தமிழ்நாட்டின் அரசியலை உற்று நோக்கும் மோடி, அமித்ஷா அவர்களுடைய கட்சியில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க மாட்டார்களா ?பிஜேபியில் உணர்வாளர்கள்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் இருந்தும் அவர்களை அக்கட்சியை பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் ? மேலும், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியை கொண்டு வந்தும், தமிழ்நாட்டில் பிஜேபியை முன்னிறுத்த முடியவில்லை. அதற்கு என்ன காரணம் ? அதைப்பற்றி மோடியும், அமிஷாவும் ஏன் ?ஆய்வு செய்யவில்லை என்பதுதான் அக்கட்சியினர் புலம்பல். தமிழ்நாட்டில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை மக்கள் இதற்கு மாற்றாக மற்ற சமூகத்தினர்.

 அதாவது, இதில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்கம், ஏழை, எளிய மக்கள் இவர்கள் மற்ற அரசியல் கட்சியினரால் நசுக்கப்படுகிறார்கள். காரணம் மனசாட்சி உள்ள மக்கள் நல்லது, கெட்டது ,தவறு, சரி இதில் எது பற்றியும் கவலைப்படாத மற்ற அரசியல் கட்சிகள் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ,செயல்படுபவர்களும் பதவி அதிகாரத்தில் இருப்பவர்கள் கொள்ளையடிப்பது மட்டுமே ,குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்களும் இருக்கின்ற ஒரு நிலைமை.

 தமிழ்நாட்டில் உள்ளது இதற்கு ஒரு மாற்று அரசியல் தேவை என்பதை புரிந்தவர்கள். பிஜேபியின் உணர்வாளர்களாக இருக்கிறார்கள். அவர்களை அக்கட்சியை பயன்படுத்தும் கொள்ளவில்லை. மேலும், எல். முருகன் போன்றவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பது, அந்த கட்சியினரே யாருக்கும் எதுவும் செய்யவில்லை. ஒரு பக்கம் அவருடன் நெருங்கி இருந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கூட செய்யவில்லை என்ற புலம்பல் எதிரொலிக்கிறது .

மற்றொரு பக்கம், இவருக்கு செய்தி துறை கொடுக்கப்பட்டும், இதுவரை அந்த செய்தி துறையில் இவர் என்ன செய்திருக்கிறார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி? இது தவிர, எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செய்திகளை வெளியிட்டு வருகிறோம் .அதை சென்னை பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்ரோ (pib) அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களையும் கொடுத்திருக்கிறோம் .செய்திகளையும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறோம். இதைப்பற்றி கண்டு கொள்ளாத ஒரு அமைச்சர் எல்.முருகன் ஒருவேளை அவருக்கு இந்த சப்ஜெக்ட் புரிகிறதா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை . 

நாங்கள் சொல்ற கருத்துக்கள் உண்மைகள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புரியும் போது, உங்களுக்கு மட்டும் ஏன் அது புரியவில்லை ? அது தமிழக செய்தித் துறையும் சரி ,மத்திய செய்தி துறையும் சரி, அரசு அதிகாரிகளுக்கு புரியும் போது, அமைச்சர்களுக்கு ஏன் இந்த உண்மை புரியவில்லை ? மேலும், இவர் நேற்று, தேனி மாவட்டத்தில் ஒரு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற கட்டிட திறப்பு விழாவிற்கு வந்துள்ளார். அங்கே இவர் வருவது அந்தக் கட்சிக்காரர்களுக்கு தெரியவில்லை என்கிறார்கள் .

மேலும், ஒரு மந்திரி ஒரு மாவட்டத்திற்கு வருகிறார் என்றால், அந்த மாவட்ட செயலாளர் அவர்களுக்கு கூட தெரியவில்லை, மாநில பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கூட தெரியவில்லை. அவர்களும் அங்கே பங்கேற்கவில்லை. கடமைக்கு மாவட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் வந்து போனதாக தகவல். இது தவிர, அந்த அறக்கட்டளை நிர்வாகி அவர் மீது பல புகார்கள், பிஜேபி கட்சியினரே தெரிவிக்கிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பது கூட தெரியாமல், அந்த அறக்கட்டளை கட்டிட திறப்பு விழாவிற்கு வந்து சென்றது சுயநல நோக்கத்தில் தான் இவர் வந்திருக்க வேண்டும் .அந்த அறக்கட்டளை நிர்வாகிக்கு ஒரு விளம்பரம் தேவைப்பட்டது .அதை இவரை வைத்து அந்த விளம்பரத்தை பூர்த்தி செய்து கொண்டார் என்று அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர் .இப்படி எல்லாம் இருந்தால் தமிழ்நாட்டில் பிஜேபி வளராது. இப்போது மக்கள் அரசியலை செல்போனில் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .

அரசியல் கட்சிகள், எப்படி மக்கள் மத்தியில் தங்களை மக்களுக்காக பாடுபடுபவர்களாக காட்டிக்கொள்க போட்டி போடுகிறார்கள். அது மட்டுமல்ல, இங்கே மோடியின் திட்டங்கள் அனைத்தும் தமிழக முதல்வரின் ஸ்டிக்கர் திமுகவினர் ஒட்டி வருகிறார்கள். கடும் அரசியல் போட்டி விஜய் கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்திய பிறகு ,ஒவ்வொரு அரசியல் கட்சியும், தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்துவதற்கு என்னென்ன? வழிமுறைகளை வகுத்து எப்படி செயல்படுவது ?என்று ஆய்வுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் பிஜேபி கட்சியினருக்கு தெரியாதது ஒன்றுமில்லை.

 இங்கே நான் 50 ஆண்டு காலமாக பிஜேபியில் இருக்கிறேன். நூறாண்டு காலமாக இருக்கிறேன். நீ எத்தனை ஆண்டு காலமாக இருந்தாலும், உன்னுடைய செயல்பாடு ?மக்கள் செல்வாக்கு? இதுதான் அரசியல் கட்சியில் பேசும். அதை விட்டு,விட்டு மைக்கை பிடித்துக் கொண்டு கார்ப்பரேட் பத்திரிகை ஊடகங்களில் பேசி விட்டு, போவதில் எந்த பயனும் இருக்காது. இனிமேலாவது, பிரதமர் மோடியும் ,உள்துறை அமைச்சர் அமிஷாவும் இது பற்றி என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்? என்பதுதான் பிஜேபியின் உண்மையான உணர்வானர்கள் கேள்வி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *