அக்டோபர் 21, 2024 • Makkal Adhikaram
மனிதப் பிறப்பே ஏற்றத் தாழ்வுகள் உடன் தான் இருக்கும். எப்படி நம்முடைய விரல்கள் ஐந்தும் சமமாக இல்லையோ, அதே போல் தான் மனித வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பவை .அது இயற்கையின் படைப்பு. அதை யாராலும் மாற்ற முடியாது. ஒருவன் உயர் குடியில் பிறப்பும், தாழ்ந்த குடியில் பிறப்பும், அவனவன் கொண்டு வந்த கர்ம வினை . கர்ம வினையை ஓட்டி தான் பிறப்பு . ஏன் தாழ்ந்த சமூகத்தில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்த பதவிக்கும், சொத்து சுகங்களுக்கும் அதிபதியாக இல்லையா? இன்று பல கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சமூகம் வளர்ந்து விட்டது .
ஆனால், எல்லோரும் வளர்ந்து விட்டார்களா? அது இல்லை. ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் தான் செய்யும். ஒரு சமூகத்தில் பிறந்தவர்கள் கோடீஸ்வரராக இருக்கிறார்கள். வளர்ந்த சமூகத்தில் கூட இன்று கூலி வேலைக்கு செல்லும் நிலையிலும் இருக்கிறார்கள் . மேலும், வளர்ந்த சமுதாயத்தில் அன்று கோடீஸ்வரராக இருந்தவர்கள் கூட, இன்று நடுத்தெருவில் இருக்கிறார்கள் . இதையெல்லாம் அவரவர் கொண்டு வந்த நல்வினை, தீவினையின் பயன்கள். இது ஒரே சமூகத்தில் இருக்கிறது.இது தெரியாமல், மக்களை ஏமாற்றி படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது!
இங்கே தலித் சமுதாயத்தை மட்டுமே மக்களிடம் காட்டி அவர்கள் உயர் குடியில் பிறந்தவர்களிடம் அடிமையாக இருந்தார்கள்.இப்போதும் இருக்கிறார்களா? இல்லை . இது தவிர, சினிமாவிற்கு என்று ஒரு முக இலட்சணம் இருக்கிறது. அந்த காலத்தில் எல்லாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே குதிரை முகம் என்று சொன்னார்கள். இப்போது நடிக்கும் அவர்களைப் பார்த்தால், அது எந்த முகம் என்று தெரியவில்லை. கிராமங்களில் வயல்வெளியில் வேலை செய்பவர்களை விட கேவலமாக இருக்கிறது . இந்தப் படங்களை எப்படி இந்த மக்கள் பார்க்கிறார்கள்? என்பதுதான் புரியவில்லை . சினிமா என்றால் எதை வேண்டுமானாலும் பார்ப்பார்கள் போல தெரிகிறது. அதில் என்ன விஷயம் இருக்கிறது? எதற்காக பார்க்க வேண்டும்? என்ன அதில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது?சமூகத்திற்கான கருத்து என்ன இருக்கிறது? எதுவுமே தெரியாது. யாரு நடித்தாலும் பார்க்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ரசனை இல்லாத மக்களாக தான் இருப்பார்கள்.
அந்த காலத்தில் எம்ஜிஆர் ,சிவாஜி இந்த இரு நபர்களின் முக லட்சணமே அப்படி இருந்தது. மூத்த பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் சொல்வார் எம்ஜிஆர் உடைய முகத்தை பார்த்தால், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றும் . அந்த அளவிற்கு அவருடைய முகத்தில் ஒரு ஈர்ப்பு தன்மை இருந்தது. அதற்கு அடுத்த கட்டத்தில் ரஜினி, கமல், தனுஷ் அடுத்தது விஜய் இப்படி தான் இருக்கிறதே ஒழிய, இதில் ஜாதி படத்தை எடுக்க கூடிய இயக்குனர்கள்,அவர்களின் முகத்தைப் பார்க்க கூட கேவலமாக இருக்கிறது. இவர்கள் சினிமாவை வளர்க்கக் கூடியவர்கள் அல்ல சினிமாவை அளிக்கக் கூடியவர்கள்.
மேலும், ஹீரோ முகத்தைப் பார்த்தால் ஈர்க்கக் கூடிய தன்மையும், ரசிக்கக் கூடிய தன்மையும் இருக்க வேண்டும். ஆனால், கொலை வெறி பிடித்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக சினிமாவில் காட்டுகிறார்கள். இது எல்லாம் சினிமாவுக்கு அர்த்தம் தெரியாதவர்கள். அதைப் பற்றி தெரியாமல் படம் எடுத்துக் கொண்டிருப்பவர்கள். அதையும் பார்த்துக் கொண்டிருக்கிற கூட்டம் கலையரசனை அற்ற கூட்டம் . இது வா சினிமா? அதனுடைய தகுதி, தரம் இப்படிப்பட்டவர்களால் கேவலமாகிவிட்டது. அதாவது இந்த கேவலத்தை படமாக்குவதை விட வேறு வேலை இல்லையா?
நடிகர் கருணாஸ் சொல்வது போல, இவனுங்க தான் கஷ்டப்பட்டு வந்தார் போல் பேசுகிறார்கள். நாங்களும் தாண்டா அந்த மண்ணு தரையில சாணி மொழிகி, பாய் போட்டு படுத்து தான் வளர்ந்தோம் . எல்லா சமூகமும் கஷ்டப்பட்டு தான் வளர்ந்துள்ளது. யாரும் கஷ்டப்படாமல் வளரவில்லை .