இணையதளத்தில் பத்திரிக்கையில் செய்திகளை கொடுத்து மக்களை தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லாமல் ஆக்க இது ஒரு கருவியாக இந்த செய்தியை பயன்படுத்துகிறார்களா? மேலும்,
இப்படிப்பட்ட தவறான செய்திகளால் மக்கள் குழப்பம் அடைவார்கள். தவிர, அரியானாவில் தோல்வி தழுவிய காங்கிரஸ் ,இதுபோன்ற செய்திகளை இணையத்தில் பத்திரிகையில் வெளியிட்டு வருகிறது. அதனால் காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கைற்ற செய்திகளாக வெளி வருகிறது.
இது வதந்திகளை பரப்புகின்ற வேலையா? அல்லது தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லாத வேலையா? 140 கோடி மக்கள் தேர்தல் ஆணையத்தின் இவிபி (EVP) மெஷின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் போது, இந்த காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் நம்பிக்கை இல்லையா? மேலும், காங்கிரஸ் கட்சி கருத்துக்கணிப்புகள் ஊடக கருத்துக்கள் இதையெல்லாம் வைத்து சந்தோஷத்தில் மிதந்து விட்டு, தற்போது ஹரியானாவில் மக்கள் பிஜேபிக்கு வாக்களித்து பெரும்பான்மை பலத்தை கொடுத்துள்ளது .அரசியலில் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . மக்கள் அரசியல் தெரியாமல் 50 சதவீதம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசியல் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டால் ,நாட்டில் தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
காசுக்கு ,இலவச பொருளுக்கு ஏங்கும் மக்களால் ,தகுதியானவர்கள் அரசியலுக்கு தேர்வு செய்யப்படவில்லை . அரசியலில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டால், அது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல , நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தேசத்தின் பாதுகாப்புக்கும் ,சமூகம் முன்னேற்றத்திற்கும் ,முக்கியமானது என்பதை மக்கள் எப்போது உணரப் போகிறார்கள் ?