சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு யார் முக்கிய காரணம் ? இது ஆட்சியாளர்களா?அரசியல் கட்சியினரா? மக்களா?அல்லது இயற்கை என்ற இறைவன் கொடுத்த தண்டனையா?

சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்கு யார் முக்கிய காரணம்?  என்பது இதுவரை விடை தெரியாமல் இருந்ததை மீடியாக்களில் வந்த செய்திகள் மூலம் மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இது பற்றிய ஒரு செய்தி ஆய்வு கட்டுரை என்னவென்றால், இங்கே பொதுமக்களும் ,அரசியல் கட்சியினரும் ,ஆட்சியாளர்களும் செய்த தவறுக்கு இறைவன் கொடுத்த தண்டனை .அதாவது இயற்கை என்ற ஒரு மழை வெள்ளம் கொடுத்திருக்கிறது . இது ஒரு புறம்  சட்டத்தை மதிக்காமல் ஏமாற்றுவது, ஏமாற்றி பட்டா வாங்கிய […]

Continue Reading

சென்னை மற்றும் 6 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் தமிழ் நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துமா ?

சென்னையில் பெய்த கனமழையால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கும்,வேதனைக்கும், உள்ளானார்கள் என்பதை மறுக்க முடியாது .ஒரு பக்கம் வாழ்வாதாரம் இழப்பு, மற்றொரு பக்கம் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து உபயோகப்படுத்தக்கூடிய எல்லா பொருட்களையும் நாசப்படுத்தி விட்டது .இது தவிர, அவர்கள் உடுத்த உடை, உணவுக்கு பிறரை எதிர்பார்த்து வாழும் நிலைமைக்கு தள்ளிவிட்டது.இதில் ஒரு பக்கம் ஆட்சியாளர்களை வசைப்பாடி வருகிறார்கள். மற்றொரு பக்கம் ஆட்சியாளர்கள் சரியான நிர்வாகத்தை ஏற்படுத்தாமல் இருந்ததால், இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதற்கு ஒரு தீர்வு […]

Continue Reading

கள்ளத்தனமான மது விற்பனையில், ஏழு மலைவாழ் கிராமங்கள் சீரழியும் நிலைமை ஏன் ?

மது போதைக்கு அடிமையான மக்கள், தமிழ்நாட்டில் வேலை செய்யும்  வலிமையும், திறமையும் அற்றவர்களாக இருப்பதால், வடமாநிலங்களில் இருந்து வேலைக்கு பணியமத்தப்படுகிறார்கள். இதனால், இங்குள்ள தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. இதற்கு காரணம் மது போதைக்கு அடிமையான மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள திமுக கட்சியினர் கள்ள சந்தையை திறந்து வைத்துள்ளார்கள். அதில் ஒரு பாட்டில் விலை 130 என்றால், அவர்கள் விற்பனை செய்வது 210 அல்லது 30 இது போன்று விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்கள். […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம பொதுமக்கள் .

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் நிலத்திற்கு மேல் கையகப்படுத்தும் திட்டத்திற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுடைய எதிர்ப்பை விமான நிலையம் அமைக்க தெரிவித்து வருகின்றனர். விமான நிலையத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் 13 கிராமங்கள் தொடர்ந்து 500 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைப்பற்றி மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் குறிக்கோளாக உள்ளது. […]

Continue Reading

தேனி மாவட்டத்தில் தொடரும் கனிம வள கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், பார்வர்ட் பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி மாவட்ட ஆட்சியருக்கு புகார்  அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிப்பட்டி தாலுக்கா மரி குண்டு  ஊராட்சியில்  மலை மண் மற்றும் கிராவல்  எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதி அளவைவிட மொத்தமாக அப்பகுதியே காலி செய்துள்ளனர். இது எவ்வளவு பெரிய விதிமீறல் என்பது மாவட்ட ஆட்சியருக்கும் ,கனிம வளத்துறை அதிகாரிக்கும் தெரியாததா?  மேலும், இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை கண்டு கொள்ளாமல் ,அதை குப்பையில் தூக்கி போடுகிறார்கள். பொதுமக்கள் எதற்காக புகார் அளிக்கிறார்கள்? என்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியாததா? மேலும் இந்த கிராவல் மண் […]

Continue Reading

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் .

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .இந்த பதவிக்காக சசிகலா பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது. தற்போது இப் பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு, சசிகலாவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும் ? அவர் மீண்டும் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி இடம் கொடுக்க மாட்டார். அடுத்தது, ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிற்கு எதிராக என்ன பிரச்சாரங்களை முன்வைக்க போறார்?  இதில் […]

Continue Reading

அமலாக்கத் துறையின் அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரல் கைது செய்யப்பட்ட விவகாரம் சிபிஐ இதில் உள்ளே வர வாய்ப்புள்ளதா?

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து  வரும் டாக்டர் சுரேஷ் பாபு அமலாகத்துறையின் மதுரை அதிகாரி அங்கித் திவாரியை, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் லஞ்சம் கேட்டதாக புகார் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்ப பிரச்சனை இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது .  மேலும் இப்ப பிரச்சனையில்,தற்போது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ,சிபிஐ எல்லாம் இவரை தோண்ட ஆரம்பித்து விட்டதாக தெரிய வருகிறது. அதாவது, டாக்டர் சுரேஷ் […]

Continue Reading

பெரியார் அணைகளில் உள்ள தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை மன வேதனைக்கு உள்ளாக்கம் அரசியல் நோக்கம் என்ன? – தேனி மாவட்ட விவசாய சங்கங்கள்.

பெரியாறு அணையின் கொள்ளளவு 142 கன அடி  to 152 கன அடி கூட நீர்தேக்கலாம் என்கிறார்கள் தேனி மாவட்ட விவசாயிகள் . மேலும், இந்த நீர் தேக்குவதில் பெரியார் அணையில் என்ன பிரச்சனை இருக்கிறது?  மேலும், இதை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கொடுக்காமல் ,பிற மாவட்ட விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் செல்வதில் உள்ள அரசியல் என்ன?  இது தவிர, இந்த தண்ணீர் திறந்து விடும் போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் […]

Continue Reading

மிஜாம் புயல் மழையால் சென்னை தத்தளிக்கிறது. அதற்கு காரணம் என்ன ?

டிசம்பர் 05, 2023 • Makkal Adhikaram மிஜாம் புயல், காற்று, மழை காரணமாக சென்னையில் பெய்த மழை எதிர்பார்காத ஒன்று. இதற்கு அரசாங்க தரப்பில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது ,பொதுமக்களின் குற்றச்சாட்டு .ஆனால் எதிர்கட்சிகள் 4000 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது எங்கே என்ற கேள்வியை கேட்கிறார்கள் ?இதற்கு சென்னை மேயர் என்ன சொல்லப் போகிறார்?   மேலும்,தாழ்வான சென்னையில் பகுதிகள் வெள்ளக்காடாக மிதக்கிறது. கார்,வண்டி வாகனங்கள், வெள்ளத்தில் மிதந்து செல்வது உண்மையிலே, இந்த மக்கள் எவ்வளவு வேதனையில் துடித்து இருப்பார்கள். ஒரு பக்கம் இருளில் மூழ்கி வீடுகளில் இடுப்பளவு தண்ணீர், எங்கு செல்வது என்று தெரியாமல் மக்கள் வேதனை. இதற்கு முக்கிய காரணம், மழை நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது . அதிமுகவும், திமுகவும் வாக்கு வங்கி அரசியலை மட்டும் தான் பார்க்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன? மேலும் ,வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? ஐயாயிரம், பத்தாயிரத்திற்கு தங்களுடைய வாக்குகளை விற்றுவிட்டு, அவர்களுடைய பொய்யான நடிப்பை பார்த்துவிட்டு, இயற்கை கொடுத்த தண்டனை இந்த மக்களுக்கு சரியான பாடம் .சட்டத்தை ஏமாற்றுவது ,பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது ,அனைத்திற்கும் மேலான இறைவன் என்ற ஒரு இயற்கை எவ்வளவு பெரியவன் ? என்பது நிரூபித்து காட்டி இருக்கிறது.  இதிலும், இவர்கள் திருந்தவில்லை என்றால், செத்தாலும் திருந்த மாட்டார்கள்.மேலும் ,முன்னோர்கள் ஏரி, குளம், குட்டை எதற்காக பராமரித்து வாழ்ந்தார்கள்? என்பது இப்போது இந்த சென்னை வாசிகளுக்கு புரிந்திருக்குமா? ஏரிகள் ஆக்கிரமிப்பு ,குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பு, ஆறுகளில் மணல் கொள்ளை, இவை அனைத்திற்கும் இயற்கை விடை கொடுத்த தண்டனை என்பது இப்பதாவது புரிந்து கொள்வார்களா ?

Continue Reading

மத்திய மாநில அரசின் செய்தித் துறை காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிகை விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

டிசம்பர் 04, 2023 • Makkal Adhikaram மனித வாழ்க்கை மாற்றங்களின் அடிப்படை தன்மை கொண்டது. அதனால் மாற்றத்திற்கு ஏற்றவாறு சட்டங்கள், விதிமுறைகள், அரசு கொண்டு வருவது அவசியம் .சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எத்தனை பத்திரிகைகள் வெளிவந்தன? தொலைக்காட்சிகள் இருந்தன ?தற்போது எத்தனை பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் இருக்கிறது? என்பதுதான் இதற்கு முக்கிய சான்று .அது மட்டுமல்ல, அக்காலத்தில் பத்திரிக்கை படிப்பது, வாங்குவது மிகவும் முக்கியமானது என்று கருதப்பட்டது. தற்போது பத்திரிக்கை வாங்குவது, அலட்சியமாகிவிட்டது. காரணம் எல்லாமே இணையதளம், […]

Continue Reading