கணக்கம்பட்டி சற்குரு ஸ்ரீ பழனிசாமி  ஐயாவின் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்ற பத்தாம் ஆண்டு குருபூஜை .

எத்தனையோ சித்தர்களுக்கு ஆண்டுதோறும் அவர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் குருபூஜை நடைபெறும் .ஆனால், கணக்கன்பட்டி ஐயா ஸ்ரீ பழனிசாமி பெருமானின் குருபூஜை போல் நடந்திருக்குமா? என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு கணக்கன்பட்டியில் பழனிசாமி அய்யாவின் குருபூஜை நடைபெற்றது . எங்க பார்த்தாலும் வண்ண விளக்குகள், அய்யாவின் ஜீவ சமாதியை சுற்றி  அலங்கரித்து இருந்தது .மக்களுக்கு மூன்று வேளை உணவும், தரமான முறையில் ருசித்து சாப்பிடும் அளவில் அன்னதானம் இருந்தது. ஐயா எப்படி விருப்பப்படுவாரோ, அந்த அளவிற்கு சிறப்பான […]

Continue Reading

சென்னை மற்றும் 6 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் தமிழ் நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துமா ?

சென்னையில் பெய்த கனமழையால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கும்,வேதனைக்கும், உள்ளானார்கள் என்பதை மறுக்க முடியாது .ஒரு பக்கம் வாழ்வாதாரம் இழப்பு, மற்றொரு பக்கம் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து உபயோகப்படுத்தக்கூடிய எல்லா பொருட்களையும் நாசப்படுத்தி விட்டது .இது தவிர, அவர்கள் உடுத்த உடை, உணவுக்கு பிறரை எதிர்பார்த்து வாழும் நிலைமைக்கு தள்ளிவிட்டது.இதில் ஒரு பக்கம் ஆட்சியாளர்களை வசைப்பாடி வருகிறார்கள். மற்றொரு பக்கம் ஆட்சியாளர்கள் சரியான நிர்வாகத்தை ஏற்படுத்தாமல் இருந்ததால், இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதற்கு ஒரு தீர்வு […]

Continue Reading

ஆளும் கட்சியான திமுகவின் ஆக்கிரமிப்பை தட்டி கேட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒருவரின் வீடியோ – பொதுமக்கள் வரவேற்பு .

நாட்டில் அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பு, அடாவடித்தனம், ரௌடிசம், இதையெல்லாம் மக்கள் தட்டி கேட்காமல் இருப்பதால் தான்,  இவர்களால் பொதுமக்களுக்கு இடையூறுகளும், தொந்தரவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலை ஏன்? ஒரு அரசியல் கட்சி என்பது மக்களுக்கு சேவை செய்ய வந்த கட்சி. அதுவே பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து, அந்த இடத்தில் கட்சி கொடி நடுவது, அந்த இடத்தில் அலுவலகம் கட்டிக் கொள்வது, இது எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வந்த கட்சிகள் […]

Continue Reading

நிருபர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட நிருபராக நியமிக்கப்பட்ட சரவணன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக எந்த செய்தியும் கொடுக்காமல், தொடர்பிலும் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.  அதனால், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் அப் பொறுப்பில் இருந்து  நீக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் பத்திரிகையின் அடையாள அட்டை காண்பித்து சமூக விரோத செயல்களிலோ அல்லது அதிகாரிகளை மிரட்டுவதோ போன்ற காரியங்களில் ஈடுபட்டால் நிர்வாகம் அதற்கு பொறுப்பு அல்ல.

Continue Reading

அண்ணாமலையின் நடைபயணம் பிஜேபிக்கு தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா?

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என் மக்கள், என் மண் என்ற தலைப்பில் அவருடைய நடை பயணத்தை உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் தமிழ்நாட்டில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு, பிஜேபியின் அரசியல் வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமா? என்பது அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி? மேலும், அண்ணாமலை நடை பயணம் பற்றி எதிர் கட்சிகள் திமுக, விடுதலை சிறுத்தைகள், சீமான் மற்றும் சமூக ஊடகங்கள் பல கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் .இதனால் பிஜேபிக்கு தான் லாபம். […]

Continue Reading

இன்று பொதுமக்களுக்கு சரியான ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிடும் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை விரல் விட்டு தான் என்ன வேண்டும்.

மக்கள் அதிகாரம் ஆன்லைன் மீடியாவாக வெளி வருகிறது. இது மக்களுக்கான இணையதளம். மக்கள் அதிகாரம் makkaladhikarammedia. Com  &  makkaladhikaram. Page என்ற இணையதளங்களில் செய்திகள் தினசரி வெளியிட்டு வருகின்றன. இது மக்களுக்கு தேவையான முக்கிய செய்திகளை மட்டுமே, இந்த இணையதளங்களில் வெளிவரும்.  இதன்மூலம், தொழிலதிபர்கள், வியாபாரிகள் ,தங்கள் விளம்பரங்களை கொடுப்பதால் சமூக முன்னேற்றத்திற்கும், சமூக நன்மைக்கும், உங்களின் பங்களிப்பும் இதில் உறுதி செய்கிறது. அப்படி உறுதி செய்த நிறுவனங்களில் மதுரை எவரெஸ்ட் மார்க்கெட்டிங் நிறுவனம் Everst […]

Continue Reading