டிசம்பர் 31, 2024 • Makkal Adhikaram
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கார்ப்பரேட் ஊடகங்கள் ஊழலைப் பற்றி செய்திகளை வெளியிடவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அது உண்மைதான்.
ஆனால், சமூக நலன் ஊடகங்கள், எத்தனையோ ஊழல் மற்றும் எத்தனையோ பிரச்சனைகளைப் பற்றி வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். அதற்கெல்லாம் மத்திய அரசு என்ன சலுகை, விளம்பரங்கள் கொடுத்துள்ளது? மத்திய செய்தித்துறை இணையமைச்சர் எல். முருகன் என்ன நடவடிக்கை எடுத்தார்? எல்லோருக்கும் எளிதானது. இந்த காட்சி ஊடகங்களில் பேசி விட்டு போவது எல்லாம் அரசியல் ஆகிவிட்டது.
எங்களுடைய சமூக நலன் ஊடகங்களின் போராட்டத்தைப் பற்றி கொஞ்சமாவது சிந்தித்துப் பார்த்திருப்பீர்களா? உங்களை யார்? ஃபோட்டோ காட்டுகிறார்கள்? உங்களுடைய பேச்சுக்களை யார் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்? இதுதான் எல்லா அரசியல் கட்சிகளின் முக்கிய நோக்கமா? அதுதான் அரசியலா?
ஊழல் குற்றச்சாட்டுகளை கோவை மாநகராட்சிகளில் கூட வெளி வருகின்ற ஊழல் குற்றச்சாட்டுகளை கார்ப்பரேட் ஊடகங்கள் வெளியிடுவதில்லை. என்பதை சொல்கிறீர்கள். ஆனால், இப்போது கூட பல மாவட்ட ஆட்சியர்கள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளோம், மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தில் இப்படி பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டுவரும் எங்களுடைய பத்திரிகைகளுக்கு நீங்கள் என்ன நல்லது செய்து இருக்கிறீர்கள்? இதைப் பற்றி அண்ணாமலை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பாரா?
மத்திய அரசின் செய்தித்துறை இதைப் பற்றி ஏன் கண்டுகொள்ளவில்லை? உங்களுடைய whatsapp குரூப்புகளிலும் அனுப்புகிறோம். இவையெல்லாம் உங்கள் கவனத்திற்கு வரவில்லையா? இல்லை, வந்தாலும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லையா? அரசியல் கட்சிகள் பத்திரிக்கைக்குள் அரசியல் செய்வது, பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது. சமூக நலனுக்கு எதிரானது. மேலும் மத்திய செய்தித் துறை இணை அமைச்சர் எல்.முருகன் என்ன நடவடிக்கை எடுத்தார்? இதையெல்லாம் உங்கள் கவனத்திற்கு இச் செய்திகள் மூலம் நேரடியாக கொண்டு வந்திருக்கிறோம்.
மேலும், எங்களுக்கு மாநில அரசும்,மத்திய அரசும் செய்யவில்லை. பிரச்சனைக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது? காலத்திற்கு ஏற்ற சட்டங்கள் செய்து துறையில் கொண்டு வர வேண்டும் என்பதுதான் சமூக நலன் பத்திரிகையாளர்களின் முக்கிய கோரிக்கை. இதைப் பற்றி அண்ணாமலை பிரதமர் மோடி இடம் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பாரா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.