தமிழ்நாட்டில் மொழி போராட்டத்தில் அரசியல் வார்த்தை போரா? ( Or) போராட்டமா? – பாஜக & திமுக. ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பிப்ரவரி 22, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் திமுக 50 ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்களிடையே நடத்தியது. அது வெற்றி பெற்றது. அதே போராட்டத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகும், மாணவர்களிடையே, மக்களிடையே இந்த போராட்டத்தை திமுக முன்வைக்கிறது. 

இங்கே 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் மனநிலை என்ன? இப்போது வாழ்கின்ற மக்களின் மனநிலை என்ன? ஒரே மாதிரி இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தவர்களின் மனநிலை என்ன? இப்போது அரசியலுக்கு வந்திருப்பவர்களின் மனநிலை என்ன? இதுக்கு ரெண்டு பேருக்கும் அதாவது அண்ணாமலைக்கும், உதயநிதிக்கும் புரியாமல் தான் இந்த வார்த்தைக் போர் போய்க்கொண்டிருக்கிறது.மேலும்,

இதைவிட ஒரு கேவலம், இணையத்தில் கோ பேக் மோடி என்று ஹேஷ்டாக் செய்வது, பதிலுக்கு அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின், ஹேஷ்டாக் செய்வது, இது என்ன சினிமா அரசியலா? தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு முட்டாள்களா?தவிர,

உதயநிதி மோடியை அவ்வளவு கேவலமாக பேசுவது ஏற்க முடியாத ஒன்று. கோ பேக் மோடி. அவர் நாட்டின் பிரதமர். நீங்கள் ஒரு மாநிலத்தின் துணை முதல்வர். அவரை எப்படி இங்கே கோ பேக் மோடி என்று சொல்வீர்கள்? சரி அப்படியே வைத்துக் கொள்வோம். நீங்கள் டெல்லியில் அடித்து வைக்க கூடாது, ஆந்திராவில் கால் எடுத்து வைக்கக் கூடாது, குஜராத்தில் வைக்க கூடாது, எந்த மாநிலத்திலும் வைக்கக்கூடாது என்று சொல்லலாமா? அரசியலில் மிகப்பெரிய ஒரு பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் நிதானித்துப் பேச வேண்டும். சின்ன பிள்ளைத்தனமாக அதாவது நம்ம வடிவேலு காமெடி போல பேசுவது தவறான ஒன்று.

 அது ஒரு பக்கம் இருக்கட்டும், அடுத்தது அண்ணாமலை ஒரு விஷயத்தை தெளிவாக சொல்கிறார் .அது உண்மையான விஷயம்..அது என்ன என்றால் ,நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, இந்த நிலை வருவதற்கு காரணம் எனக்கு நான் படித்த படிப்பு. அது அவருடைய திறமையை உருவாக்குவதற்கு, இது முக்கிய ஒரு காரணம். அதை மறுக்க முடியாது. ஐபிஎஸ் அதிகாரியான அதன் பிறகு, அப்போது கூட இவர் யார்? என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது.

 இருப்பினும், இவர் திறமையை பார்த்து, பிஜேபி மாநில தலைவர் என்ற பொறுப்பு அண்ணாமலைக்கு கொடுத்த பிறகுதான், இன்று தமிழ்நாட்டில் பட்டித் தொட்டி எங்கும் அண்ணாமலை யார்? என்று தெரிகிறது .அதற்கு முக்கிய காரணம், அவருக்கு இந்தி மொழி இந்தி தெரிந்ததுதான், செல்வாக்கு பிஜேபி யில் ஏற்பட்டுள்ளது. அதை மறுக்க முடியாது. ஒரு மொழி கற்பது மாணவர்களின் திறமை. திறமையுள்ளவன் படித்துக் கொள்கிறான். திறமையற்றவன் அங்கே கல்வியில் பெயிலாகி தோற்றுப் போகிறான். யார் திறமையுள்ளவனோ, அவன் எத்தனை மொழி வேண்டுமானாலும், படித்துக் கொள்கிறான். அது அவனுடைய திறமை. அதை யாரும் மறுக்க முடியாது. 

அதுபோல், இங்கே இந்தி மட்டும்தான் நீங்க எதிர்க்கிறீர்கள். உருது மொழி படிக்கிறார்களே, அதை ஏன் எதிர்க்க வில்லை? அதேபோல் தெலுங்கு மொழி சில பள்ளிகளில் இருக்கிறது. அதை ஏன் எதிர்க்கவில்லை? அதைவிட ஒரு கொடுமை, இங்கு வேலைக்கு ஆள் இல்லை. 100 நாள் வேலை விவசாயத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. இங்கே வடமாநில தொழிலாளர்கள் தான் விவசாயத்திற்க்கும், கட்டிட வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்களை வேலை வாங்குவாவது வருங்கால இளைய தலைமுறைகள் இந்தி கற்க வேண்டியது அவசியம் .ஏனென்றால் ஒரு மொழி வாழ்க்கைக்கு அவசியமானது. ஆனால், இவர்களுடைய கணக்கு என்னவென்றால்? இங்கே மக்கள் இந்தி தெரிந்து கொண்டால், நாம் அரசியல் செய்ய முடியாது. பிஜேபி காலூன்றி விடும். இதுதான் இரண்டு பேருக்கும் இடையில் உள்ள ஒரு அரசியல். இதற்கு தான் இரண்டு பேரும் வார்த்தையில் போரிட்டுக் கொள்கிறார்கள். மக்களுக்கு எது தேவை? எது தேவையற்றது? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 

இங்கே மும்மொழிக் கல்வி கொள்கை கொண்டு வருவதால், இவர்களுக்கு அரசியல் பாதிப்பு என்று நினைக்கிறார்கள். மேலும்,. நம்முடைய ஆட்சிக்கு எதிரானதாக பிற்காலத்தில் அமைந்து விடும் என்பதுதான் திமுகவின் கணக்கு. .ஆனால், இந்த இரண்டு பேரின் கணக்கு ஒரு புறம் இருந்தாலும், வருங்காலத்தில் இந்த படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு மிக, மிக, குறைந்து கொண்டே போகிறது. இப்போது பொறியாளர் பட்டம் படித்தவர்களுக்கு மாதம் Rs :15,000 கொடுக்கிறார்கள்,Rs: 12000 கொடுக்கிறார்கள் .

இந்த சம்பளத்தை வைத்து அவர்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள்? அதே போல், பிஏ, பி காம், எம் ஏ, எம் காம் போன்ற பட்டதாரிகளுக்கு எல்லாமே 15 ஆயிரத்துக்குள் தான் சம்பளம். இதை வைத்து அவர்கள் எப்படி குடும்பம் நடத்த முடியும்? மேலும் ,மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டாவது ஒரு மொழி தெரிந்து கொண்டால், அவர்கள் தமிழ்நாட்டிலே இல்லை என்றாலும், வேறு மாநில தலாவது சென்று பிழைத்துக் கொள்ள முடியும்.

 அது ஒன்று ,அடுத்தது மத்திய அரசு பணிகளில் ,வங்கி, அஞ்சல் துறை,ரயில்வே,ராணுவம் போன்ற பணிகளில் சேர இந்தி அவசியம் தேவைப்படுகிறது. ஆக கூடி குறிப்பாக சொல்லப் போனால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு இந்தி நிச்சயமாக தேவை.

இதனால்,தமிழக அரசு ,தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மும்மொழிக் கல்விக் கொள்கையை கொண்டு வருவது நல்லது. உங்களுடைய அரசியல் லாபங்களுக்காக இந்த மாணவர்களின் எதிர்கால நலனுக்கு, அது பாதிப்பாக இருக்கக் கூடாது.இது தவிர, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு தெரிவித்துள்ளார் .

இருப்பினும், தொடர்ந்து இவர்கள் கல்வியை அரசியலாக்கி, மாணவர்களின் எதிர்கால நலனுக்கு திமுக தொடர்ந்து எதிராக இருந்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும் .உண்மை எது? என்பதை நீங்கள் தான் புரிந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்து இப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *