சினிமாவில் பா.ரன்ஜித் , வெற்றிமாறன் வந்த பிறகு சினிமாவில் ஜாதி கலாச்சாரம் உள்ளே வந்ததா ?இதை எப்படி மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளும் …….. ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram

சினிமா ஒரு பறந்து விரிந்த எல்லையற்ற கடல் அதில் முத்து எடுப்பவர்கள் தான் இயக்குனர்கள்.தமிழ் சினிமாவில் எல்லோரும் முத்தெடுக்கும் இயக்குனர்கள் என்று சொல்ல முடியாது .

 திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் எல்லாமே அந்த காலத்தில் மக்களுக்கு தேவையான கருத்துக்களை, 50 ஆண்டுகளை தாண்டியும் ,மக்கள் ஏற்றுக் கொள்ளும் படியும், ரசிக்கும்படியும் இன்றுவரை இருந்து வருகிறது . ஆனால், இன்றைய சினிமா பாடல்கள் ஏதோ ஒரு சில பாடல்களைத் தவிர, மற்றவை கேட்கும் படியாக இருக்கிறதா?

மேலும், அப்போதெல்லாம் சினிமாவுக்குள் நுழைவது மிகவும் கடினமானது. எல்லாமே ஸ்டுடியோக்குள்ளே நடக்கும். ஒரு சில காட்சிகள் வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் எடுப்பார்கள் .இப்படித்தான் எம்ஜிஆர், சிவாஜி காலத்தின் சினிமா வரலாறு. அவர்கள் காலத்தில் ஹீரோவாக ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோர் நடித்திருந்தாலும், எம்ஜிஆர், சிவாஜிக்குள் தான் போட்டிருந்தது. அது பிறகு, ரஜினி, கமல் வரை வந்தது .

ஆரம்பத்தில் ரஜினி ,கமல் படங்கள் எல்லாமே கொடுத்த இயக்குனர்கள், ஒரு மக்களின் பிரச்சனையை மையமாக வைத்துதான் வந்திருக்கும். திரைப்படத்தை எளிமையாக கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவர்தான் ஸ்டுடியோவை விட்டு ,கிராமத்தில் சினிமாவை எடுக்க ஆரம்பித்தார் .16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில்,  அலைகள் ஓய்வதில்லை, படத்தில் ஒரு காட்சி ராதா சிலுவையை அறுப்பார். கார்த்திக் பூணூலை அறுப்பார் . இதுவும் இரு மதங்கள் பற்றிய காதல் கதை,  இங்கே கூட அவர் காதலர்கள் உடைய எண்ணத்தை மட்டும் தான் வெளிப்படுத்தினாரே ஒழிய, எந்த கருத்தையும்,மதத்தின் மீதோ அல்லது சமூகத்தின் மீதோ அல்லது ஜாதியின் மீதோ திணிக்கவில்லை .

 ஆனால், இவர்கள் தொடர்ந்து பறையர் சமூகம், ஒடுக்கப்பட்ட சமூகம் அதில் மற்ற சமூகத்தின் அடக்குமுறைகளை நாங்கள் படமாக காட்டுகிறோம் என்று பல படங்கள் ஜாதியின் திணிப்பை சினிமாவில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதையெல்லாம், மற்ற சமூகங்கள் எப்படி அதை பார்க்கிறதா? ஏற்றுக்கொள்கிறதா? என்பது தெரியவில்லை. ஆனால், இதையும் இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் எதை சொன்னாலும், ஆமாம் தாளம் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது .அவர்களுக்கு தேவை காசு, நீ என்ன சொன்னாலும் அதை போடுவார்கள் . அதுதான் இன்றைய கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகளில் நிலைமை . 

இங்கே காதல், மொழி ஒரு சமூகத்தின் மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது .எனக்கு ஒரு பிடிக்காத கருத்தை நான் எப்படி? ஏற்றுக்கொள்ள முடியும்? இதுதான் ஒரு சமூகத்தின் கருத்து. ஒரு சமூகம் எனக்கு தேவையில்லை என்று எதை நினைக்கிறதோ, அதையே இவர்கள் படமாக கருத்தாக திணிக்கிறார்கள். அது சமத்துவம் இல்லை .சமுதாயத்தின் மாற்றமும் இல்லை, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுமில்லை. இதற்கு உதாரணமாக மலைவாழ் மக்கள் சமூகம் ,அருந்ததி சமூகம் இவர்களை ஏன் பறையர் சமூகம் காதலிப்பதாக காட்டவில்லை? அப்படி காட்டினால், அங்கே சமூக ஏற்றத்தாழ்வு மறையும் அல்லவா ?அதுவும் இவர்கள் சொல்லும் கருத்துக்கு இந்த கருத்து முக்கியமானது .மேலும்,

இந்திய திணிப்பை தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும், மக்களும் ஏற்றுக் கொள்கிறார்களா ? அதற்கு எவ்வளவு போராட்டங்கள் நடத்துகிறார்கள்? அதே இந்தியை விரும்பி படிக்கும் மக்களும் இருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். அது போல் தான், விருப்பம் இல்லாத ஒருவரை,காதலிக்க வைத்து திருமணம் செய்வது சமூகத்திற்கு எதிரானது. அது போல்தான், இவர்களுடைய சொந்த கருத்தை ஒரு சமுதாயத்தின் மீது திணித்து படமாக்குகிறார்கள்.

 மேலும், அன்றைய காலத்தில் அப்படி கருத்து திணிப்பு வைத்து யாருமே படம் எடுத்ததில்லை. ஜாதி என்ற ஒரு உணர்வே இல்லாமல், சினிமாத்துறை இருந்தது. இவர்களெல்லாம் வந்த பிறகுதான் இப்போது ஜாதி என்பது சினிமாவுக்குள் தெரிகிறது. ஆரம்பத்தில் பாரதிராஜா என்ன ஜாதி? என்று கூட எங்களுக்கு எல்லாம் தெரியாது. அது போல் எந்த இயக்குனர்களும், நடிகர்களும் என்ன ஜாதி ?என்று கூட தெரியாது. இவர்கள் வந்து பிறகு தான் இந்த ஜாதி என்ற ஒரு சொல் சினிமாவுக்குள் தெரிகிறது.

இது சினிமாவில் மட்டுமல்ல, பத்திரிக்கை துறையில், அரசியலில், எல்லாவற்றையும் ஜாதி என்று முன்னிலைப்படுத்தியது முட்டாள்களின் வேலை. ஜாதி என்பது உன்னுடைய சமூகத்தில் வைத்துக் கொள், அங்கே உன்னுடைய மகளுக்கோ, மகனுக்கோ, உனக்கோ, திருமண உறவு, பந்தங்களுக்குள் இருந்த ஜாதி, அரசியலுக்கு தேவையற்றது. எப்போது ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் ஜாதி சங்கங்களை அரசியலில் கொண்டு வந்தார்களோ, அப்போதே இந்த ஜாதிகளுக்குள் இருந்த ஒற்றுமை, மதிப்பு ,மரியாதை குறைந்துவிட்டது.

ஜாதியை வைத்து ஜாதியை சாப்பிடும் வேலை தான் ஜாதி அரசியல். சினிமாவில் ஜாதி படங்களை எடுத்தால், அதுவும் மற்ற சமூகங்களுக்கு எதிராக சொல்லப்படும் கருத்து, இதை எப்படி ஏற்றுக்கொள்ளும்? இதை மற்ற சமூகங்கள் ஏற்றுக் கொள்ளாது.மேலும்,  என்னுடைய கருத்தை ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சினிமாவில் சொல்வது தவறான ஒன்று .அது அந்த சமூகத்திற்கு பிடிக்காத ஒன்று.

( ரஞ்சித்தே சொல்கிறார் மற்ற சமூகங்களுக்கும், தலித்துகளுக்கும் இடையே கல்சர் வேறுபாடு இருக்கிறது. சரி அதை மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்கிறது. தலித் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை, இவருடைய கருத்து. அதற்காக நீங்கள் சினிமா படம் எடுத்து அவர்களை ஏற்றுக் கொள்ள வைத்து விடுவீர்களா?  ஏற்பது, ஏற்காதது அவரவர் மன விருப்பம். நான் ஒரு கருத்தை சொல்கிறேன். நீ அதை ஏற்றுக் கொள்வாயா ?அது உன்னுடைய விருப்பம் . நான் அதை உன்னிடம் திணிக்க முடியாது . என்ன தெரியுமா? அதை படமாக எடுத்துவிட்டு, இப்போது அது அசிங்கப்படுகிறது.)

 இதையெல்லாம் படமாக்கி ,அந்த படத்தை இதுவரை நான் பார்த்தது கூட கிடையாது .ஆனால், இந்த கருத்துக்கள் ,விமர்சனங்களாக தற்போது சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும்போது, இப்போது தான் அதை பார்க்கிறேன். நான் சினிமா தியேட்டருக்கு போய் படம் பார்த்து சுமார் ஒரு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது .சினிமா என்பது எல்லையற்ற பறந்து விரிந்த கடலில், விஷ விதைகளை பரப்புகிறார்கள் . எல்லா சமூக மக்களும் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களும், எல்லா சமூக மக்களும் வரவேற்கக் கூடிய கருத்துக்களும் அந்த காலத்தில் படமாக இருந்தது. இவர்களுக்கு என்ன தெரியுமோ, அதை மட்டுமே படம் என்கிறார்கள். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கூட பாராட்டு தெரிவிக்கிறார். இவருக்கு எல்லாவற்றையும் சொல்லக்கூடிய கைடன்ஸ் கூட இதைப்பற்றி சொல்லவில்லை போல தெரிகிறது.

தமிழ்நாட்டில் சினிமா என்றால் என்ன? என்று தெரியாத மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், படித்த இளைஞர்கள் சிந்தித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள். இப்போது சினிமா, சீரியல் எதுவுமே சமூக நன்மைக்கும், நாட்டினுடைய தேச நன்மைக்கும், பயன்படாமல் இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக, சினிமாவாக ஆக்கிவிட்டார்கள். அதனால் தான், இந்த சினிமா கலாச்சாரத்திற்குள் எப்போது ஜாதி, மதம் உள்ளே வந்ததோ? அப்போதே அதனுடைய மதிப்பு, மரியாதை இழந்துவிட்டது. ஒருவருடைய திறமை, தகுதி சினிமாவில் கௌரவிக்கப்பட வேண்டும். இவர்களுடைய ஜாதியை கௌரவிக்கப்படுவதற்கு மற்ற சமூகங்கள் முட்டாள்களா ? 

ஜாதி என்பது எதற்கு ?என்று கூட தெரியாமல்,அதை சினிமாவில் படம் ஆக்கி மற்ற சமூகங்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். என்னை இந்த சமூகம் ஒடுக்குகிறது, இந்த சமூகம் எங்களை புறந்தள்ளுகிறது. ஒரு ஜாதிக்குள் எத்தனை போட்டிகள்? எத்தனை பொறாமைகள் இருக்கிறது? அவர்களெல்லாம் வாழவில்லையா? அவர்களுக்குள் எவ்வளவு போராட்டம் இருக்கிறது ? எத்தனை வேற்றுமைகள் இருக்கிறது? இந்த காலத்தில் ஆவது ஜாதி வெறி இல்லை. ஆனால், பா ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் சிலர் ஜாதி வெறியர்களாக படம் எடுக்கிறார்கள். இதை எப்படி மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளும் …….. ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *