தலித் சமூக ஜாதி அரசியலில் திருமாவளவன், சைமன் போன்றோர் கட்சிகளில் ஜாதி, மதத்தை பற்றி பேசலாம். ஆனால், குறிப்பாக பிஜேபி ஜாதி பற்றி பேசக்கூடாது. மதத்தைப் பற்றி பேசக்கூடாது.அது ஏன்? இவர்கள் பேசினால் பிரிவினை வாதம்,மத வாதம். இவர்கள் பேசினால் அது மதச்சார்பின்மை. இது அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பேசும் அரசியல். இந்த பித்தலாட்ட அரசியலுக்கு, பித்தலாட்ட ஊடகங்கள் துணை போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் சுயநல அரசியல்.மேலும்,
பொதுநல அரசியலில் ஜாதி,மதம் பற்றி பேசியதும் இல்லை.அது எங்கே இருக்கிறது? என்றும் அப்போது தெரியவில்லை. ஆனால்,இப்போதுதான் அதிகமாக தெரிகிறது. நாட்டில் பிரிவினைவாத சக்திகளாக இந்தக் கூட்டம் பேசிக்கொண்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பின்னால் முட்டாள்கள், எப்படியும் பேசுபவன், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற சுயநல கூட்டம் போகுமே தவிர,அறிவாளி சிந்திப்பவன் போக மாட்டான்.மேலும்,
தமிழ்நாட்டில் பொது நலமில்லாத அரசியல், சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அதுதான் தமிழ் தேசியம், மோடியின் உடைய நாட்டு மக்களுக்கான செயற்பாட்டில் 0.5 சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனால், இவர்களெல்லாம் இங்கே மோடியை குறை சொல்வார்கள். தவிர,
மோடியின் செயல்பாட்டை பட்டியல் போட்டால், இவர்களுடைய நிலைமை 0.5 % தேருமா? இதுதான் இவர்களுடைய அரசியல்.அதாவது இவர்களுடைய செயல்பாட்டுக்கும், பேச்சுக்கும் சம்பந்தமே இருக்காது. இதுதான் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலைமை.
.இதற்கு என்ன காரணம்?என்றால் மக்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். உழைக்காமல் முன்னேற வேண்டும். அரசியல் கட்சிகள் பேசியே நாட்டின் அதிகாரத்தை பிடிக்க வேண்டும்.திமுக எல்லாம் தெரிந்தாற் போல் பேசி உழைப்பவனை முட்டாள் ஆக்குவது, படித்தவனை முட்டாள் ஆக்குவது, இதை கார்ப்பரேட் ஊடகங்கள் உண்மை என்று மக்களை ஏமாற்றுவது, இப்படிதான் அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் இன்றைய அரசியல் ஏமாற்றமாக மாறிவிட்டது.
அதற்கு காரணம்? இப்படி பட்ட அரசியல் கட்சிகளின் சுயநல அரசியல். மதச்சார்பின்மை, ஜாதி, மத அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசுவார்கள். ஆனால், அங்கே இருப்பது ஜாதி,மத, அரசியல் அத்தனையும் இவர்களுடைய பேச்சுக்கும், செயற்பாட்டுக்கும் சம்பந்தமே இருக்காது. மேலும்,தொலைக்காட்சிகளுடைய இந்த மைக் தூக்கி பிடிக்கிறது என்று இவர்களுடைய ஒரு கற்பனை.
அதே மைக்கில் இவர்களுடைய செயல்பாட்டை பற்றி பட்டியல் போட சொல்லுங்கள் பார்க்கலாம்?ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், அவர்களுடைய கட்சியினரப் பற்றியும், தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? ஒன்னும் இருக்காது. இதுதான் இவர்களுடைய சுயநல அரசியல்.ஆனால்,
அந்த காலத்தில் படிப்பறிவு இல்லாத வாழ்ந்த மக்களிடையே பொது நலம் இருந்தது. தற்போது பட்டங்களுக்கு குறைவில்லை. ஆனால், சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்கள் உழைத்து வாழ்ந்தார்கள்.தவிர, உழைப்பு எப்போது கேவலமாக பார்க்கப்பட்டதோ, அப்போது இந்த அரசியல் கட்சியினர் எல்லாம் வாயிலே தேனை தடவ ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான் அரசியல் என்பது தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. அதற்கு இவர்களுடைய சொத்து கணக்கே சாட்சி. மனசாட்சி இல்லாமல் பேசுவார்கள், மனசாட்சி இல்லாமல் வாழ்வார்கள்.இதுதான் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினர் நிலைமை .இந்த மக்கள் எப்படி இருக்கிறார்களோ, அதே போல் தான் அவர்களும் இருப்பார்கள்.
மேலும், இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இப்போது ஊரை ஏமாற்றி, சமூகத்தை ஏமாற்றி,எப்படி வாழ்வது என்று கருவிலே கற்றுக் கொண்டு வந்தார்களா? அல்லது கொள்ளையடிப்பது கொள்கை என்பது இவர்களுடைய அரசியலா?இதுதான் தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் நிலைமை .
இதில் கட்சிக்கு,கட்சி, கட்சியினருக்கு கட்சி வித்தியாசம் % வேறுபடும் . நாட்டில் காங்கிரஸ், திமுக,அதிமுக,விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, பிஜேபி, உள்ளிட்ட கட்சிகளின் சதவீதம், கட்சிக்கு, கட்சி வித்தியாசம் வேறுபடும், அவ்வளவுதான்.மேலும்,
நாட்டில் அரசியல் கட்சிகள் என்பது பொது நலமில்லாமல் தங்கள் சுய நலனுக்காக அதை ஆக்கிவிட்டார்கள். மேலும்,கட்சிக்கு அர்த்தம் தெரியாதவனெல்லாம் அரசியல்வாதி என்கிறார்கள். இப்படிப்பட்ட மிக கேவலமான அரசியலையும், அரசியல் கட்சிகளையும் அவர்களுடைய கட்சியினரையும் இந்த கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள், பாராட்டிக் கொண்டிருக்கிறது என்றால், அரசு கொடுக்கின்ற சலுகை,விளம்பரங்கள் மற்றும் இந்த அரசியல் கட்சிகளின் பணம் இதுதான் இவர்களை உயர்த்திப் பிடிக்கிறது. மேலும்,
தமிழ்நாட்டு மக்களே இதைவிட எந்த ஊடகத்திலும், இப்படி ஒரு உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு இதுவரை சொல்லவில்லை. புரிந்து கொள்வது உங்கள் புத்திசாலித்தனம். புரியாமல் வாழ்ந்தால் அது உங்கள் முட்டாள்தனம். மேலும், இந்த உண்மைகளை இளைய தலைமுறைகள் அவசியம் படிக்க வேண்டும். இப்படிப்பட்ட அவலங்களை பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மறைப்பது சமூகத்தில் குற்றங்களை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.
மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் இவர்களுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற ஒரு தவறான சட்டம் பத்திரிகை உலகில் இருக்கிறது . அதுதான் மக்கள் அதிகாரம் எதிர்க்கும் இந்த மோசடி சட்டம். அம்பேத்கர் கொண்டு வந்த சட்டங்கள் அவர் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அது பொருந்தும். ஆனால், இன்று அரசு அடையாள அட்டை வைத்திருந்தால் தான் நாங்கள் பத்திரிக்கை நல வாரியத்தில் கூட உறுப்பினராக சேர்ப்போம் என்று கார்ப்பரேட் திமுக அரசின் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த உண்மைகள் பொதுமக்கள், பத்திரிகை உலகம், நீதிமன்றம், மக்கள் மன்றம் ,அனைத்திலும் போய் சேர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
இது தவிர, பத்திரிகை உலகில் இது எவ்வளவு பெரிய பத்திரிக்கை சுதந்திரத்தின் போலியான ஊடக பித்தலாட்டம்? இதுதான் பத்திரிக்கை சுதந்திரத்தின் சுயநலம்.மேலும்,
தமிழ்நாட்டில் இளைய தலைமுறைகளும், மக்களும், அரசியலை படிக்காத வரைக்கும் இது போன்ற சுயநலவாதிகள்,அரசியல் கட்சி ஆரம்பித்து, மக்களை முட்டாளாக்கிக் கொண்டு,பேசிக் கொண்டிருப்பார்கள். எனவே,ஒரு தீவிரவாதி என்று நீதிமன்றத்தில் குற்றவாளியாக தண்டனை பெற்று கைது செய்து சிறை தண்டனை பெற்றவர், பாஷா அவருக்கு ராஜ மரியாதையா? தமிழ்நாட்டில் அரசியல் குற்றவாளிகளுக்கு பஞ்சமில்லை. அதனால் தான், தீவிரவாதிகள் கூட இவர்களுக்கு நல்லவர்களாக தெரிகிறார்கள். கொலை குற்றவாளிகள் கூட இவர்களுக்கு நல்லவர்களாக தெரிகிறார்கள். ரவுடிகள்,ஊழல்வாதிகள் இவர்களெல்லாம் நல்லவர்களாக தெரிகிறார்கள் .மேலும் , மக்கள் சுயநலமாக இருப்பதால்,
மக்களும் எப்படி சம்பாதித்தான்? என்பதை பார்க்க மாட்டார்கள். எப்படி அரசியலில் கொள்ளையடித்தான்? என்று பார்க்க மாட்டார்கள். மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாது. தெரிந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் .மேலும், மக்கள் இதையெல்லாம் ஒரு பெரிதாக கருது மாட்டார்கள் என்பதுதான் இவர்களுடைய பேச்சு. இந்த கொள்கை என்பது பேசுவதற்கு மட்டுமே தவிர, நடைமுறையில் யாரும் அதை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் தற்போதைய அரசியல்.
அதனால், இன்றைய அரசியல் கொள்கைக்காக அல்ல. அது கொள்ளைக்காக அரசியல் ஆகிவிட்டது.மேலும்,போலீஸ் பாதுகாப்பு,சீமான்,திருமாவளவன் போன்றவர்கள் எல்லாம் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதே இஸ்லாமிய சமூகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய இறுதிச் சடங்குகளில் இவர்கள் கலந்து கொண்டதுண்டா?
மேலும்,இவர்களூடைய பேச்சும், நடவடிக்கையும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார்களா? அல்லது ஆதரிக்கிறார்களா? அதுக்கு ஒரு பேட்டி, அதுக்கு ஒரு அரசியல் வசனம், எப்படி வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம். இங்கே,சினிமாவுக்கும், அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆகிவிட்டது .
அதனால், இதையெல்லாம் அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பேசிக் கொண்டிருக்கலாம். மேலும்,இவையெல்லாம் தெரியாத கார்ப்பரேட் பத்திரிகை, ஊடக செய்தியாளர்களிடம் இவர்கள் சொல்வதுதான் அங்கு வேதவாக்கு.அவர்களுக்கும்,இதைப் பற்றி எந்த கேள்வியும் கேட்க தெரியாது. இவர் அதை சொல்கிறார்,அவர் அதை சொல்கிறார்,அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?இந்த கேள்வி தான் கேட்பார்கள்.அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.மேலும்,
அதற்கேற்ற ஏதோ ஒரு அரசியல் வசனங்களை மைக்கில் பேசி விட்டு போக வேண்டியது தான் ,அதுதான் மைக் அரசியல். இந்த அரசியலை அரசியல் தெரிந்தவர்களிடம் சீமான், திருமாவளவன் காங்கிரஸ் கட்சியினர், மேலும், இது போன்ற சுயநல கட்சியினர் பேசுவது எடுபடவில்லை . மேலும்,இந்த மைக் நீட்டி கேட்டுக் கொண்டிருக்கும் செய்தியாளர்களுக்கு கூட இந்த கேள்வி கேட்கத் தெரியாது. ஏனென்றால்,
இந்த பத்திரிக்கை துறை குருடன் யானையை தடவுகின்ற கதைதான்.யாருக்கு? என்ன தெரியுமோ,அதை தான் ,அவரவர் பேசிக் கொண்டிருப்பார்கள். மேலும்,
ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்றால் ,அதற்கு உரிய தகுதி என்ன?. எப்படியும் பேசுவது அரசியல் கட்சி தலைவரின் தகுதி அல்ல . சீமான்,திருமாவளவனின் தகுதி என்ன? என்று இதன் மூலம் தெரிய வருகிறது. மேலும் சீமானுடைய பொதுநலம் என்ன என்பது எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிய படுத்துகிறோம். எனவே, அரசியலில்
சப்பை கட்டு கட்டுகின்ற பேச்சு, பேசிக்கொண்டு, அரசியல் வசனம் பேசிக்கொண்டு,அரசியல் தெரியாத அடி முட்டாள்கள் என்று எல்லோரையும் நினைக்கக் கூடாது. மேலும்,சினிமா பொழுதுபோக்கு, அரசியல் பொழுதுபோக்கு அல்ல. அதனால் ,அங்கே பேச வேண்டியது எல்லாம், இங்கே பேசக்கூடாது சீமான்.
சீமான் பேச்சின் தவறுக்கு இது ஒரு சப்பை கட்டு,கார்ப்பரேட் ஊடக பேட்டியா? அதனால், மக்களுக்கு அவசியம் அரசியல் விழிப்புணர்வு தேவை.மேலும்,
இவ்வளவு கேவலமான அரசியல் எப்போது உங்களுக்குப் புரிகிறதோ, அப்போதுதான் தகுதியானவர்கள்,தகுதியான அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ்நாட்டுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது உறுதி.மேலும், கலிகாலத்தின் அரசியல்! அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் உண்மைகள் கசக்கும். பொய்கள் இனிக்கும் .மேலும்,
அடாவடி பேர்வழிகளுக்கும்,போக்கிரிகளுக்கும் அரசியலில் கொடுக்கின்ற மரியாதை,மதிப்பு, அதே அரசியலில் நல்லவர்களுக்கும், உங்களுக்காக போராடுபவர்களுக்கும், உங்களுக்காக உண்மையை எழுதும் பத்திரிகைகளுக்கும் ஏன்? அந்த மதிப்பு,,மரியாதை கொடுப்பதில்லை? ஒரு பஞ்சாயத்து தலைவராக கூட வர முடியவில்லை ஏன்? மக்களின் சுயநலம், தனக்கு இவரால் என்ன கிடைக்கும் ? இதுதான் மக்களுடைய சுயநலம். சுயநலத்தில் ஒருவருடைய நல்லதும் தெரியாது.கெட்டதும் தெரியாது. இப்படிப்பட்ட சுயநல அரசியலால் , சுயநலக் கூட்டம் பாதிக்கப்படும்போது, அல்லது வேதனைப்படும்போதுதான், அந்த உண்மையான வலிகள் உணர்வீர்கள்.
ஆசிரியர்.