நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். அவருடைய போராட்டம் நியாயமானது . ஒருவேளை திமுக ஆட்சியில் ஞாயம் கிடைக்கவில்லை என்று அவர் தற்கொலையை செய்து கொண்டார் என்று அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், காவல்துறை சார்பில் அவை மறுக்கப்படுகிறது. காவல்துறை சட்டத்தை மதிக்காமல், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சியாளர்களின் ஏவலாக காவல் துறையாகி விட்டதா?. அதனால், தங்களுடைய கடமை என்ன? மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்களா? அல்லது ஆட்சியாளர்களின் வீட்டிலிருந்து சம்பளம் வாங்குகிறார்களா? என்பது கூட தெரியாமல் இருந்து வருகிறார்கள். மேலும் திமுக ஆட்சியில் !
நாட்டில் எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை. எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அதானி ,அம்பானிக்காக, ஸ்டாலின் குடும்பம் கோடீஸ்வரர்களாக வலம் வர இந்த ஏர்போர்ட் அவர்களுக்கு தேவை . இந்த ஏர்போர்ட்டால் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் விவசாய நிலத்தை வைத்து பல தலை முறைகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஏர்போர்ட் கொண்டு வந்து அவர்களை ஏறி மிதித்து கொண்டிருக்கிறார்கள்.சுமார் இதனால் 15 கிராமங்களுக்கு மேல் பாதிக்கப்படுகிறார்கள்.
இது பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிகையில் பல செய்திகளை வெளியிட்டு இருக்கிறோம். கண்டிப்பாக இது மத்திய, மாநில அரசுக்கு இந்த பிரச்சனை மிகப்பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் .ஒரு விவசாயி இந்த மக்களுக்காக உழைப்பவன். இந்த மண்ணை நம்பி தான் விவசாயி வாழ்ந்து கொண்டிருக்கிறான் .அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி, நீங்கள் ஏர்போர்ட் கட்டினாலும், இது போன்ற பல உயிர்கள் பலியானால், அங்கே ஏர்போர்ட் ஓடாது. ஆக்சிடென்ட் தான் ஆகும் .
காரணம் இந்த ஆத்மாக்கள் அவ்வளவு எளிதில் சாந்தி அடையாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று தெரியாது. அந்த மக்களினுடைய மனநிலை என்ன? என்று புரிந்து ஆட்சி, அதிகாரத்தில் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக அவர்களுடைய மனநிலை புரிந்து செயல்பட வேண்டும். நீங்கள் பணம் கொடுத்து, அவர்களுடைய சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாது .அவர்கள் என்னிடம் கேட்ட ஒரே ஒரு கேள்வி? நாங்கள் இவ்வளவு காலம் இந்த மண்ணில்! இந்த ஊரில் வாழ்ந்து விட்டு, இப்போது எங்களுடைய குடும்பம்?பிள்ளைகள் எங்கு போய் இவ்வளவு சந்தோஷமாக நான் வாழ முடியும்? இந்த ஒரே கேள்விதான் .
அதானிக்கு பல லட்சம் கோடி இருக்கலாம். ஸ்டாலின் குடும்பத்திற்கு பல லட்சம் கோடி இருக்கலாம் .ஆனால், இந்த மக்களின் வயிற்றெரிச்சல் இவர்களை சும்மா விடாது. உன்னுடைய பதவி, அதிகாரம் எல்லாம் ஒரு நொடியில் இறைவன் இருக்கும் இடமெல்லாம் ஆக்கிவிடுவார் .தயவு செய்து இந்த பரந்தூர் விமான நிலையத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
இதைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த கிராம மக்களுக்காக போராட்ட களத்தில் இறங்கி அவர்களோடு போராட முன் வர வேண்டும். இது எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. இங்கே மக்களுக்காக? மக்கள் நலனுக்காக? செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எதுவாக இருந்தாலும், இந்த மக்களுக்காக போராட்டக் களத்தில் இறங்கி அரசு எதிராக குரல் கொடுக்க வேண்டும் .அந்த விஷயத்தில் தமிழக வெற்றிக்கழகம் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது .அதனால், இந்த மக்களுக்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போராட்ட களத்தில் இறங்கி ,இங்கு விமான நிலையம் வருவதை தடுக்க வேண்டும் .
இது தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களின் வாழ்வாதார முக்கிய பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக வெற்றி கழகத்தை கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளனர் .