது. இதை விட சமூக நோக்கம் உள்ள செய்தி தான் மிக முக்கியமானது. இன்று மது ஒழிப்பு மாநாடு, போதை ஒழிப்பு மாநாடு என்று பேசிக் கொண்டிருக்கும் திருமாவளவன், ராமதாஸ் முதலில் இவர்களுடைய கட்சிக்காரர்களை இந்த போதையில் இருந்தும், மது ஒழிப்பில் இருந்தும் மாற்ற சொல்லுங்கள் .பிறகு மற்றவர்களை பார்த்துக் கொள்ளலாம்.
அதனால், இப்படிப்பட்ட போலி அரசியல் வெத்து விளம்பரங்களை செய்து கொண்டு, இந்த பத்திரிகைகள், இணையதளங்கள் மக்களை முட்டாளாக்கிக் கொண்டு, இதையும் சர்குலேஷன் என்று காட்டிக் கொண்டு, பத்திரிகை சட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே தான் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம். இதையும் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். புரிந்துகொள்ளுங்கள்.அரசியல் என்பது ஏமாற்று வேலை ஆகிவிட்டதற்கு அடிப்படை முக்கிய காரணம் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தான். இதை நன்கு ஆய்வு செய்து பாருங்கள். பேசிவிட்டு போவதற்கு அரசியல் தேவையில்லை. இங்கே மக்களுக்கு உழைப்பவர்கள் தான் தேவை.
பேசுவதற்கு குடிகாரனை கூப்பிட்டாலும் பேசிக் கொண்டிருப்பான். ஒழுக்கம் உள்ளவர்கள் தான் அரசியலுக்கு தேவை. அவர்களால் தான் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை சொல்லி, பயனுள்ள செயல்களை செய்ய முடியும். இங்கே ஒழுக்கம் இல்லாதவர்களையும், குடிகாரர்களையும் நல்லவர்களாக சினிமாவில் காட்டுவது போல, இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டு, மக்களை ஏமாற்றும் அரசியலை செய்வதற்கு முக்கிய காரணம் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள்.வருடத்திற்கு 100 கோடிகளுக்கு மேல் செலவு செய்யும் செய்தித் துறை இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகளால் ஏற்பட்ட சமூக நன்மை என்ன? இதை ஆய்வு செய்யுங்கள்.மேலும்,
ஒவ்வொரு பத்திரிகையும், ஒவ்வொரு தொலைக்காட்சியும் எதன் அடிப்படையில் எந்த நோக்கத்திற்காக செய்திகள் வெளியிடுகின்றன? அதனுடைய உண்மை தன்மை என்ன? சமூக நோக்கம் என்ன? இதை ஆய்வு செய்துதான் அது பத்திரிக்கையா ?அல்லது விளம்பர பத்திரிகையா? என்பதை முடிவு செய்யுங்கள் .
இப்படிப்பட்ட செய்திகளால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனில்லை. இது நாட்டில் அநியாயத்திற்கும், ஊழல்வாதிகளுக்கும் துணை போகும் வேலை தான் இந்த பத்திரிகைகள் இங்கே செய்து கொண்டிருக்கிறது. நீ அரசாங்க பணத்தில் அதாவது மக்கள் வரிப்பணத்தில் பத்திரிக்கை நடத்திக் கொண்டு, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை இல்லாத அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டிருப்பார்கள், அதை எல்லாம் வைத்து விளம்பரத்தை செய்து கொண்டு, இதுதான் அரசியல் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சர்குலேஷன் சட்டம் சமூக நன்மைக்கா? அல்லது சமூகத்தை ஏமாற்றும் அரசியலுக்கா? இது தவிர, சில பத்திரிகை, தொலைக்காட்சிகள் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கவும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் மறைமுக சக்திகளாக, செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை தொலைக்காட்சிகளும் உண்டு .அதையும் சர்குலேஷன் என்று செய்தித் துறை எப்படி ஏற்றுக் கொள்கிறது? மேலும், தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள இணையதள சட்டம் பத்திரிக்கை துறையில் ஒரு தெளிவற்ற சட்டமாகத்தான் இருக்கிறது. அதையும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சரி செய்ய முன் வர வேண்டும் .
ஃப்ரீடம் ஆப் பிரஸ் சமூக நன்மைக்காக தானே தவிர, சமூகத்திற்கு எதிரான எதிர்வினை ஆற்ற அது இருக்கக் கூடாது. மேலும், அரசியல், அரசியல் கட்சிகள் என்பது மக்களை ஏமாற்ற பத்திரிகை, தொலைக்காட்சிகள் துணை போவது சமூகத்திற்கு எதிரான ஒன்று .மேலும்,இவர்களில் பெரும்பாலும் வியாபார நோக்கத்திலும், அவரவர் கட்சியின் கொள்கைகளை அல்லது கட்சியினர் பேச்சுக்களை மக்களிடம் முன்னிலைப்படுத்துவது தான் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இதற்கு எப்படி இந்த சர்குலேஷன் சட்டம் ஒத்துப் போகிறது? இதற்கு எப்படி மக்களுடைய வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செய்தித் துறை அதிகாரிகளும், மத்திய மாநில அரசும் வீண் அடிக்கலாம்?மேலும்,
பேசுவது சுலபம், யார் வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம். ஆனால், நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள்? உங்கள் கட்சி என்ன மக்களுக்கு நன்மை செய்தது ?அது ஜாதி கட்சியாக இருக்கட்டும்? அரசியல் கட்சியாகவும் இருக்கட்டும்? நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த கேள்வி? ஒவ்வொரு தமிழ்நாட்டு மக்களும் கேள்வி கேட்டு, அரசியல் கட்சிகள் ஓட்டு கேட்கும் போது, இந்த கேள்வியை ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் வையுங்கள் .அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள்.
பணத்தைக் கொடுத்து, உங்களுடைய அதிகாரத்தை தகுதியற்றவர்கள் விலைக்கு வாங்கும் போது, அங்கேதான் ஊழல், அங்கே தான் ரவுடிசம், அங்கே தான் மது கலாச்சாரம், அனைத்து தவறுகளும் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து வெளிவர வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்களுக்கான அரசியலும், ஆட்சியாளர்களும் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை புரிந்து வாக்களியுங்கள். மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் தான் இவர்களை திருத்த வேண்டும்.
முதலில் மது ஒழிப்பு மாநாடு, மது ஒழிப்பு கலாச்சாரம் இவை எல்லாவற்றையும் அரசியல் கட்சியினருக்கு தான் தேவை. ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், எத்தனை குடிகாரர்கள் இருக்கிறார்கள்? குடிக்காமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?இந்த பட்டியலை முதலில் எடுத்து இவர்களுக்கு அறிவுரை சொல்லி திருமாவளவனும், ராமதாஸும் குடிக்காமல் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, ஏனென்றால் இவர் ஒரு மருத்துவர் அல்லவா? இவருக்கு தெரியும். எப்படி இந்த கவுன்சிலிங் கொடுப்பது? அதையெல்லாம் கொடுத்து இவர்களை முதலில் தூய்மைப்படுத்துங்கள். பிறகு, நாட்டை தூய்மைப்படுத்தலாம்.