நவம்பர் 03, 2024 • Makkal Adhikaram
தேவாரம் பேரூராட்சியில் பெய்த மழை வடிகால் வசதி இல்லாமல் வெள்ளப்பெருக்கெடுத்து வீடுகளுக்குள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெள்ள நீர் புகுந்தது .
இதனால், மக்கள் மிகவும் மன வேதனைக்கு உள்ளாகி, இயல்பு வாழ்க்கையும், பெரிதும் பாதிக்கப்பட்டது,
மேலும், இதற்கு முக்கிய காரணம் பேரூராட்சி நிர்வாகம். பேரிடர் காலங்களில் முன்னேற்பாடாக மழைநீர் எந்தெந்த பகுதியில் தேங்கும்? என்பதை கண்டறிந்து அதை சரி செய்து இருக்க வேண்டும் . அவ்வாறு சரி செய்யாததே முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
மேலும், அப்பகுதி மக்கள் பேரூராட்சியில் நிதி கொள்ளைகளை செய்வதில் முனைப்பு காட்டும் அளவிற்கு, மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பேரூராட்சி நிர்வாகம் இல்லை என்பது தேவாரம் பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
மேலும், பேரூராட்சியும், தேனி மாவட்ட நிர்வாகமும், தேங்கி உள்ள மழை வெள்ளத்தை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வெள்ள நீரையும், கழிவு நீரையும் உடனடியாக அகற்றி, பாதிப்புக்கு உள்ளான பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் .
செய்தியாளர்: பால் கண்ணன் .