ஏப்ரல் 15, 2025 • Makkal Adhikaram
.jpeg)
தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகியான முரளிதரன் தவிர, அனைத்து நிர்வாகிகளும் நீக்கப்பட்டுள்ளனர். இது காவல்துறை மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு தேனி மாவட்டத்தில் இந்த பெயரை சொல்லி அடையாள அட்டை காண்பித்தாலோ அல்லது விசிடிங் கார்டு காண்பித்தாலோ, சட்டப்படி அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இந்த பெயரை சொல்லி அரசு அதிகாரிகளிடமும் அல்லது காவல் துறை அதிகாரிகளிடமும் சிபாரிசுகள் அல்லது வேறு ஏதாவது சொந்த நலத்திற்காக இப்பெயரை சொல்லி பயன்படுத்தினால், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு எக்காரணம் கொண்டும் அதற்கு பொறுப்பாகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், மேற்படி பெயரில் உள்ளவர்கள் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு நீக்கப்பட்ட பெயர்களின் விவரம் அதாவது அசோக்குமார் தேனி மாவட்ட தலைவர், கண்ணன் தேனி மாவட்ட செயலாளர், ராஜா தேனி மாவட்ட பொருளாளர், பாண்டி தேனி மாவட்ட துணை தலைவர், சிவபாண்டியன் இணை செயலாளர், இது தவிர ,எந்த பொறுப்பும் கொடுக்காமல் உள்ள ஒருவர் தானும் நிர்வாகி என்று பால் கண்ணன் சொல்லி வருவதாக தகவல்.
அவருக்கும் சங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும், இவர் மக்கள் அதிகாரம் பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியுள்ளது. என்பதையும் இங்கு அரசுத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்க இச்சங்கம் கடமைப்பட்டுள்ளது.மேலும்,
இவர்கள் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், அதன் செயல்பாட்டுக்காகவும், அடையாள அட்டை கொடுக்கப்பட்ட நாளிலிருந்து,எந்த விதத்திலும், சங்கப் பணியிலும், அதன் வளர்ச்சிப் பணியிலும், தொடர்பில் இல்லாமல் இருந்ததால், இவர்கள் மீது மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறோம் – தலைவர்ராஜேந்திரன்.