மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் செய்தித் துறையில் சட்டங்களை மாற்றுவது காலத்தின் கட்டாயம் – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram

மத்திய மாநில அரசின் செய்தி துறைகள் பத்திரிக்கை துறையை சர்குலேஷன் துறையாக மாற்றி விட்டார்கள். அதாவது இது செய்தி துறையா? அல்லது சர்குலேஷன் துறையா? 

செய்தித் துறை என்றால் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இங்கே சர்குலேஷனுக்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள். செய்தி என்பது அவசியம்! மக்களின் வாழ்வியலோடு , அரசியல் நிர்வாகத்தினோடு, அரசியலோடு, அரசியல் கட்சிகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. இதுதான் கரு. இதை விட்டுவிட்டு பத்திரிகைகளின் சர்குலேஷன் மட்டுமே பத்திரிகையா? 

இது ஏன் இங்கே தொடர்ந்து மக்கள் அதிகாரம் வலியுறுத்தி வருகிறது? என்றால், செய்தித்துறை ஒரு பத்திரிக்கையின்  கட்டுரைகள், சமூக நோக்கத்திற்கான செய்திகள், எதன் அடிப்படையில்  என்பதை தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும்? சர்குலேஷன் என்பது  அரசாங்கம் கொடுக்கின்ற விளம்பரத்தில், சலுகைகளில், சர்குலேஷனை காட்டுவது திறமை என்கிறார்கள். அதுவல்ல திறமை. 

திறமை என்பது சமூக நோக்கத்திற்கானது .மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது,  இதுதான் உண்மையான பத்திரிக்கையின் நோக்கம். இதை விட்டுவிட்டு சர்குலேஷன் என்கிறார்கள். இன்றைக்கு சர்குலேஷன் காட்டும் பத்திரிகைகள் ஆரம்பத்தில் அதனுடைய நிலைமை என்ன என்பதை செய்தித்துறை அதிகாரிகளுக்கு தெரியுமா? தெரியாதா? பலமுறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் எழுதி இருக்கிறேன். 

தலையில் சுமந்து விற்ற பத்திரிக்கை தான் தினத்தந்தி, ஒரு காலத்தில் இலவசமாக டீக்கடைகளில் போடப்பட்ட பத்திரிகை தான் தினமலர். பத்திரிக்கையை பற்றி அக்காலத்தில் வேலை செய்தவர்கள் சொன்ன உண்மை. இப்போ அப்படியே அது சர்குலேஷன் பத்திரிக்கையாக மாறிவிட்டது?  அரசு விளம்பரங்கள், மத்திய மாநில அரசின் ஆதரவு ,இது பெரிய விஷயம் அல்ல. சர்குலேஷன் என்பது திரும்பவும் சொல்கிறேன்.

 மத்திய மாநில அரசின் செய்தித்துறை பத்திரிகையின் தரம், செய்தியின் தரம், சமூக நோக்கம் இதன் அடிப்படையில் தான் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், எமது கோரிக்கை. ஏனென்றால் தமிழக அரசே செய்தி துறையில் மாற்றம் கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது அவசியம் தேவையான ஒன்று. அதையும் சர்குலேஷன் அடிப்படையில் அந்த மாற்றத்தை கொண்டு வந்தால், அது கார்ப்பரேட்டுக்கு தானே தவிர ,சமூக நலன் பத்திரிகைகளுக்கு அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும்,மத்திய அரசு கொண்டு வந்துள்ள இணையதள பத்திரிக்கையில்  தினமும் சுமார் 50 லட்சம் பார்வையாளர்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி செய்தியைப் பார்ப்பவர்கள்  அல்லது படிப்பவர்கள் நிச்சயம் இருக்க முடியாது. காரணம் செய்தி என்பது சுருக்கமாக  புரிந்து கொள்ளும்  விஷயம். இதை ஒரு பத்திரிக்கையில் 50 லட்சம் பேர் பார்வையாளர்களாக தினமும் இருக்கவே  வாய்ப்பில்லை. அது  செய்திக்கும், சமூக நோக்கத்திற்கும்  இருக்காது. ஒருவேளை சினிமா ,கேளிக்கை மற்றும் விளையாட்டு போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடிய இளைஞர்கள் ஆகத்தான் அவர்கள் இருப்பார்கள். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும், செய்தித் துறை  செய்தியின் நோக்கம் சர்குலேஷனா? அல்லது தரமான உண்மையான செய்தியின் சமூக நோக்கமா எது?மேலும்,

 இதை எல்லாம் தெரிந்துதான் அந்த பத்திரிக்கைக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் மேலும் தற்போது சர்குலேஷன் என்பது பெரிய அளவில் எந்த பத்திரிகைகளும் இல்லை. இதில் பத்தாயிரம் காப்பி  யார் அடிக்கிறார்கள் இந்த சட்டமே தவறான சட்டம் பணம் இருந்தால் பிளாக் மணி இருக்கிறவன் தான் அடிப்பான் .பணம் இருக்கிறவன் அடிப்பான் .அப்போது திறமை இருப்பவர்கள் வரக்கூடாதா? இங்கே திறமைக்கு, தகுதிக்கு முக்கியத்துவமா? இல்லை .பணத்திற்கு முக்கியத்துவமா? எதற்கு?மத்திய, மாநில அரசின் செய்தி துறை தெளிவுபடுத்த வேண்டும். 

மேடையில் பேசுவது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு என்ற வசனமா? இதையெல்லாம் பத்திரிகையாளர்களிடம் பேச முடியாது. எங்களுக்கு தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *