
எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பு கூட்டணியில் இனி குழப்ப இடமில்லை. அதாவது எடப்பாடி பழனிசாமி ,அமித்ஷா சந்திப்பு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த தான், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ,சசிகலா, போன்றோர் இருந்து வருகிறார்கள் .அதற்கு செங்கோடையனும் அந்த கூட்டத்திற்குள் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்திற்கு முக்கிய மறைமுக ஆதரவு கர்த்தா யார்? என்றால், அண்ணாமலை .அண்ணாமலை தான் மறைமுகமாக இந்த காயை நகர்த்திருக்கிறார். ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ .பன்னீர்செல்வம், சசிகலா, மூன்று பேருமே எடப்பாடி பழனிசாமி மீது மிகப் பெரிய உட் பகை வைத்திருப்பவர்கள்.

இவர்களை வைத்து மறைமுகமாக அரசியல் செய்தவர் அண்ணாமலை. இதையெல்லாம் அமித்ஷா எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் போட்டு உடைத்திருக்கிறார். ஏற்கனவே ,அவர்களை சமாதானப்படுத்தி கட்டி இழுத்து தான் உட்கார வைத்திருந்தார்கள் ,டெல்லி மேலிடம்.

உட்கார வைத்திருந்தவர்களை அண்ணாமலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவர்களை அழித்துவிட்டார். அதுதான் அதிமுக, பாஜக கூட்டணியில் ஒரு குழப்பம். இப்போது அண்ணாமலை யார்? என்று பாஜக மேலிடம் புரிந்து கொண்டது .இவர் அரசியல்வாதியாக இருந்து இவருடைய திறமையை காட்டாமல், போலீஸ் புத்தியும் காட்டி விட்டார் என்று தான் அரசியல் வட்டாரத்தில் ரகசிய பேச்சு.

ஆனால் இவர் யார் ?என்று ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது. இவர் ஓவர் ஆக்டிங் பர்சன் என்பது நான் புரிந்து கொண்டேன். அரசியலுக்கு உள்ள தகுதி அண்ணாமலை மைக்கில் பேசுவது தான் அரசியல் தெரியாதவர்கள் பேசுகின்றனர் .

அதுவே பல பத்திரிகை, தொலைக்காட்சிகளும், இன்று எழுதிக் கொண்டு ,மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அதுபோல மக்கள் அதிகாரம் செய்தி மக்களுக்கு உண்மையை மட்டுமே எடுத்துச் சொல்லும். மேலும்,
அரசியல்வாதி எப்படி இருப்பான் ? எப்படிப் பேசுவான்?போலீஸ்காரன் எப்படி இருப்பான் ?அதை எல்லாம் படிக்காமல் நான் பத்திரிக்கைக்கு வரவில்லை. அண்ணாமலையை இரண்டு ,மூன்று தடவை நேரில் சந்தித்தவன்.
முதல் தடவை சந்திக்கும்போது அண்ணே என்கிட்ட சொன்ன வார்த்தைகள் வேற, அதன் பிறகு இவரை பார்க்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு இவர் பிஸி ஆகிவிட்டார்.
கூட்டம் வருகிறது என்று இவர் உணர்ச்சிவசப்பட்ட அரசியல்வாதி. எப்படியும் பேசுகிற கூட்டம் வரும் . அதேபோல் எப்படியும் செய்தி போடுகிற பத்திரிக்கை கூட்டமும் வரும்.
ஆனால், இப்படி தான் செய்தி !இதுதான் அரசியல் !இதுதான் தகுதியான தலைவன் என்று தீர்மானிக்கிற ஒரு தகுதி யான பத்திரிக்கையாளனை அண்ணாமலை பார்த்து இருக்க மாட்டார்.
அப்போதே அண்ணாமலையை புரிந்து கொண்டேன். அண்ணாமலை ஒரு அன்பிட் அரசியல்வாதி. ஒரு தலைவன் என்றால் அதற்குரிய தகுதி ,பண்பு, குணநலன் எப்படி இருக்கும்? என்று எனக்கு தெரியும். மைக்க புடிச்சு பேசுறவனும், மேடைப் பேச்சாளனும், தலைவன் ஆகி விட முடியாது.
அது போல ,திமுக வீர வசனம் பேசக்கூடிய கட்சிக்காரனும், எனக்கு தெரியும் .அவனுடைய செயல்பாடும் தெரியும். அதனால், பிஜேபி எப்படிப்பட்ட கட்சி? என்றதும் தெரியும். அதனால், அண்ணாமலைக்கு இனிமேல் மேலிடம் இவரை கண்காணிக்க தொடங்கி விட்டது. இவருடைய அரசியல் டீல்,திமுகவுக்கு மறைமுக அரசியல் ஆதரவு.
இது பற்றி எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷா சந்திப்பின் போது ,கூட்டணிக்கு ரூட் கிளியர் செய்து விட்டார்
அதை தான் ஒரே வரியில் சொல்ல வேண்டும். இது தவிர,
திமுகவின் பழைய புள்ளிகளின் வழக்குகள், அமைச்சர்களின் வழக்குகள், துரிதப்படுத்தி தேர்தலுக்குள் எப்படியாவது ,ஒரு பத்து அமைச்சராவது சிறைக்குள்ளே , போக அதற்கான யோசனையும் தெரிவித்துவிட்டு, வந்திருப்பாக தகவல் வெளிவந்துள்ளது.
இனி டெல்லி ஆட்டம் தமிழ்நாட்டில் ஆரம்பிப்பதை விரைவில் பார்க்கலாம்.