பிப்ரவரி 05, 2025 • Makkal Adhikaram
அரசியல் கட்சிகள் நாட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறினால், மக்களுக்கு அரசியல் ஏமாற்றமே! அதற்கு துணை போகும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு மத்திய மாநில அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது சமூகத்தை அழிக்கும் மறைமுக கோடரிகள்.
நாட்டில் இன்றைய அரசியல் மற்றும் அரசியல் கட்சிகளால் தொடர்ந்து சமூகத்திற்கு எதிரான குற்றங்களும், சமூக போராட்டங்களும், அதனால் மக்களுக்கு பாதிப்பும், ஏமாற்றமும் ஏற்படுவது யாரால் ?அதற்கு துணை போகும் பத்திரிக்கை தொலைக்காட்சிகளா?
ஒவ்வொரு பத்திரிக்கை, தொலைக்காட்சியும் சமூக நோக்கத்திற்காக இருக்கிறதா? அல்லது வியாபார நோக்கத்திற்காக இருக்கிறதா? அல்லது அரசியல் கட்சிகளுக்காக அதன் நோக்கம் இருக்கிறதா? சமூக நோக்கத்திற்காக எத்தனை பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இருக்கிறது? என்பதை மத்திய, மாநில அரசின் செய்தித்துறை ஆய்வு செய்ய வேண்டும். எதன் அடிப்படையில் சலுகை, விளம்பரங்களை கொடுத்து மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிப்பதை தவிர்ப்பார்களா? இது சமூக ஆர்வலர்களின் கேள்வி? மேலும்,
அரசு செய்திகள் போடுகிறார்கள். அதற்காக சலுகை ,விளம்பரங்கள் கொடுக்கிறோம் என்றால், அதை ஏற்க முடியாது. நாங்களும் போடுகிறோம், எங்களுக்கும் கொடுங்கள். அது ஒரு பெரிய விஷயமே அல்ல. அதைப் பார்த்து மக்கள் எவ்வளவு பேர் என்ன தெரிந்து கொண்டார்கள்? என்பதற்கு செய்தித் துறை அதிகாரிகளால் ஃபீட்பேக் ( feed back ) கொடுக்க முடியுமா?மேலும்,
நாட்டில் லட்சக்கணக்கான பத்திரிகைகள் இருக்கிறது. ஆனால் ,இவர்கள் என்ன செய்திகள் மக்களுக்கு தெரிவிக்கிறார்கள்? தேவையற்ற செய்திகள்,சினிமா, விளையாட்டு, பல அரசியல் கட்சி செய்திகள், இப்படி வியாபார நோக்கத்தில் செய்திகளை போட்டு, பெரிய பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. என்கிறார்கள் துறையைப் பற்றி தெரிந்த விவரமானவர்கள் .தவிர ,அதை சர்குலேஷன் என்று சொல்லி, பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் செய்தி துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மையை புரிய வைக்கிறேன். பொதுமக்களுக்கும் இந்த உண்மையை தெரிவிக்கிறேன்.
மேலும், இந்த செய்திகளால், மக்களுக்கு என்ன பயன்? லட்சக்கணக்கான செய்தியாளர்கள் இருக்கிறார்கள். இதில் அரசு அடையாள அட்டை தொங்க விட்டுக்கொண்டு, பத்திரிகை அடையாள அட்டையை தொங்க விட்டுக் கொண்டு, பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்வதிலும், செய்தியாளன் என்று சொல்லிக் கொள்வதிலும் ,எந்த பிரயோஜனமும் இல்லை. இவர்களுக்கு பஸ் பாஸ், அரசு விளம்பரம்,கொடுத்து மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் ,வீணடித்துக் கொண்டிருக்கும் செய்தித்துறை அதிகாரிகள் நாட்டில் ஊழலுக்கு மறைமுகமாக துணை போகும் பத்திரிகைகளுக்கு, தொலைக்காட்சிகளுக்கு இவர்கள் பக்க பலமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.இதுதான் சர்குலேஷன் சட்டமா?மேலும்,
எங்கே தவறு நடக்கிறது? அந்த தவறுக்கு யார் காரணம்? என்று இன்றுவரை எந்த ஒரு பத்திரிக்கையும், இந்த உண்மைகளை வெளியிடவில்லை. அது பெரிய பத்திரிக்கையாக இருக்கட்டும், சிறிய பத்திரிக்கையாக இருக்கட்டும். ஒருவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவது பத்திரிகையின் வேலைதான். வெளிப்படுத்துவது பத்திரிகையின் கடமைதான். ஆனால்,தவறுகளுக்கும், ஊழலுக்கும், துணை போய் கொண்டு, அவர்களையும் நல்லவர்களாக, வல்லவர்களாக எழுதிக் கொண்டு, இதுதான் அரசியல்! இதுதான் கட்சி என்று சொன்னால், இதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.
ஏனென்றால், மக்களை முட்டாள் ஆக்குவதற்கு பத்திரிகை, தொலைக்காட்சிகள் தேவையில்லை. மக்களுக்கு புரியாத உண்மைகளை, தெரியாத விஷயங்களை வெளிப்படுவதற்கு தான் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தேவை. மேலும், நாட்டில் பெரியாரை வைத்து, அம்பேத்கரை வைத்து, அரசியல் மோசடி செய்ய இதுதான் அரசியலா? அல்லது பத்திரிக்கை வியாபாரமா?அல்லது இதுதான் நடுநிலை நாளேடு பத்திரிகை வியாபாரமா?இது தவிர ,நடிகர், நடிகைகளின் படத்தைப் போட்டு, அந்தப் படத்தின் விமர்சனமும், இதையும் சர்குலேஷன் என்று மத்திய மாநில அரசின் செய்தித் துறை அதிகாரிகள் கணக்கில் கொண்டு வருவார்களா?இதற்கு மத்திய மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகளால் பதில் சொல்ல முடியுமா? மேலும்,
அரசியல்!இன்று கேவலமான அரசியலாக நாட்டில் இருப்பதற்கு யார் காரணம்? அந்த கேவலமான அரசியலை தாங்கிப் பிடிப்பதற்கு கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள், பெரிய பத்திரிகை என்று மக்களை ஏமாற்றுவதற்காகவா?அதாவது,
அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அவர்களுடைய பேச்சை விளம்பரப்படுத்துவது சமூக நோக்கமா? அல்லது சமூக நன்மைக்காக பாடுபடுபவர்கள் போல் பேசிவிட்டு போனால்,அதை விளம்பரப்படுத்துவது சமூக நோக்கமா? அது பத்திரிகை வியாபார நோக்கமா? அவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் மக்களை ஏமாற்றவா? மேலும், ஒரு அரசியல் கட்சி தலைவரோ அல்லது நிர்வாகிகளோ மற்றொரு அரசியல் கட்சியை தரக்குறைவாக விமர்சனம் செய்வது அவசியமா? அல்லது அது யாருக்கு அவசியம்? மக்களுக்கா? அல்லது அரசியல் கட்சிகளுக்கா? இவர்கள் பேசி விட்டு போவது தான் அரசியலா? அதுதான் சமூக நோக்கமா? இந்த சமூக நோக்கத்திற்கு தான் மத்திய, மாநில அரசின் செய்தித் துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்களை கொடுக்கிறார்களா? இது மக்களை முட்டாளாக்கும் இந்தப் பத்திரிகைகளின் வேலை .
மேலும், நாட்டில் பத்திரிகைகளைப் போன்று அரசியல் கட்சிகளுக்கும் பஞ்சமில்லை . இந்த அரசியல் கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அதற்கு தகுதியானவர்களா? இதைப் பற்றி எத்தனை பத்திரிகைகள் எழுதி இருக்கிறது? எத்தனை தொலைக்காட்சிகள் மக்களிடம் தெரிவித்திருக்கிறது? மேலும், ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைமையும், அவர்களுடைய கட்சி நிர்வாகிகளை பற்றி ஆய்வு செய்து அவர்களுக்கு பொறுப்பு வழங்கி இருக்கிறார்களா? ஆனால்,
ஒரு சாதாரண அரசு கடைநிலை ஊழியராக பணிக்கு சேர வேண்டும் என்றாலும், ஒரு தனியார் கம்பெனி நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்றாலும், அவன் என்ன படித்திருக்கிறான்? எத்தனை ஆண்டுகள் அனுபவம்? அதைப் பற்றி நூறு கேள்வி கேட்கிறார்கள். ஆனால் ,ஒரு அரசியல் கட்சி நிர்வாகி கூட அவன் என்ன சமூக சேவை செய்து இருக்கிறான்? அவனுடைய ஒழுக்கம்,நேர்மை என்ன?அவனுடைய படிப்பு என்ன ?அவனுடைய தகுதி என்ன? அவனுடைய திறமை என்ன? இப்படி எந்த கேள்வியாவது கேட்டு, எந்த அரசியல் கட்சியாவது நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை கொடுத்திருக்கிறார்களா?அல்லது மக்களாவது இதை சிந்தித்து அவர்களுக்கு வாக்களிக்கிறார்களா?
அப்படி சிந்தித்து கொடுத்திருந்தால் ,வாக்களித்திருந்தால், தமிழ்நாட்டின் அரசியல், இப்படி கேவலமான ஒரு அரசியல் நடக்காது. மக்களுக்கு கட்சிக்கும் அர்த்தம் தெரியாது ,அரசியலுக்கு அர்த்தம் தெரியாது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது, அவர்கள் எந்த சின்னத்தில் குத்த சொல்கிறார்களோ, அந்த சின்னத்தில் பட்டனை அழுத்தி, அதாவது அரசியல் பணத்திற்காக இருப்பது போல், பத்திரிக்கையும் பணத்திற்காக இருவரும் சேர்ந்து, இந்த அரசியல் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் பத்திரிகைகளுக்கு தகுதியின் அடிப்படையில், தரத்தின் அடிப்படையில் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கக்கூட தகுதி இல்லாத செய்தித் துறையாக மத்திய, மாநில அரசின் செய்தித்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இதனால் மக்களுக்கு போலி எது? உண்மை எது? தெரியாமல், அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் ஒரு கட்சியினரை பற்றி விமர்சனம் செய்ய அல்லது செய்து தன்னை நேர்மையானவராக காட்டிக் கொள்ள இந்த தொலைக்காட்சி ஊடகங்களின் மைக்கைகள் தேவைப்படுகிறதா? மக்களுக்கு தேவை கட்சியினரின் விமர்சனங்கள் அல்ல, உங்களுடைய கட்சியினரின் சேவைகள். ஒவ்வொரு கட்சியிலும் சமூக சேவை செய்யக்கூடிய அரசியல் கட்சி நிர்வாகிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அதை அவர்களால் பட்டியல் போட்டு சொல்ல முடியுமா? இந்த தொலைக்காட்சி, பத்திரிகைகள் .
மேலும், மக்களிடம் போலி அரசியலை கொண்டு போய் சேர்க்க பெரிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தேவையில்லை.அதற்கு சர்குலேஷன் சட்டமும் தேவையில்லை. அதுவும் ஒரு ஏமாற்று சட்டம் தான். இந்த சட்டத்தை வைத்து செய்தித் துறை தகுதியான பத்திரிகைகளுக்கு கூட சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல் இருப்பது,பத்திரிக்கை துறைக்கும், சமூக நன்மைக்கும், செய்தித்துறை எதிராக செயல்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மேலும், செய்தித் துறை அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சியினர் போல் செயல்பட்டால் ,அவர்களுடைய சுயநலமும், இவர்களுடைய சுயநலமும், அரசியல் வியாபார நோக்கமாக இருக்குமே தவிர, அது சமூக நன்மைக்கான நோக்கமாக ஒருபோதும் இருக்காது. அதனால், இருவரும் சேர்ந்து மக்களை மறைமுகமாக ஏமாற்றும் ஒரு வித்தையை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்த உண்மை குறிப்பிட்டு சொல்லக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.
இந்த உண்மை கூட தெரியாதவர்கள், பத்திரிக்கை உலகில் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்வார்கள். மேலும், இந்த மைக் பேச்சுகளை மக்களிடம் விளம்பரப் படுத்துவதற்கு பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தேவையா?இதை வைத்து, கட்சிக்குள் இருக்கின்ற ஒன்னா நம்பர் ஃபிராடுகள் எல்லாம் கைவந்த கலையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சர்டிபிகேட் கொடுக்க இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் யார்? மக்கள் தொடர்ந்து ஏமாறக்கூடாது. மக்களின் சுயநலம் அவர்களுக்கு அது சாதகமாகி விடுகிறது. இப்போது கூட எங்கள் நிருபர் பேசும்போது, இதைக் குறிப்பிட்டார்.
அந்த காலத்தில் அரசியல்வாதிகள் எப்படி இருந்தார்கள்? துளிகூட சமூக நோக்கமே இல்லாமல், அரசியல் கட்சிகளில் நிர்வாகிகளாக போட்டோக்களை போட்டு, கட்டவுட்டுகளை வைத்துக்கொண்டு, யாரை ஏமாற்ற இந்த அரசியல்? நீ சம்பாதிப்பதற்கு, நீ ஊர் தாலி அறுப்பதற்கு, அரசியல் கட்சிகளில் உனக்கு பொறுப்பா? இது அரசியல் கட்சியின் தவறா? இல்லை, அந்த கட்சியின் தலைமை நிர்வாகியின் தவறா? எந்த அரசியல் கட்சியாவது என்னுடைய அரசியல் கட்சிக்கு இப்படி தான் நிர்வாகிகள் இருக்க வேண்டும் என்று யாராவது மக்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்களா? மேலும்,
ரவுடி, பிராடு, மொள்ளமாரி, முட்ச்சவிகி இவனையெல்லாம் கட்சியில சேர்த்து விட்டு, அவர்கள் சமூக விரோத கும்பலாக இல்லாமல், சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களா? ஒருவனுக்கு என்ன வேலை தெரியுமோ, அதை தான் அவன் செய்வான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் சண்டைக்கு இழுப்பது, ஊர் தாலி அறுப்பது, பதவி கிடைத்தால் எப்படி ஊர் சொத்தையும், பணத்தையும் கொள்ளை அடிக்கலாம்? இப்படிப்பட்டவர்களால் எப்படி இந்த மக்களுக்கு நல்லது நடக்கும்? இதை இந்த மக்களும் சிந்திக்கவில்லை. அரசியல் கட்சி நடத்தக்கூடிய தலைமையும், தலைவர்களும் சிந்திக்கவில்லை.மேலும்,
இதைப் பற்றி எந்த ஊடகங்களும், மக்களிடம் உண்மையை வெளிப்படுத்தவில்லை. இன்று நாட்டில் கீழ்த்தனமான அரசியலுக்கு முக்கிய காரணம் அரசியல் கட்சியினரும், அதற்கு துணை போகும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தான். இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிப்பது மத்திய மாநில அரசின் செய்தித்துறை, பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டு ,மக்களை ஏமாற்ற இவர்களும் துணை போகிறார்கள் .மேலும்,
மக்கள் இந்த உண்மையை புரிந்து கொண்டு சமூகப் பணியாற்றுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் போலியான அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி வாக்களித்தால் !அரசியல் மக்களுக்கு ஏமாற்றம் தான்.ஊழலைத் தவிர, அரசியலில் அவர்களுக்கு எதுவும் தெரியாது. உங்கள் தலையில் நீங்களே மண் அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம்.எதிர்காலத்தில், வருங்கால தலைமுறைகளுக்கு இது வேதனைக்குரிய அரசியலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.மேலும்,
பல முன்னேறிய நாடுகளில் அரசியல் சமூக நோக்கத்திற்காக, மக்களுக்காக இருக்கிறது. இங்கே இவர்களுடைய சுயநலத்திற்காக அரசியலை மாற்றிக் கொண்டார்கள். இதனால்தான் அரசியல் மக்களுக்கு ஏமாற்றமும், சமூகப் போராட்டமும், வாழ்க்கை போராட்டமும், ஊழல் கலாச்சாரமும், ரவுடிசமும் இருப்பதற்கு முக்கிய காரணம்.
எனவே, மக்கள் இனி சிந்தித்து, இந்த அரசியல் கட்சிகளிடம் ஏமாறாது இருப்பது உங்கள் புத்திசாலித்தனம். மேலும் ,சமூகப் பணியில் ஈடுபடும் எந்த அரசியல் கட்சிக்கும், கட்சியினருக்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.