அதானி செய்த தவறுக்கு பிஜேபி என்ன செய்ய முடியும்? மோடி என்ன செய்ய முடியும் ?அடுத்தது ,பிஜேபிக்கு அவர் ஒரு சப்போர்டர் அது இல்லை என்று மறுக்க முடியாது .
எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியானாலும் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் .ஏனென்றால் இவர்களுடைய தயவு கார்ப்பரேட்டுக்கு தேவை .கார்ப்பரேட்டினுடைய தயவு அரசியல் கட்சிக்கு தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை .இதில் தவறும் இல்லை .
ஏனென்றால் பிஜேபிக்கு தேர்தல் நேரத்தில் செலவுக்கு அதானி பணம் கொடுப்பார் அதில் தவறு இல்லை . ஆனால் ,காங்கிரஸ் அப்படி இல்லை .இங்கே ஊழலே காங்கிரஸ் . காங்கிரசின் ஊழல்களை இன்னும் தோண்டத் தோண்ட அது புதையலாக வந்து கொண்டு தான் இருக்கும் .
அந்த வகையில் பா சிதம்பரம், தற்போது செல்வப் பெருந்தகை இவர் எங்கு இருந்தார்? இவர் ஒரு 500 கோடி அமெரிக்காவில் முதலீடு செய்யும் அளவிற்கு சொந்தக்காரரா ? இவர் அப்பா என்ன தொழில் செய்தார் ?இதற்கு செல்வப் பெருந்தகையால் பதில் சொல்ல முடியுமா? இதெல்லாம் அரசியல் தெரியாத மக்களை இந்த தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் பேசிவிட்டு போகலாம் என்று கனவு காணாதீர்கள் . எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து வைப்போம் . அதனால் அதானி மட்டும் குற்றவாளி அல்ல ,நம்முடைய அதிகாரிகள் !
மேலும்,அதானியின் மகனை உதயநிதி ஸ்டாலின் சந்தித்திருக்கிறார் என்று தகவல் வெளி வருகிறது . இவர் எதற்காக அதானியின் மகனை சந்தித்தார்? இந்த பிரச்சனையில் காங்கிரஸ் யோக்கியமானவர்களாக காட்டிக் கொண்டு ,மக்களை ஏமாற்றும் அரசியல் செய்யக்கூடாது .அது அரசியல் தெரியாத மக்களிடம் தான் உங்கள் வேலை பலிக்கும் .