நாட்டில் காங்கிரஸ் கட்சி இந்த தேச நலனுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்திரா காந்திக்கு பின் அதன் செயல்பாடு என்ன ? – அரசியல் ஆய்வாளர்கள்.

அரசியல் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram

காங்கிரஸ் கட்சி இந்த தேசத்திற்கு எதிரான ஒரு கட்சியாக தான் அதை அரசியல் நடுநிலையாளர்கள் பார்க்க வேண்டி உள்ளது .ஏனென்றால், தற்போதைய பல இடங்களில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சு, சோனியாவின் மனப்பான்மை,சோனியா இத்தாலி நாட்டை சேர்ந்தவர். மேலும், அவருக்கு இந்தியாவின் தேசப்பற்று, மொழி பற்று, இந்த மக்களின் மீது உண்மையான அன்பு இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி? இதை எல்லாம் தாண்டி இந்த மக்கள் இவர்களுக்கும் வாக்களிக்கிறார்கள் என்றால், இவர்களை விட கேவலமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.தவிர இவர்களுக்கு வெளிநாட்டு அன்னிய சக்திகளோடு மறைமுக கூட்டு வைத்திருப்பார்களாகவே தகவல்.

அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் கூட இந்தியாவைப் பற்றி ராகுல் காந்தி தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.அதை அமெரிக்க பத்திரிகைகளே வெளியிட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி காலத்தில்தான் இந்த தேச நலனுக்காக, மக்கள் நலனுக்காக, அதன் செயல்பாடுகள் இருந்ததை பார்க்க முடிந்தது. அதன் பிறகு, ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி இலங்கைத் தமிழர்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக செயல்பட்டார். இது வரலாற்று உண்மை. யாரும் மறைக்க முடியாது.

அடுத்தது, மிகப்பெரிய தவறு ,ஆட்சி நிர்வாக ஊழல் ஏற்படுத்தி, இந்தியாவை கடனாளியாக்கி, உலக நாடுகளிடம் வாங்கிய கடன்,வட்டி, அசல், எல்லாவற்றையும் தற்போது பிரதமர் மோடியால் அடைக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது. இதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. இது பிஜேபியை உயர்த்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் நினைத்தாலும் அல்லது பேசிக் கொண்டாலும் உண்மை என்று ஒன்று உள்ளது. அதை சொல்லித்தான் ஆக வேண்டும். அதை தான் மக்களிடம் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சொல்கிறது.

எத்தனை நாளைக்கு பல பத்திரிகைகள் பொய் சொல்லி, இந்த வியாபார அரசியலையும், வியாபார பத்திரிகையும் நடத்திக் கொண்டு வருமானத்தை பார்ப்பார்கள்? மேலும், மக்கள் உண்மை தெரிந்து கொண்டு, இந்த அரசியலை புரிந்து கொண்டு, வாக்களிக்கவில்லை என்றால், மீண்டும் காங்கிரஸ் கட்சி! இதைவிட ஊழல் அதிகமாக செய்து, இந்த நாட்டை கூறு போட்டு விடுவார்கள். அதனால், நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சி மீது எப்போதும், அவர்கள் செய்த ஊழலும், அராஜகமும் அரசியல் வரலாற்று பிழை. மீண்டும் அதே பிழையை செய்ய மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை தீர்மானிக்க கூடாது.

 அது இந்த நாட்டின் பாதுகாப்பு ,வளர்ச்சி, பொருளாதாரம், முன்னேற்றம், அத்தனையும் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இன்னும் அழிவை நோக்கி நகர்த்தி விடுவார்கள்.காங்கிரஸ் ஐம்பதாண்டு கால ஆட்சியில் இந்தியாவில் நிலைமை என்ன? 10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி என்ன? தற்போது, பாகிஸ்தானில் பொருளாதார சீர்கேடு எப்படி உள்ளதோ ,அதே நிலைமையை இந்தியாவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.தற்போது உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி. உலக அளவில் காங்கிரஸ் ஆட்சியில், இந்தியாவின் மதிப்பு ,மரியாதை, பயத்தில் நடுக்கத்தில் இருந்தது. இன்று இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது.

இன்றைய கட்சிக்காரர்கள் இந்த தேசத்தின் நன்மையோ, மக்களின் நன்மையோ, முக்கியத்துவமாக பேசுவதில்லை. செயல்படுவதும் இல்லை. இவர்களுடைய பேச்சு, மக்களை எப்படி திசை திருப்பலாம்? எப்படி ஏமாற்றலாம்? எப்படி அரசியலில் தங்களைப் பெரியாளாக காட்டிக் கொள்ளலாம்? அதன் மூலம் எப்படி பதவிக்கு வரலாம்? இதுதான் இவர்களுடைய முக்கிய நோக்கம். இப்படிப்பட்டவர்கள் எப்படியும் யாருக்கு வேண்டுமானாலும், பேசிக் கொண்டிருப்பார்கள். அதுதான் காங்கிரஸ் கட்சியினரா? இவர்களெல்லாம் தியாகம் செய்துவிட்டு, மக்களுக்காக அர்ப்பணிக்க வந்தவர்கள் என்று சொல்ல முடியாது.

அதற்கு தகுதியானவர்களா? ஒன்றும் புரியவில்லை. இவர்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள கோடிகளில் ஊழல் செய்ய ஏமாளிகள் தான் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் . பிஜேபியில் கூட மோடி என்ற ஒரு தலைமை இல்லை என்றால், அங்கும் அதே நிலைமைதான் இருக்கும். இப்போது கூட தமிழ்நாட்டை பொறுத்தளவில் பிஜேபி மக்களுக்காக உழைத்தால் நிச்சயம், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியும் .ஆனால், இங்கே மேடையில் மைக்கை பிடித்து பேசிவிட்டு போவது தான் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் இப்போது 50 சதவீதத்திற்கு மேல் விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள். அதனால், இனி வருங்காலங்களில் அரசியல் இன்னும் தமிழ்நாட்டில் கடும் சிக்கலாக தான் அரசியல் கட்சிகளுக்கு இருக்கப் போகிறது.

அதாவது தன்னுடைய ஓட்டை யாருக்கு போட்டால்? நமக்கு அதனால் என்ன லாபம்? இப்படி குறிப்பிட்ட சதவீத மக்கள். மற்றொரு பக்கம், இந்த கட்சிகளுக்கு எல்லாம் போட்டால், இன்னும் கொள்ளை அடிப்பார்கள். இது ஒரு  குறிப்பிட்ட சதவீத மக்கள் .அடுத்தது யார் ?மக்களிடம் நெருங்கி அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஓடிவருகிறார்கள்?இப்படி குறிப்பிட்ட சதவீத மக்கள், பணத்திற்காக ,பிரியாணிக்காக, மதுவுக்காக வாக்களிக்கும் குறிப்பிட்ட சதவீதம் மக்கள். ஆனால், மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசியல் கட்சியினர் தற்போது யார்? என்பது நடுத்தர மக்களுக்கு அரசியல் என்பது மிகப்பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்து வருகிறது.

 ஏனென்றால், அரசியல் என்பது ஒரு மலை ஏறுவதை விட கடினமான ஒரு வேலை. இங்கே மக்களுக்காக பணியாற்றுவதை விட, அவர்கள் நலனுக்காக செய்து கொள்வதில் தான், இன்றைய அரசியல் கட்சியினர் உள்ளனர். அப்படி இருக்கும்போது, ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், தனக்கு என்ன லாபம்? இதற்கு அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஏதோ ஒரு தொழில் செய்தோ அல்லது ஒரு வியாபாரம் செய்தோ பிழைத்துக் கொள்ளலாம். அரசியல் என்பது தெரியாத மக்களிடம் வியாபாரம் ஆகிவிட்டது. தெரிந்தவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள் . அதனால், அரசியல் தெரியாத மக்களிடம் பணத்தை கொடுத்து அரசியலை வியாபாரம் ஆகிவிட்டார்கள் . 

படிக்காத மக்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுடைய வாக்கு நேர்மையானவர்களை, நியாயமானவர்களை அரசியலில் கொண்டு வந்தார்கள். தற்போது படித்து பட்டம் பெற்ற மக்களும், இளைஞர்களும், ஊழல்வாதிகளையும் ,ரவுடிகளையும், கிரிமினல்களையும், சுயநலவாதிகளையும், தான் தேர்வு செய்கிறார்கள். இது இந்த மக்களே இவர்களால் அனுபவிக்க வேண்டிய துயரமும், கொடுமையும் ,இவர்களே தேர்வு செய்து கொள்கிறார்கள். 

இதை கிராம முதல் நகரம் வரை இல்லை என்று அவர்களால் மறுக்க முடியாது. அதனால், இந்த வியாபார அரசியலில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும். தவிர, மக்கள் நலனில் உழைப்பவர்களுக்கு வாக்களித்தால்! அது மக்களுக்கான உயர்வு .அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *