
பிரதமர் நரேந்திர மோடி ப்ளூம் பெர்க் பொருளாதார மன்றத்தில், பேசும்போது, இந்தியாவின் வளர்ச்சியில், டிஜிட்டல் ஆற்றல் சக்தி முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ,அவர் இந்த டிஜிட்டல் ஆற்றல்,பெரிய நகரத்தைப் போன்று, சிறிய நகரத்தில் உள்ள மாணவர்கள் கல்வியிலும், டிஜிட்டல் டேட்டா முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்துள்ளார்.
அதனால், மலிவு விலையில் இந்த மொபைல் டேட்டாஸ் வழங்க மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மேலும், தொழில்நுட்பமும், அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இருக்கக் கூடாது என்பதை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று.
ஆனால், மத்திய அரசின் செய்தித்துறை அமைச்சகம் ,கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே அதிக சலுகை, விளம்பரங்களை கொடுத்து ஊக்கி வைக்கும் நிலை என்?
மேலும்,தொடர்ந்து சமூக நலன் பத்திரிகைகளுக்காக போராடிவரும் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் ,இது பற்றி பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு ஏன் செய்தித் துறை இதுவரை கொண்டு செல்லவில்லை?
அதனால்தான் ஒரு டெமி பீஸ் அமைச்சரை தமிழ்நாட்டில் நீங்கள் நியமித்தது எத்தனை ஆண்டுகாலம் அந்த பதவிக்குறிய தகுதியை வீணடித்து விட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மக்கள் நலனுக்காக போராடுகின்ற பத்திரிகைகளுக்கு இதுவரை மத்திய அரசின் சார்பில் என்ன சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது? என்பதுதான் எங்களது கேள்வி?
மேலும்,ஒருவனுக்கு ஆயுதங்களைக் கொடுத்து போட்டியில் சண்டை செய்யும்போது யார் வெற்றி பெறுவான்? யார் தோல்வி பெறுவான்? என்று செய்தித் துறை அதிகாரிகள் தேர்வு செய்யாமல் ,கார்ப்பரேட்டை மட்டுமே செய்தி துறைக்கு சொந்தமாக்கி விட்டார்கள்.

அதற்கு பலமுறை இந்த சர்குலேஷன் சட்டம் !ஒரு தவறான சட்டம் என்று எத்தனையோ முறை ,அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏன் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு இவர்கள் கொண்டு செல்லவில்லை?

மேலும்,பத்திரிக்கை துறையிலே அதிகாரமும், தொழிலை ஊக்கி விக்கும் வேலை வாய்ப்பும் ,ஒரு சார்பாக மட்டும் இருந்தால் ,இதுவரை இந்த கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதா? மக்களுக்கு அரசியல் என்றால் என்ன என்று அவர்களுக்கு புரிய வைத்து , அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டதா?
அவர்களுக்காக,என்ன இவர்கள் பத்திரிக்கையில் மக்களுக்காக செய்து விட்டார்கள்? ஒரு இடத்தில் நடக்கும் தகவலை சொல்வதற்கு அதற்கு பெரிய கார்ப்பரேட் வேணுமா? இப்போதாவது இந்த உண்மைகள் செய்தி துறைக்கு போதுமா?