மார்ச் 23, 2025 • Makkal Adhikaram

நாட்டில் ஊழலுக்கும், கருப்பு பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே, அது சாத்தியம்.அதாவது,

தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சிக்காரர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது கருப்பு பணமும், ஊழல் செய்த பணமும் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஊழல் செய்த பணத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயிப்பது இன்றைய ஒரு அரசியல் வியாபாரமாகவே ஆகிவிட்டது. மேலும்,


ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 100 கோடி செலவு செய்வது, ஆயிரம் கோடி கொள்ளை அடிப்பது, இதற்கு பதிலாக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்துவிடலாம். தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட தவறான ஒரு தேர்தலை நடத்துவதை விட, ஒவ்வொரு தொகுதியும், யார் ?அதிக பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஏலத்தில் எடுத்துக் கொடுத்து விடுங்கள் மிகவும் சுலபமான வேலை.

இது பற்றி எத்தனையோ முறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் போன்றவற்றில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியே போனால் நாட்டில் தேர்தல் நடத்துவது ஒரு வீணான வேலை. அதனால், செய்தால் ஒழுங்காக செய்யுங்கள்.

அதாவது தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்படுவது போல, தேர்தல் ஆணையத்திலும் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதாவது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறைந்து விடும் .வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால், தகுதியானவர்களுக்கே வாக்களிப்பார்கள். தகுதி என்ற ஒன்றை இல்லாதவர்கள் தான், வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், தேர்தல் விதிமுறைகளில்,

தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் அவர்களுடைய சொத்து கணக்கு, குடும்பத்தினர் சொத்து கணக்கு, வெளிப்படையாக தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும்.தவறான தகவல் கொடுத்து வெற்றி பெற்றால் உடனடியாக அவர்களுடைய பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் தவறான தகவல் கொடுத்தவர், எப்படி மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகத்தையும் நன்மையும் செய்வார்?

மேலும், பதவிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் அவருடைய சொத்து பட்டியலை வெளியிட வேண்டும். அது, தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, தேர்தல் வேட்பாளர்கள் விண்ணப்ப படிவத்தில் அதாவது (எம்எல்ஏ, எம்பி,) சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்தால் பதவி நீக்கம் செய்து அந்த சொத்துக்களை அரசாங்கத்தில் ஒப்படைக்கவும், அல்லது என் மீது ஊழல் வழக்குகள் அல்லது குற்ற வழக்குகள் வந்தால் தேர்தல் ஆணையத்திற்கு என்னுடைய பதவியை நீக்கம் செய்யவும் நான் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன்.

மக்களை சந்திக்க எளிமையான தலைவர்கள் இப்போது இல்லை. இப்போது சொகுசு காரில் கொடி கட்டி பந்தா காட்டும் எம்பி, எம்எல்ஏக்களும், மாநில கட்சி தலைவர்களும் தான் இருக்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் எல்லாம் கார்ப்பரேட் அரசியல்வாதியாக ஆகிவிட்டார்கள். கார்ப்பரேட் அரசியல்வாதிகள், கார்ப்பரேட் ஊடகங்களில் பேசுவதை மட்டும் தான் அது ஒரு பந்தாவாகவும், பெருமையாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், இது அரசியல் தெரியாத முட்டாள்களை ஏமாற்றும் வேலை. தெரிந்தவர்கள் அதை ஏற்க மாட்டார்கள்.

எனவே, இன்று அரசியல் என்றால், உழைக்கும் மக்களுக்காக என்பதை விட, ஊரை ஏமாற்றும் கூட்டத்திற்கும் கட்சியினருக்குமாக மாறிவிட்டது.எந்த கார்ப்பரேட் ஊடகங்களில் இந்த செய்தி எல்லாம் வெளியிட்டு இருக்கிறார்கள் என்பதை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். அதுதான் இந்த கருப்பு பணமும் ஊழலும்,

மேலும், இவர்கள் பதவி அதிகாரத்தில் கொள்ளை அடித்து விட்டு, இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தாலும், தண்டனை எந்த நீதிமன்றத்திலும், கொடுத்து இவர்களுடைய சொத்துக்களை முடக்கி, அரசாங்கத்திற்கு இதுவரை எந்த (ED) அமலாக்க துறையும், சிபிஐயும், வருமானவரித்துறையும் செய்யவில்லை.அங்கும் அரசியல் தலையிட்டால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்ற தகவல் வெளியாகிறது.

மேலும், நீதிமன்றத்தில் வாய்தா வாங்கி சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனி ஓட்டை சட்டமாகவே இன்று வரை அது இருந்து வருகிறது. இது சட்டத்தின் ஓட்டையா? அல்லது நீதிமன்றத்தின் ஓட்டையா? என்பது பொதுமக்களுக்கு புரியாத ஒரு குழப்பமாக இருக்கிறது.தவிர,
சமீபத்தில் டெல்லியில் நீதிபதியின் வீட்டில் இருந்து 100 கோடிக்கு மேலாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம், நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இப்படி இந்த ஊழல் மற்றும் கருப்பு பணம் நாட்டை ஒட்டுமொத்த நிர்வாகத்தையும், சீர்குலைக்கிறது. உழைப்பை கேவலமாக்குகிறது. உழைக்கும் மக்கள் முன்னேற்றத்தை தடுக்கிறது.
அதனால், நாட்டில் ஊழலை மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் கடுமையான சட்ட விதிகளை பின்பற்றி சொத்துக்களை முடக்கி அரசியல்வாதிகளுக்கு தண்டனை கொடுத்தால் தான், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.