தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிர்வாக சட்டம்,ஊராட்சிகள் நிர்வாக சட்டம், இந்த சட்டங்களை திருத்தாமல்! தேர்தல் நடத்துவதுமாநில தேர்தல் ஆணையத்தின் வீணான வேலை – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 25, 2024 • Makkal Adhikaram

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி நிர்வாக அதிகாரிகளும், ஊராட்சி பிரதிநிதிகளும் கூட்டுக் கொள்ளை நடத்துவதற்கு இப்படிப்பட்ட ஒரு தேர்தல் தேவையா?   .சட்டத் திருத்தத்தை கொண்டு வராமல் நடத்தும் தேர்தல் வீண். மேலும்,

மாநில தேர்தல் ஆணையம் கடமைக்கு ஐந்து வருடம் முடிந்தால், தேர்தல் நடத்துவது நம்முடைய வேலை என்று கடமைக்கு தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறது. இது பற்றி பெரிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சி என்று விவாதம் நடத்துவது, மக்களிடம் பேசுவது எதற்கு ? வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவது போல, இந்த உள்ளாட்சி நிர்வாக  சட்டங்கள் மத்திய அரசு மாற்றாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது வீண். 

அதற்காக செலவு செய்வது மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீண் அடிப்பதும், மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் போய் சேராமல், இடைத்தரகர்களாக உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கு போட்டுக் கொள்வது, கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் உச்சகட்டம். அது மட்டுமல்ல, இந்த அதிகாரம் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை நடத்துவதற்கு தான் இந்த உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது. அதனால் இதில் சட்ட திருத்தும் மேற்கொள்ளாமல் இந்த உள்ளாட்சி தேர்தல் நடத்துவது ஒரு வீணான வேலை. இது பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் தொடர்ந்து மத்திய அரசுக்கு பல்வேறு செய்திகளை கொடுத்து வருகிறது . 

அதாவது மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள செய்தியின் எதிரொலியால் தான் இன்று ஊராட்சி நிர்வாகத்திற்கு ஆன்லைன் கொண்டுவரப்பட்டது. ஆனால், கொண்டுவரப்பட்ட ஆன்லைனில் வரி மட்டுமே வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் பார்க்கக்கூடிய வரவு, செலவு கணக்கு, இணையதளங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கேட்டால் அதற்கு ஆள் பற்றாக்குறை என்கிறார்கள். பங்கு போட்டு சாப்பிடுவதற்கு பற்றாக்குறை இல்லை. ஆனால், கணக்குகளை இணையதளத்தில் ஏற்றுவதற்கு தான் ஆள் பற்றாக்குறையா ? 

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் போலி கணக்குகளை சரி செய்வது தான் ஆடிட்டர்களின் முக்கிய வேலை .

இதை உடனடியாக இணையதளத்தில் ஒவ்வொரு நாள் வரவு செலவு கணக்கு திட்டங்கள் என்னென்ன? கிராமத்தில் நடக்கக்கூடிய 100 நாள் வேலை திட்டம் இது பற்றிய முழு விவரமும் இணையதளத்தில் வெளியிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் தொடர்கிறது. இது பற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கரூர் அருகே உள்ள ஒரு ஊராட்சியில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இப்படி பல கிராமங்களில் இந்த நிர்வாகத்தின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை.இது தவிர,

 பேருக்கு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது நடத்துவதே வீண். அதற்கு அர்த்தம் தெரியாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட சதவீதம் அந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்காவது அங்கே இருக்க வேண்டும். ஆனால், 10 பேர், நூறு பேர் கூட இல்லாமல், கிராம சபை கூட்டம் நடந்ததாக கணக்கு காட்டுகிறார்கள். இதற்கு அதிகாரிகளும் உடந்தை .

மேலும், இதுபோன்று நடக்கின்ற கிராம பஞ்சாயத்துகள் மீது மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பிறகு ஏன்? கிராம சபை கூட்டம் என்று விளம்பரப்படுத்துகிறீர்கள்? விளம்பரத்திற்கு கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் செய்திகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல், சிறிய பத்திரிகைகள் கூலிக்கு மாரடைக்கும் கூட்டமாக இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் .இது பற்றி எந்த ஒரு பெரிய செய்தி நிறுவனங்கள் கூட, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதில்லை .

 மேலும், கிராமங்களில் உள்ள ஏரிகளில் சவுடு மண் கொள்ளை, கிராவல் மண் கொள்ளை ,மலை மண் கொள்ளை, மணல் கொள்ளை இவை அத்தனையிலும் இவர்கள் ஒரு கணிசமான தொகையை பார்க்கிறார்கள். இது தவிர, ஏரிகளில் உள்ள மரம் மற்றும் கருவேல மரங்கள் ஏலத்திலும் மோசடி வேலை செய்து அதிகாரிகளும் ,பஞ்சாயத்து நிர்வாகிகளும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இதில் அந்த கிராம நலனில் அக்கறை கொண்டவர்கள் கேள்வி கேட்டால், அவர்கள் மீது பொய் வழக்கு, அரசியல் கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டுவது ரவுடிசம் செய்வது ,இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது இந்த உள்ளாட்சி நிர்வாக சட்டங்கள். இந்த ஓட்டை சட்டங்களை வைத்து தான் இவர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 இதற்கு கிராமத்தில் உள்ள சமூக நலன் விரும்பிகள், ஒவ்வொரு பிரச்சனைக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டி உள்ளது, அதனால், ஒவ்வொரு கிராமத்திலும், சமூக நலன் ஆர்வலர்கள் குழு ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் இணையதளத்தில் சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சமூக நலன் ஆர்வலர்கள் குழுவில் முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ், சமூக நலன் பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.இதில் எக்காரணம் கொண்டும் அரசியல் கட்சியில் இருப்பவர்கள் இடம்பெறக்கூடாது.மேலும், 

இவர்கள் அந்த கிராமத்தில் செயல்படுத்திய வேலைகள் எத்தனை சதவீதம்? என்ற கணக்கை பொறியாளர் உடன் கலந்தாய்வு செய்து, உண்மை நிலவரத்தை அதில் எழுதி கையெழுத்திட வேண்டும்.அப்போதுதான் அந்த வேலை செய்தவர் செய்த வேலைக்கு பணம் வாங்க முடியும்  என்ற நிலைமை கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் இப்பிரச்சனைக்கு 90% க்கு மேல் கிராம ஊராட்சிகளின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் .இந்த 10 பேர் ஒப்புதல் கையெழுத்து இல்லாமல் எந்த ஒரு திட்டத்திலும், பணம் எடுக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்க வேண்டும் .

அப்போதுதான் இந்த ஊராட்சி நிர்வாகிகளின் ஊழல் நிர்வாக திறமையை கட்டுப்படுத்த முடியும் .மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்டத்திற்கு நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். திட்ட இயக்குனர்கள், பஞ்சாயத்து உதவி இயக்குனர் இருக்கிறார், வட்டார வளர்ச்சி ஒருவருக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். யார் இருந்தாலும், அவரவர்க்கு உரிய பங்கைதான், அவர்கள் எடுப்பதில் குறிக்கோளாக இருக்கிறார்கள்.

அதனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட உள்ளாட்சி நிர்வாக சட்டம் மிகப்பெரிய ஊழல் சட்டமாக இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டியது மத்திய அரசின் முக்கிய கடமை. இப்போது ஊராட்சிகளில் நிதியை செக்கை கிழித்து எடுக்க முடியாது. இது போதாது இவர்களுக்கு செக் பவர் என்பது யாருக்கும் கொடுக்கக் கூடாது. செக்கில் கையெழுத்து போடுபவர்கள் அதிகாரிகள் மட்டுமே இருக்க வேண்டும் .அந்த அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மட்டுமே இருக்க வேண்டும். அவரை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு நாளும், எத்தனை பஞ்சாயத்துகளுக்கு எவ்வளவு பணம் அனுப்புகிறார்? அதனுடைய முக்கியம் என்ன? அது தேவைதானா? தேவையற்றதா? என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு திட்ட இயக்குனர் மற்றும் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஆன்லைனில் அதை கண்காணிக்க வேண்டும் .

இது தவிர, ஒவ்வொரு நாள் வரவு செலவு கணக்கு திட்டங்கள் குறித்த விவரம் எல்லாவற்றையும் ஆன்லைனில் இதை வெளியிட்ட பிறகு, இந்த பஞ்சாயத்து தேர்தல் நடத்த வேண்டும் .எதற்காக ஆன்லைனில் இந்த நிர்வாகத்தை கொண்டு வந்த பிறகு, அந்த செயலியை முடக்கி வைத்திருப்பதன் நோக்கம் என்ன? இது பஞ்சாயத்து இயக்குனருக்கு தெரியாதா? செயலாளருக்கு தெரியாதா ?தலைமைச் செயலாளருக்கு தெரியாதா? இதெல்லாம் தெரியாமல் என்ன நிர்வாகம் பஞ்சாயத்தில் நடத்துகிறார்கள்? பஞ்சாயத்து நிர்வாகிகளையும், அதிகாரிகளையும் கூட்டுக் கொள்ள நடத்திக் கொண்டு வேடிக்கை பார்ப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்களா?மேலும்,

 இந்த கூட்டுக் கொள்ளை நடத்துவதற்கு தான், பஞ்சாயத்து நிர்வாகத்தில் பணம் கொடுத்து மக்களை ஏலம் போட்டுக் கொண்டிருக்கிறார்களா? சில கிராமங்களில் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்றதாக கூட அறிவித்து விடுகிறார்கள். அது பற்றி தேர்தல் ஆணையம் ரகசியமாக கண்காணிக்க வேண்டும். அதேபோல் ஓட்டு எண்ணக்கூடிய மையத்தில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் பணம் கொடுத்து ஓட்டு எண்ணும் மையத்தில் மோசடி வேலை ரகசியமாக நடத்துகிறார்கள் . இதையெல்லாம் கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஓட்டு எண்ணக்கூடிய மையத்திலும். கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பல இடங்களில் ஆய்வு செய்ய வேண்டும். அதில் தவறுகள் நடந்தால் உடனடியாக ரிக்கவுண்டிங் அல்லது மறு தேர்தல் வைத்து பிரச்சனையை சரி செய்ய வேண்டும் .

கூடுமானவரை மாநில தேர்தல் ஆணையர் வாக்களிக்கும் மையங்களில் இருந்து வாக்கு எண்ணும் மையம் வரைக்கும் ரகசிய கேமராக்கள் வைத்துக் கண்காணிக்கப்பட வேண்டும். தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று சொல்லும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. உள்ளடி வேலை பார்ப்பது, அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது, இவை எல்லாம் தவிர்க்க வேண்டும் .அப்படி இருந்தால் எதற்கு இந்த தேர்தல் நடத்துகிறீர்கள்? ஆளும் கட்சி யாரை சொல்கிறதோ, அவர்களை நியமித்து விடுங்கள். தேர்தலே வேண்டாம், எதற்கு தேர்தல்? 

மேலும், இதை எல்லாம் கண்காணிக்க துணை ராணுவம் தேவை. அவர்களுக்கு ஒவ்வொரு தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் அவர்கள் இருக்க வேண்டும். தவிர, எண்ணும்போது வாக்கு சீட்டு வேட்பாளர்களிடம் காட்டி தான் அதை தனித் ,தனியாக வைக்க வேண்டும் . மேலும், பிரச்சனை வந்து மீண்டும் எண்ணும்போது அந்த கிராமத்தின் வாக்கு சீட்டுகள் அதே எண்ணிக்கை தான் வர வேண்டும் . பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றாலும், அதை உடனடியாக நீதிமன்றம் ஆய்வு செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் . வாய்தா போட்டு ஐந்து வருடம் காலத்தை கடத்த கூடாது . 

இப்படியெல்லாம் சட்டத்தின் கெடுபிடிகள் அதிக அளவில் இருந்தால் தான், மோசடி பேர்வழிகள்,ஊராட்சி மன்ற தேர்தல்களில் பங்கேற்காது ஓட்டம் பிடிப்பார்கள் .அவர்கள் நோக்கமே! பொது சொத்துக்களை பங்கு போட்டு கொள்ளையடிப்பது தான் . அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது கிராம பஞ்சாயத்து நலன் விரும்பிகளும், சமூக ஆர்வலர்களும், சமூகநலன் பத்திரிகையாளர்களும், மத்திய அரசுக்கு வைக்கின்ற முக்கிய கோரிக்கை .

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *