பெண்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் மற்றும் பெண்கள் வாழ்வுரிமை துவக்க விழா .

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேட்டூர்ணிமடம் சந்திப்பில் அமைந்துள்ள சாலோம் பெண்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியும், பெண்கள் வாழ்வுரிமை இயக்க துவக்க விழாவும் நாகர்கோவில் ஒய் எம் சி ஹாலில் நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் தாமோதரன்,( தமிழ்நாடு என் ஜி ஓ கூட்டமைப்பு தலைவர்) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு டேவிட்சன் சபை போதகர் தலைமையேற்று நடத்தினார். தவிர, விழா நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் கலந்து […]

Continue Reading

ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ வைபவம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் வைகாசி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ வைபவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் அர்ச்சனைகள் நடைபெற்றது. முத்துமாரி அம்மன் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக் காட்சியை காண பெரும் திரளாக அக்கிராமத்தினர் வந்து சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர் ” வந்தை ” நளினி

Continue Reading

விவசாயிகளையும் மண்பாண்ட தொழிலாளிகளையும் வைத்து ஏரி மண்ணை கொள்ளையடிக்கும் திமுக அரசின் திட்டமா ?

சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது விவசாய நிலத்திற்கு விவசாயிகள் ஏரிகளில் மண் எடுத்துக் கொள்ளலாம். அது வண்டல் மண்ணா? அல்லது சவுடு மண்ணா? எந்த மண் எடுப்பது? மேலும் ஒரு விவசாயி எத்தனை லோடு எடுக்கலாம்? எந்த வண்டியில் எடுக்கலாம்? எந்த விவரம் இல்லை. மேலும், எதற்காக விவசாயி அந்த மண்ணை எடுத்து, எந்த பயன்பாட்டிற்கு கொண்டு செல்கிறான்? அதன் வரைமுறை என்ன? கலெக்டர் கொடுக்கின்ற அனுமதி, அது ஊழல் முறைகேட்டுக்கு வழி வகுக்காதா? இது […]

Continue Reading

ஒரு அரசு ஊழியர் தன்னுடைய கடமையை செய்ய தவறினால் அவர் மீது வழக்கு தொடர முடியாதா?

அரசு ஊழியர் தன்னுடைய கடமையை செய்யத் தவறி விட்டார் என்றால், அவர் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுத்தர முடியும். ஆனால், அவர்கள் இந்திய தண்டனைச் சட்ட குற்றப் பிரிவு 197 காரணம் காட்டி தப்பித்துக் கொள்கிறார்கள். அது எப்படி என்றால், ஒரு அரசு ஊழியர் அவரது கடமையை செய்ய தவறி இருக்கும் பட்சத்தில் ,அவர் மீது வழக்கு தொடர அந்தந்த துறை செயலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்டு பதிவு தபாலில் […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் பொதுமக்கள் படும் அவதிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாவட்டத்திலிருந்து மாற்ற திருவள்ளூர் மாவட்ட மக்கள் கோரிக்கை.

ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி செயல்பட வேண்டும்? என்ற முறை தெரியாமல் அவருடைய பெயரில் (ஐஏஎஸ் என்கிற இந்திய ஆட்சிப் பணிக்கு மட்டும்) என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் .படித்து பட்டம் பெறுவது பெருமை அல்ல, அந்த பட்டத்திற்குரிய தகுதியை செயல்பாட்டில் பெறுவது தான் பெருமை.  அந்த வகையில் திருவள்ளூர் கலெக்டர் ஆஃபின் ஜான் வர்கீஸ் அதற்கு தகுதியானவர் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது .நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விடையூர் கிராமத்தில் இருந்து சுமார் […]

Continue Reading

நாட்டில் கிருத்துவ மத வாதிகள் மலைகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்றால் எந்த மலையும் இருக்காது.இயற்கையை அழித்தால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சர்ச்சுகள் நூற்றுக்கணக்கில் கட்டி இருக்கிறார்கள். இப்போது புதுவிதமாக பூண்டி ஊராட்சியில் உள்ள அரும்பாக்கம் கிராம பகுதியில் உள்ள மலைகளில் நாங்கள் ஆராதனை நடத்துகிறோம் என்ற பெயரில் சிலுவை வழிபாடு நடத்துகிறார்கள்.  இந்த வழிபாட்டுக்கு ஊராட்சி மன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. நாங்க எல்லாம் அந்த கிராமத்திற்கு நல்லது செய்கிறோம். அதற்கு பலனாக எங்களுக்கு அந்த மலையை நாங்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறோம் என்று ஒரு மறைமுகமான லஞ்சமாகத்தான் இது இருக்கிறது. அதற்கு மாவட்ட […]

Continue Reading

கிராமங்களில் நடக்கும் தவறுகளுக்கும்,ஊழல்களுக்கும், முழு பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்,அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் – சமூக பத்திரிகையாளர்கள்.

கிராமங்களில் நடக்கின்ற முறைகேடுகள் ,ஊழல்கள், எல்லாவற்றுக்கும் அந்தந்த துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் இவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால், இன்று கிராம ஊராட்சிகளின் நிர்வாக பிரதிநிதிகள் தான், எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோம்? என்பது கூட தெரியாமல் ஊராட்சி மன்ற தலைவராக வருவது, விவரம் தெரியாத மக்களை ஏமாற்றுவதற்கு தான் இந்த பதவி என்று நினைப்பவர்களும், மேலும் அந்தந்த கிராமங்களில் உள்ள ஊர் சொத்துக்களை கொள்ளை அடித்து பங்கு போட்டுக் கொள்வது, மற்றொரு பக்கம் […]

Continue Reading

திமுக அரசின்மீது பல அதிருப்திகள் பொதுமக்கள் மத்தியில் உள்ள நிலையில் அரசு அதிகாரிகள்! அதற்கு முட்டுக் கொடுக்கிறார்களா ?தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில், மக்களின் பிரச்சினைகளை கோரிக்கையாகவும், அவர்களுடைய கருத்துக்களை பிரதிபலிக்கும் பத்திரிகையாகவும், உண்மையான செய்திகளை நடுநிலையோடு வெளியிட்டு வருகிறது. இப்படிப்பட்ட பத்திரிகைகள் வெளியிட்டு வரும் உண்மை கருத்துக்கள், உண்மை செய்திகளுக்கு கூட அரசு அதிகாரிகள், அதற்கு உரிய தீர்வு காணாமல் சுய லாபங்களுக்காகவும், உள்ளாட்சி நிர்வாகிகளின் லாபங்களுக்காகவும், பணியாற்றுகிறார்கள் என்றால், இதைவிட ஒரு மோசமான நிர்வாகம் எதுவும் இருக்க முடியாது.மேலும், உண்மையை வெளிப்படையாகவே எடுத்துரைக்கின்ற எமது பத்திரிகை மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் […]

Continue Reading

மத்திய அரசு! உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் – இணைய தளம் ஏற்படுத்தியும், பொது மக்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு சரியான முறையில் இயக்கவில்லை என்பதுதான் கிராம பொது மக்களின் குற்றச்சாட்டு.

மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து, பல ஆண்டுகளாக, இந்த ஆன்லைன் மூலம் இணையதளத்தில் நிர்வாகத்தின் அனைத்து விவரங்களை தெரிந்து கொள்ளவும் மற்றும் கிராம பஞ்சாயத்துக்களின் கணக்கு வழக்குகள் வெளியிட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கட்டுரைகளையும், செய்திகளும் வெளியிட்டு வந்தோம். ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை. மத்திய அரசு செய்துள்ளது. அதற்காக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் வரவேற்று, பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், இங்கு தமிழக அரசு அதை சரியான முறையில் இயக்காமல், முடக்கி வைத்துள்ளது […]

Continue Reading

விடையூர் ஏரியில் இருக்கும் அடர்ந்த வேலிக்காத்தான் மரக் காடுகளை அதன் மதிப்பிற்கு தக்கவாறு வெளிப்படையாக ஏலம் விட தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை.

விடையூர் ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் அடர்ந்த வேலி காத்தான் மரங்கள் உள்ளது. இதை மதிப்பீடு செய்யும் வனத்துறை மாவட்ட அதிகாரி மிகவும் குறைந்த, தவறான மதிப்பீடு தொகையை நிர்ணயம் செய்கிறார். இது பற்றி நான் நேரடியாகவே அவரிடம் பேசினேன் . இதுதான் எங்களுடைய வழிமுறை என்று தெரிவித்தார் . அந்த முறை தவறானதாக உள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் இன்று ஒரு டன் வேலிக்காத்தான் மரத்தின் விலை ரூபாய் […]

Continue Reading