ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram
நாட்டில் உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் இல்லாமல், இருப்பதற்கு முக்கிய காரணமே ஊழல் . இந்த ஊழலை அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தமிழ்நாட்டில் ஊழல் கருப்பு பணமாக மாறி, வெளிநாடுகளில் ,வெளி மாநிலங்களில் ,முதலீடு செய்யும் அளவிற்கு ஊழல் வளர்ந்து விட்டது .
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் சொத்து மதிப்பு 100 கோடி.அதை பறிமுதல் செய்து அவருக்கும், அவரது மனைவிக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருச்சி மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார். இதை திருச்சி மாவட்ட ஊழல் கண்காணிப்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு விசாரணை 20 ஆண்டுகளை தாண்டி நடந்து வந்துள்ளது . அதற்கு இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் காலம் கடந்த விசாரணையும், தீர்ப்பாகவே இது உள்ளது.
அதிகபட்சம் ஓராண்டுக்குள் இதை முடிக்க வேண்டும். இதில் என்ன விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது? இவருடைய சம்பளம் என்ன? வருமானம் என்ன? பூர்வீக சொத்து என்ன? இதன் அடிப்படையில் தான், இவர் கணக்கு காட்ட வேண்டும் ? எப்படி இவருக்கு திடீரென்று 100 கோடி சொத்து வரும் ?தற்போது ,ஒரு அரசு அதிகாரியாக வேலை செய்த ஜானகிராமன் என்பவரின் சொத்து சுமார் 100 கோடி . (கொடைக்கானல் மற்றும் வில்பட்டியில் வேலை செய்தவர்.) என்றால், தமிழக முழுதும் உள்ள சார்பதிவாளர்களின் சொத்து மதிப்பு எத்தனை கோடி ?
அதேபோல், வருவாய் துறையில் உள்ள விஏஓ முதல் வட்டாட்சியர் மற்றும் ஆர்டிஓ வரை எத்தனை கோடி ?அவர்களுடைய சொத்து மதிப்பு ? அதேபோல், BDO க்களின் தமிழக முழுதும் அவர்களின் சொத்து மதிப்பு என்ன ? இதையெல்லாம் ஊழல் கண்காணிப்பு துறை கண்காணிக்க தவறிவிட்டது . அதனால் ,இதை மத்திய அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் முக்கிய கோரிக்கை.
தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி என்று திமுக அரசும், திருமாவளவனும், பாட்டு பாடி கொண்டிருப்பார்கள். இந்தப் பாட்டு பற்றி அரசியல் தெரியாதவர்களுக்கு புரியாது. தெரிந்தவர்களுக்கு இது புரியும் .அது என்ன என்றால், இதுதான் நாங்கள் ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்துக் கொள்வோம். அதேபோல், பொது துறைகளை தனியார் மயமாக்கினால், நாங்கள் கொள்ளை அடிக்க முடியாது. அதில் ஊழல் செய்து சொத்துக்களை சேர்க்க முடியாது. இதற்கு தான் கத்திக் கொண்டிருக்கிறார்கள் .
இதை மோடி தெரிந்துதான், சில துறைகளை தனியார் மையமாக்கினார். இது தவிர, இந்த பொதுத்துறை ஊழல் செய்து திவால் ஆக்கிவிட்டு, மீண்டும் மக்களின் வரிப்பணம் தான் அதற்கு கொடுத்து, சரி செய்வது என்பது ஒவ்வொரு முறையும் பல்லாயிரம் கோடிகள் வீணடிக்கப்படுகிறது. அதே போல், கூட்டுறவுத்துறை மிகவும் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு துறை. நாட்டின் மிகப் பெரிய ஊழல் துறை, கூட்டுறவு துறை! இந்த கூட்டுறவுத் துறையில், கூட்டுறவு சங்கங்கள் முதல் ரேஷன் கடைகள் வரை, இன்று வரை அது ஊழல் மயமாகத்தான் இருக்கிறது.
ரேஷன் கடைகளில் வேலை செய்யக்கூடிய சேல்ஸ்மேன்களின் சொத்து மதிப்பு என்ன? என்று கணக்கெடுத்து பாருங்கள் .வீடு வாடகை ,லாரி ,கார் ,பல சொத்து என சொகுசு வாழ்க்கையில் போய்விட்டார்கள். இவர்களே இப்படி என்றால், கூட்டுறவுத் துறையில் அதிகாரிகளாக இருக்கக்கூடிய அவர்களின் சொத்து மதிப்பு என்ன ? இப்போது தெரிகிறதா? அது மட்டுமல்ல, நாட்டில் பிரிவினைவாத அரசியலால் , மாநில அரசு வேறு, மத்திய அரசு வேறு என்ற வேறுபாட்டை பிரித்துக் கொண்டு,ஊழல் செய்து கொண்டிருப்பது மக்களுக்கான பயன்கள் எதுவும் சென்றடையவில்லை.
மத்திய அரசு கொடுக்கின்ற 100 நாள் வேலை திட்டத்தில் கூட எத்தனை BDO க்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கமிஷன் பெறுகிறார்கள் ? ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவர்கள் முதல் சேர்மன்கள் வரை இவர்களுடைய பதவிக்கு வருமுன் சொத்து மதிப்பு என்ன? வந்த பின் சொத்து மதிப்பு என்ன ?பினாமி பெயரில் வாங்கிய சொத்துக்கள் ஏதாவது உண்டா? அரசியலில் உழைக்காமல் பணம் பண்ணும் வேலைகளை சட்டத்தின் மூலம் கண்காணிக்க வேண்டும். அதனால், இவை அனைத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் .அல்லது மத்திய ஊழல் கண்காணிப்பு துறை விசாரிக்க வேண்டும். அப்போதுதான் தகுதியற்ற கூட்டங்கள் பதவிக்கு வருவது தடுக்க முடியும் .பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம் .பி க்கள் பதவிக்கு வருமுன் சொத்து மதிப்பு என்ன ? வனத்துறை அதிகாரிகள் சொத்து மதிப்பு என்ன ?மேலும்,
செய்தித்துறை அதிகாரிகளின் சொத்து மதிப்பு என்ன ?இந்த ஊழலை மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு துறை வெளிக்கொணர்ந்தாலே, எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் பஸ் பாஸ் போன்றவற்றை ஏன் கொடுக்க முடியாது? கார்ப்பரேட் நிறுவனங்களின் 30 சதவீதம் கமிஷனுக்காக ,சாமானிய சமூகநலன் பத்திரிகைகளை வளர விடாமல் ,இந்த கமிஷன் தடுத்து வருகிறதா ? இதையெல்லாம் மத்திய உளவுத்துறையும், ஊழல் கண்காணிப்பு துறையும், இணைந்து ஊழலை வெளிக்கொணர்ந்தாலே நாட்டில் உழைக்கும் மக்களின் முன்னேற்றம் உயரும் என்பதில் மாற்று கருத்து இல்லை .
மேலும், ஒவ்வொரு அரசியல் திட்டங்களுக்கும், அதை செயல்படுத்த அரசியல் கட்சியினர் மற்றும் அவர்களது உறவினர்கள், அவர்களுக்கு வேண்டியவர்கள், எந்த ஒரு அரசு காண்ட்ராக்ட்களும் கொடுக்கக் கூடாது. அவை அனைத்தும் வெளிப்படையாக ஓபன் டெண்டர்கள் ஆகவே இருக்க வேண்டும். அது தகுதியின் அடிப்படையில் ,தரத்தின் அடிப்படையில் ,காண்ட்ராக்ட் ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டும்.இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. வேலையின் தரத்தில் குறைபாடுகள் இருந்தால், அரசியல் கட்சியினர் கேட்கலாம்? ஆனால், கமிஷன் கேட்கக் கூடாது. இதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும். இவையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால், மத்திய அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் .
மேலும், மாநில அரசின் ஊழல் கண்காணிப்பு துறை, அந்தந்த மாநில நிர்வாகத்திற்கு சாதகமாக இருப்பதால், அவர்களால் எந்த ஊழலையும் ஒழிக்க முடியாது .அதனால், எங்களை போன்ற பத்திரிகைகள் எழுதி, மக்களுக்கு தெரிவிப்பதும், அது வீண் . எனவே. நாட்டில் ஊழல்களை கண்காணிக்க மத்திய அரசு ஒரு வலுவான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் நாட்டில் ஊழல் ஒழிக்க முடியும் .