ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் இருக்கும் வரை மெரினாவில் நடந்த உயிர் இழப்பு சம்பவங்கள் போல் பல நடந்துள்ளது. சுயநலமும், ஊழலும் மட்டுமே ஸ்டாலின் ஆட்சி …! என்பது இது எடுத்துக்காட்டு -மக்கள் உண்மை, நேர்மையின் முக்கியத்துவம் உணராத வரை இதுதான் ஆட்சி நிர்வாகம் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விளையாட்டு

அக்டோபர் 08, 2024 • Makkal Adhikaram

ராணுவ விமானங்களின் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற மெரினாவில் சுமார் பத்து லட்சம் பேர் கூட்டம்! நெருக்கடியில் 10 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர். தமிழக அரசு இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தும் போது மக்களின் கூட்டத்திற்கு, அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் . இது முதல் தவறு. 

அடுத்தது மக்கள் இவ்வளவு கூட்டம் கூடும்போது, ஏதாவது ஒரு பிரச்சனையோ, அசம்பாவிதமோ ஏற்பட்டால், திடீரென்று வெளிவர முடியுமா? என்பதை சிந்தித்து இருக்க வேண்டும். பெரும்பாலான நகர மக்கள் தான் அதிக அளவில் இங்கே கூடியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலும் படித்தவர்கள் அதிகம் இருப்பார்கள். இந்த சூழ்நிலையில் இந்தப் படித்த மக்கள் கொஞ்சமாவது இவர்களுக்கு சிந்தித்து செயல்பட வேண்டுமா? இவ்வளவு கூட்டம் கூடும்போதே, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியேறி இருக்க வேண்டும் . ஒரு பக்கம் கடும் வெயில், கூட்ட நெரிசல், இதில் பல பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அது ஹீட் ஸ்ட்ரோக் கூட வந்திருக்கலாம் .

ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்றால் இந்த மக்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவில்லை. வயதைப் பற்றி சிந்திக்கவில்லை. எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவில்லை. உழைப்பைப் பற்றி சிந்திக்கவில்லை. ஜாலி, என்ஜாய், பொழுதுபோக்கு இதைப் பற்றி சிந்திக்கிற மக்கள் ஏன் இந்த நாட்டைப் பற்றி சிந்தித்து கவலைப்பட போகிறார்கள்? இந்த சமூகத்தை பற்றி கவலைப்பட போகிறார்கள்? உண்மையைப் பற்றி கவலைப்பட போகிறார்கள்? உல்லாச வாழ்க்கை மட்டுமே கவலைப்படுவார்கள். இவ்வளவு சுயநலம் மிக்க மக்கள் சென்னையில் வாழ்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. 

நேற்று கூட ஆட்டோக்கார் ஒருவர் என்னுடன் இதைதான் பேசி வருகிறார். இந்தப் பிரச்சினையை பற்றி தான் ஆட்டோவில் வரும் போது பேசினார். இந்த அரசு பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டது. அப்போது தான் சொன்னேன். இந்த அரசை நம்பி மக்கள் வாழ முடியாது. உங்களை நம்பி தான் நீங்கள் வாழ வேண்டும். அரசு, கட்சி, ஆட்சி எல்லாம் சுயநலமாகிவிட்டது. பொதுநலம் இருந்தால் தான் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும். பேசுவது பொதுநலம். செயல்படுவது சுயநலம். பேச்சை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் மக்கள், இந்த கதிக்கு தான் ஆள ஆவார்கள். எப்போது இந்த கார்ப்பரேட் மீடியாக்களில் பேசுவதை அரசியல் என்று நம்பி இந்த மக்கள் இருக்கும் வரை அவர்களுடைய வாழ்க்கை இதுதான் முடிவு . 

இதைக் கேள்வி கேட்கும் அரசியல் கட்சிகள், அவர்கள் அரசியல் ஆதாயத்துக்கு கேட்கிறார்களா? இல்லை உண்மையிலேயே மக்கள் நலனுக்காக கேட்கிறார்களா? இதுவும் ஒரு கேள்விக்குறியாக தான் உள்ளது. அந்த அளவிற்கு சுயநலம் என்பது அரசியல் கட்சி, அரசியல் என்பது சுயநலம், ஆட்சி என்பது சுயநலம், ஆட்சி நிர்வாகம் என்பது சுயநலம், இந்த சுயநலத்தின் ஒவ்வொரு படிக்கட்டிலும் பணம், இந்த பணத்திற்காக மனித வாழ்க்கையில் இன்று போராட்டம் ஆகிவிட்டது . 

இது மக்களின் எதிர்கால வாழ்க்கை, இளைய தலைமுறைகளின் சந்ததிகளின் வாழ்க்கை நிச்சயம் பாதிக்கும் . மக்கள் எதற்கு? சுயநலம் எதற்கு? பொதுநலம் என்று தெரியாமல் பட்டம் வாங்கி வாழ்வது பயனில்லை . அதனால், இப்படிப்பட்ட கூட்ட நெரிசலில் இந்த அரசாங்கத்தை நம்பி இறங்கி இருக்கும் இந்த மக்கள் தான் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். தவறு மக்களிடமும் உள்ளது. அரசாங்கத்திடம் அதிக அளவில் உள்ளது. உயிரிழந்த நபர்களுக்கு தல ஐந்து லட்சம் மதிப்பீடு செய்து, இந்த உயிர்களுக்கு விலை கொடுத்து விட்டது. இதுதான் அரசாங்கத்தின் ஒரு உயிரின் விலை . 

அதனால், அரசாங்கம் நம்பி மக்கள் இருந்தால் வாழ முடியாது. நாங்கள் எப்படி சமூக நலனுக்காக பத்திரிகை நடத்திக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோமோ, அப்படிதான் இந்த மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் என்பது சுயநலத்தின் உச்சமாகிவிட்டது. அதிகாரம் என்பது அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் ஆகிவிட்டது. இங்கே சமான்ய மக்கள் ஸ்டாலின் ஆட்சியில்! ஊழல் செய்த பணத்தில் ஓட்டுக்கு மக்களின் அதிகாரத்தை விலை பேசுவார்கள். அதையும் நல்லாட்சி என்று இன்றைய கூலிக்கு கூவுகின்ற கூட்டமாக சில பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் சொல்வதை நம்பி ஏமாந்தால், வாழ்க்கை என்பது இனி  போராட்டம் தான் . 

ஓட்டுக்கு உங்களுடைய அதிகாரத்தை ஆயிரம், இரண்டாயிரத்திற்கு விற்கும் போது நாட்டின் அரசியல் சுயநலமாகிவிட்டது .ஆட்சி, நிர்வாகம், சுயநலமாகிவிட்டது .அரசியல் கட்சிகள் சுயநலமாகிவிட்டது. அதனால் தவறு செய்பவர்கள் மக்கள் தான் . மக்கள் உங்களை திருத்திக் கொள்ளாத வரை, இந்த அரசாங்கமும்,, அரசியல் கட்சிகளும் திருத்திக் கொள்ளாது. உண்மையை உணர்வார்களா? ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *