
பங்களாதேஷ் இந்துக்கள் அந்த நாட்டில் முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் நாசப்படுத்தப்படுகிறது. அங்கே அவர்கள் அடிமையாக்கப்படுகிறார்கள். இது எல்லாம் உண்மை.
அதற்கு என்ன நடவடிக்கை?மத்திய அரசு எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டும். இங்கே மாநில அரசு எடுக்க வேண்டியது எந்த ஒரு நடவடிக்கையும் அதிலே இல்லை. மேலும், மத்தியில் ஆட்சி, அதிகாரம் எல்லாம் பிஜேபி கையில் இருக்கிறது. நாட்டின் வெளிவுறவுக் கொள்கையில் தமிழக அரசு தலையிட முடியாது. இது எல்லாம் அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். மேலும்,
இவர்கள் இங்கே எதற்காக?இந்த கைது நாடகம்? இப்படிப்பட்ட இந்த ட்ராமா அரசியல் தான் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக செய்து வருகிறது. அதே அரசியலை தான் பிஜேபி தமிழ்நாட்டில் இன்று செய்து உள்ளது. பேசுவதை பார்த்தால் எல்லாம் தெரிந்த ஞானி போல் பேசுகிறார்கள்.செயல்பாடு ஒன்றும் இல்லை. அதிமுக,,திமுகவின் காபி தான் இவர்கள் பிரிண்ட் போடுகிறார்கள். அதிகாரம் மத்திய அரசு உங்கள் கையில் இருக்கிறது.நீங்கள் சொல்ல வேண்டியது. பங்களாதேஷ் இந்துக்களுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மோடிக்கு தமிழக பிஜேபி கோரிக்கை வைக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு அரசியல் தெரியாத மக்களை ஷோ காட்டும் கார்ப்பரேட் மீடியா வித்தைகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் செய்து அரசியல் கட்சிகள் அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றக்கூடாது.இதனால், எந்த நன்மையும் இல்லை.

இப்படிப்பட்ட அரசியலை தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சி செய்தாலும்,கார்ப்பரேட் மீடியாக்களில் விளம்பரங்களை தேடிக்கொண்டாலும், அதனால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. இதை தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்களும்,பத்திரிகைகளும் தமிழக மக்களிடம் ஏமாற்று அரசியலை எந்த கட்சி செய்தாலும்,அதை எதிர்த்து குரல் கொடுப்போம். தமிழக மக்கள் இப்படிப்பட்ட போலி அரசியல் தேவையற்ற ஒன்று. அரசியல் கட்சியினரை வளமாக்கிக் கொள்ள இவர்கள் தேடிக் கொள்ளும் விளம்பரம். இந்த விளம்பர அரசியலில் பயனடைபவர்கள் பொதுமக்கள் அல்ல.
எனவே,இப்படிப்பட்ட இந்த போலிய அரசியல் தான் நாட்டில் ஊழலை உருவாக்குகிறது. மேலும், இந்த கார்ப்பரேட் மீடியா ஷோ காட்டும் அரசியல் தான் அரசியல் தெரியாத மக்களை ஏமாளி ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஷோ காட்டும் அரசியல் தான் ஊழல்வாதிகள் திரும்பத்,திரும்ப கொள்ளையடித்துக் கொண்டே இருக்க அவர்களை நியாயப்படுத்துகிறது.
அதனால்,இது பெரிய பத்திரிக்கை,பெரிய தொலைக்காட்சி, இது பெரிய ஆங்கில பத்திரிக்கை என்று அந்த ஏமாற்று பிம்பத்தில் இருந்து வெளிவர வேண்டும்.. உண்மை எந்த பத்திரிக்கையாக இருந்தாலும்,சமூக ஊடகமாக இருந்தாலும்,அது உண்மைதான் .அதனால், தமிழக மக்கள் கார்ப்பரேட் பத்திரிகை மீடியாக்கள் வியாபார அரசியலையும் விளம்பர அரசியலையும் செய்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு துணை போவதை உண்மையான அரசியல் என்று நம்பி ஏமாறாதீர்கள் . உண்மையை சிந்தியுங்கள். அதுதான் தமிழக மக்கள் ஏமாறும் அரசியல்.
இதிலிருந்து வெளிவர வேண்டும் . அப்போதுதான் இந்த அரசியல் கட்சிகள் சமூக நலனை நோக்கி திரும்பிப் பார்க்கும் .மேலும்,தமிழக மக்கள் நலனில் என்றும்! சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.