நவம்பர் 20, 2024 • Makkal Adhikaram
இன்று நாட்டில் சட்டத்தை ஏமாற்றி சம்பாதிக்கும் நூற்றுக்கு 95 சதவீதம் அரசியல் கட்சிகள்,அரசியல் கட்சியினர் அரசியல் பின்புலத்தில் தான் இருக்கிறார்கள் .அதனால் தான், மக்கள் அரசியல் கட்சியின் மீது தற்போது நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறமான வழிகளில் சம்பாதித்து விட்டு, சட்டப்படி சம்பாதித்ததாக கணக்கு காட்டுவது சட்டத்தின் ஓட்டையா? அல்லது இவர்கள் திறமையா ? குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? எதுவும் தெரியாது. அவர்களுக்கு பணம் கொடுத்தால் எல்லாம் ஒன்றுதான்.
ஏனென்றால் மனசாட்சி இல்லாத மக்கள் எப்படியும் பேசுவார்கள் .அதே போல் தான் மனசாட்சி இல்லாத அரசியல் கட்சியினர், சட்டத்திற்கு புறம்பான வழிகளில், அரசியல் கட்சிகளின் பின் புலத்தில் பல கோடிகளை சம்பாதிக்கிறார்கள். அதில் வரி ஏய்ப்பு, வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்ப்பது, வெளிநாட்டு முதலீடுகள் ,ஹவாலா மோசடிகள் இவை அத்தனையும் நாட்டில் யார் செய்து கொண்டிருக்கிறார்கள்? அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இருப்பவர்கள் தான் செய்கிறார்கள்.
மேடைகளில் கட்சி கொள்கை பேசிவிட்டு, மக்களிடம் கொள்ளை அடிக்கும் வேலை செய்வது அரசியலா? அதற்கு முட்டு கொடுக்கும் வேலை தான் பத்திரிக்கை,தொலைக்காட்சியா? இது அரசியல் தெரியாத மக்களிடம் இந்த பத்திரிகைகள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் தெரியாத மக்களிடம் இந்த அரசியல் கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அரசியலை படிக்க வேண்டும்.படித்த சமூகம் தொடர்ந்து இந்த அரசியல் கட்சியினரின் அராஜகங்களையும், அடாவடித்தனங்களையும், சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிக்கும் வேலையும், ஏற்றுக் கொள்ளாது. அதனால்தான் நாட்டில் இன்று எல்லோரும் அரசியல் கட்சிகளை படிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை! மக்கள் நலனுக்காக இச்செய்தியை வெளியிடுகிறது . இந்த செய்திகள் எந்த பத்திரிக்கையிலும் வெளிவராது . மேலும்,
கடந்த சில தினங்களுக்கு முன் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதுபோல் தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் சட்டத்திற்கு புறம்பாக கோடிகளை சம்பாதித்து, அரசியல் கட்சிகளுக்கு டொனேஷன் கொடுத்து , விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொது செயலாளர் மார்ட்டின் மகன் ஆதவ் அர்ஜுனன் வாங்கிக் கொண்டார் என்று அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படி இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் பத்திரிக்கை துறையை கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் நக்கீரன் கோபால் போன்றவரும் கரை வேட்டி கட்டாத திமுக காரன் என்று சொல்லும் அளவிற்கு அவரே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
அப்படி என்றால் பத்திரிக்கை என்பது அரசியல் கட்சியின் சார்பில் இயங்குகின்ற பத்திரிகை எல்லாம் பத்திரிக்கையா? இதுதான் பத்திரிகையின் நடுநிலையா? அல்லது பத்திரிக்கை சுதந்திரமா? தேவைப்படும்போது நடுநிலை, பத்திரிகை சுதந்திரம் இது எல்லாம் எழுதிக் கொள்ளலாம், பேசிக் கொள்ளலாம் .ஆனால், நடைமுறையில் எந்த அளவுக்கு அந்தந்த பத்திரிகையில் இருக்கிறது? என்பதுதான் இப்போதுள்ள காலகட்டத்தின் ஒவ்வொரு பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் வந்துள்ள முக்கிய சுய பரிசோதனை.
மேலும் ,அரசியல் பொதுநலம்! சுயநலமானால் கிரிமினல்கள் உள்ளே வருகிறார்கள். அதே போல் தான் பத்திரிக்கை சுயநலமானால், அரசியல் கட்சி கிரிமினல்களை, நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், சமூகத்திற்காக பாடுபடுபவர்களாகவும், அவர்கள் எவ்வளவு மணல் கொள்ளை அடித்தாலும், ஏழை மக்களுக்கு வேட்டி, சேலைகளை கொடுப்பதை போல் நூறு ,இருநூறு பேருக்கு வாங்கி கொடுத்துவிட்டு, சினிமா ஷோ காட்டும் அரசியல்!
அந்த அரசியலுக்கு துணை போகக் கூடிய பத்திரிகைகள், அதற்கு தான் நாட்டில் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது . சட்டம் போலிகளுக்கு சொந்தமானதாக இருக்கிறதா? நீதிமன்றங்களுக்கு பல செய்திகளை மக்கள் அதிகாரம் சார்பில் இப் பிரச்சனைகளை நீதித்துறைக்கும், மக்களுக்கும், அரசியலுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறது . உண்மை எது? பொய் எது? என்பது ஆய்வு செய்து எழுதுவது தான் பத்திரிக்கை.
திருடன் சொல்வது, கொலைகாரன் சொல்வது,கொள்ளையடிப்பவன் சொல்வது, நான் எதையுமே செய்யவில்லை,நான் நிரபராதி, எனக்கு எதுவும் தெரியாது என்று நீதிமன்றத்தில் குற்றவாளியும் சொல்வான். நீதிபதி அவன் சொல்வது உண்மை என்று அவனுக்கு தீர்ப்பு கொடுத்து விடலாமா? அந்த இடத்தில் தான் பத்திரிக்கை! அந்த இடத்தில் தான் பொதுநலம்! அந்த இடத்தில் தான் சமூக நோக்கம் !அந்த இடத்தில் தான் சமூக நலன்! அந்த இடத்தில் தான் தேச நலன்!கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள் போல பத்திரிகைகள் பல இருக்கிறது. அது மக்களையும், இந்த சமூகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் பத்திரிகை உலகம் இன்னும் பத்திரிக்கை பற்றி தெரியாமல், இதுதான் பத்திரிக்கை என்று எழுதிக் கொண்டிருக்கும் கூட்டங்கள் அதிகம் .மேலும்,
தற்போது இணையதளங்களில், வாட்ஸ் அப்பில், செய்தி போடும் கூட்டம் கூட தானும் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தெரியாமல் செய்தித் துறையில் அதிகாரிகளாக இருப்பது அதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை . எவன் எந்த பேப்பரை எடுத்து வந்து கையில் நீட்டினாலும் ,அது பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.காரணம் அவர்களுக்கு (RNI )இருந்தால் பத்திரிக்கை, அரசு செய்து இருந்தால் பத்திரிக்கை, இதுதான் செய்தி துறை அதிகாரிகள் பார்க்கிறார்களே ஒழிய, அதனுடைய தரத்தை பற்றி அவர்கள் பார்ப்பதில்லை . அதனால் தான் பத்திரிக்கை துறை சீர் செய்யப்பட வேண்டும்.மேலும்,
இன்று நாட்டில் நடக்கின்ற மோசடி வேலைகளுக்கு, அரசியலில் குறிப்பிட்ட சதவீத மக்கள் ஏமாறுவதற்கு, இன்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் முக்கிய காரணம், எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கை இருக்க வேண்டுமோ, அந்த நோக்கத்தை மாற்றி வியாபாரமும் ,சுயநலமும், வருமானமும் பார்க்கின்ற பலர் ,அப்படிப்பட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் ,அதை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் !நீதிமன்றம் அதற்கு நடுநிலையான தீர்ப்பு ,சட்டத்தின் பார்வை, சமூகத்தின் பார்வை ,இந்த தேசத்தின் பார்வை ,அனைத்தையும் பத்திரிக்கையில் இருக்க வேண்டும் .
அதுதான் பத்திரிகை துறையை சீர் செய்ய வேண்டிய முக்கிய சட்டமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த சட்டங்கள் தினசரி, வாரம், மாதம் என்று ஓட்டைகளை கொண்டுள்ள சட்டமாக இருக்கிறது.இதில் செய்திகள் முக்கியத்துவமா? சர்குலேஷன் முக்கியத்துவமா? அதில் அரசின் கொள்கை முடிவு முக்கியத்துவமா? கொள்கை முடிவு என்றால்! பத்திரிகை சுதந்திரம் இல்லையா? இதையெல்லாம் நீதித்துறை கவனத்தில் கொண்டு இப் பிரச்சனைக்கு தீர்வு காண சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.